வெலிகம ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் ஆரம்பம்

வெலிகம ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (19) இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்து ரவைகள், மற்றும் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மதுபோதையுடன் சிலர் இருந்ததுடன்,வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

Read More

ஐதேக ஒருபோதும் நாட்டை காட்டிக் கொடுக்காது – கபீர்

பௌத்த மதத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை இரத்துச் செய்யவோ, நாட்டை பிளவுப்படுத்தவோ ஐக்கிய தேசியக்கட்சி இடமளிக்காது என அந்த கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தம் அவர் கண்டி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்கு இன்று விஜயம் செய்து, மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டின் ஒருமைப்பாடு மாத்திரமல்ல நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும், ஐக்கிய தேசியக்கட்சியின் பல தலைவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இதனால், ஐக்கிய தேசியக்கட்சியினர் அனைவரும் எந்த சந்தர்ப்பத்திலும் இதே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மரணதண்டனை கைதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதாயின், அடையாளங் காணப்பட்ட கைதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு 3 அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, சட்டமா அதிபர், நீதி அமைச்சர் மற்றும் மரணதண்டனை உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி ஆகியோரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கைகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். நீதியமைச்சரின் அறிக்கை, அமைச்சின் விசேட குழுவினரால் தயாரிக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ள அதேநேரம், குறித்த குழுவினர், கைதிகளின் கருத்துக்களையும் கேட்டறிதல் அவசியமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. கைதிகளுக்கு மரணதண்டனையைப் பிறப்பித்த நீதிபதியும் தமது உத்தரவு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சட்டமா அதிபரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபரின் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார். குறித்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இறுதி…

Read More

50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது

ஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லொறி மற்றும் காரில் எத்தனோலைக் கொண்டுசென்ற வேளையிலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, பதுக்கி வைத்திருந்த மேலும் எத்தனோல் பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனடிப்படையில், இதுவரை 50 எத்தனோல் பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கலால்வரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் குறித்த அறிக்கை

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில், இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை அரசாங்கம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு, குற்றச்செயல்கள் இடம்பெற்ற நீதிமன்றங்களிலிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 மாதங்களில் 350 துப்பாக்கிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல துப்பாக்கிகளிற்கு அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட வௌிநாட்டுத் துப்பாக்கிகளின் இலக்கங்களை அடையாளங் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். வௌிநாட்டுத் துப்பாக்கிகளில் பொறிக்கப்பட்டுள்ள இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ருவன் குணசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கபிஸ்கட்கள் மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 95 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கபிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நிலத்தில் கிடந்த சிகரெட் பக்கற்றுகளில் குறித்த தங்கபிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பிரதி சுங்கப் பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார். 28 தங்கபிஸ்கட்டுகள் இவ்வாறு சிகரெட் பக்கற்றுகளில் காணப்பட்டுள்ளன. இவை 3 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடயவை எனவும் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார். தங்கபிஸ்கட்டுக்கள் அடங்கிய சிகரட் பக்கற்றுகள், குறித்த பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

Read More

இந்திய அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

இந்தியாவின் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும் எதிராக 325 வாக்குகளும் கிடைத்துள்ளன. மொத்தமாக 451 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்களித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனவும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகவும் தெரிவித்து மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, மத்திய அரசுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆகும். தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியன ஆதரவளித்தன. நேற்று (20) காலை முதல் விவாதம் நடைபெற்று வந்ததுடன், நேற்று இரவு 9 மணியளவிலேயே…

Read More

பதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ

பதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின் இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையின் வெலிமட, எல்ல, ஹல்துமுல்ல மற்றும் கந்தகெட்டிய ஆகிய பகுதிகளில் தீ பரவியுள்ளமை பதிவாகியுள்ளதாக நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஈ.எல.எம். உதயகுமார தெரிவித்துள்ளார். நிலவும் வரட்சியுடனான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீயினைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More

அரசியலமைப்பிற்கு பங்களிப்பு வழங்கும் பிரதிநிதிகளாக செயற்படுவது யாருக்காக?

புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தினை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சமர்ப்பித்த ஆவணம் வழிநடத்தல் குழுவால் நிராகரிக்கப்பட்டது. கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரது அரசியல் நோக்கத்திற்காக இந்த செயற்பாடுகளை மேற்கொள்வதாக பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பு நேற்று (19) குற்றஞ்சாட்டியது. இது தொடர்பில் அவர்கள் இருவரும் இன்று பதிலளித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது, இந்த ஆவணத்தில் யாரும் கையழுத்திடவில்லை என்பதை நான் கட்டாயமாகக் கூறவேண்டும். 6 நிபுணர்கள் மின்னஞ்சலூடாக இந்த ஆவணத்தினை வழங்குவதற்கு இணங்கினர். மற்றைய இருவரும் ஆவணத்தினை வழங்குவதற்கு இணங்கினர். சுரேன் பெர்னாண்டோ, கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் நான் உள்ளிட்டோர் இந்த ஆவணத்தினை தயாரித்ததாக கதை பரப்பப்படுகின்றது. இது முழுப் பொய். இந்த பிரச்சினை எழுந்தபோது நான் ஆவணத்தினை பார்த்தேன். நான் அந்த ஆவணத்தினைக் கொண்டுவந்து அதன் பின்னர்தான் நிபணர்கள்…

Read More

ஆடிவேல் சக்திவேல் பவனி கொட்டகலை பிள்ளையார் கோவிலை சென்றடைந்தது

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலைத் தாங்கிய ஆடிவேல் சக்திவேல் பவனி கொட்டகலை பிள்ளையார் கோவிலை இன்று சென்றடைந்தது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தினால் வேல் பவனி இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (19) ஆரம்பமான சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனியின் இரண்டாம் நாள் பயணம் வவுனியா கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜைகளைத் தொடர்ந்து ஆரம்பமானது. பூஜைகளைத் தொடர்ந்து ஆடிவேல் சக்திவேல் பவனிக்காக சிறப்புற வடிவமைக்கப்பட்ட அலங்காரத் தேரில் வேல் பெருமான் எழுந்தருள, வேல் பவனிஆரம்பமானது. வவுனியா கந்தசுவாமி கோவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்த வேல் பவனி மதவாச்சியை சென்றடைந்த போது, அங்கு கூடியிருந்த மக்கள் வேல் பெருமானை தரிசித்து காணிக்கைகளையும் செலுத்தினர். வேல் பெருமானை தரிசிக்கும் வாய்ப்பு அனுராதபுரம் நகர வாழ் மக்களுக்கும் கிட்டியது. தம்புள்ளை ஊடாக பயணித்த வேல் பவனி மாத்தளை…

Read More