தொடரை தீர்மானிக்கும் இறுதி இருபதுக்கு-20 போட்டி இன்று! : வெற்றி யாருக்கு?

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியை பொறுத்தவரையில் பங்களாதேஷ் அணிக்கு மிக முக்கிய போட்டியாக அமைந்துள்ளது. பங்களாதேஷ் அணித்தலைவர் மொர்ட்டஷா  விளையாடும் இறுதி இருபதுக்கு-20 போட்டியாக அமைந்துள்ளது. இதனால் இந்த போட்டியில் வெற்றிபெற்று மொர்ட்டஷாவுக்கு சிறப்பான பிரியாவடை வழங்க பங்களாதேஷ் அணி எதிர்பார்த்துள்ளது. இலங்கை அணியை பொறுத்தவரையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விட இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. […]

தொடரை பங்களாதேஷ் கைப்பற்றும் : ஹதுருசிங்க நம்பிக்கை

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க  தெரிவித்துள்ளார். “அணி வீரர்களின் செயற்பாடு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. இலங்கை அணிக்கு எதிராக நாம் சிறந்த முறையில் செயற்பட்டுவருகின்றோம். இலங்கை அணி சொந்த மண்ணில் மிகவும் சிறப்பாக விளையாடக்கூடியது. எனினும் தற்போது நாம் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றோம். தொடரை கைப்பற்றுவதற்கு  இதுவே சரியான தருணம். கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதனையடுத்து அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிரணிக்கு கடும் சவாலை […]

இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் போட்டி : சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை (25) நடைபெற்றது. இந்த போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரை இந்திய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சூதாட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்புப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய குறித்த கைதுநடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கையை அறிந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 19 […]

நாளைய போட்டியில் விளையாடவிருந்த இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை : ஏமாற்றத்தில் ரசிகர்கள்

இலங்கை அணியை பொறுத்தவரையில் நாளைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என எதிர்பார்த்த, நிரோஷன் டிக்வெல்ல விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் டிக்வெல்ல நாளைய போட்டியில் மட்டுமல்லாது, பங்களாதேஷ் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத நிலைய ஏற்படாலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அணியை பொறுத்தவரையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி கடந்த சில நாட்களாக பிரகாசித்து  வந்த டிக்வெல்ல உபாதையடைந்துள்ளமை இலங்கை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை […]

இலங்கை – பங்களாதேஷ் – இந்தியா அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ணத் தொடர்

இலங்கை,  இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகள் மோதும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் வருடம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை  முன்னிட்டு “சுதத்திரக்கிண்ணம் “ என்ற பெயரில் எதிர்வரும்  2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  15 ஆம் திகதியிலிருந்து  30 ஆம் திகதி வரை கிரிக்கெட்த் தொடர் இடம்பெறவுள்ளது. பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் […]

பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள முன்னணி கிரிக்கெட் வீரர் (காணொளி இணைப்பு)

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான மார்லன் சாமியல்ஸ் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய விரும்புவதாக இணையத்தளத்தில் காணொளி வழியாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.சி.சி. மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்வது அவசியம். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்புகின்றனர். பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும். நான் சாகும்வரை இதற்கான தொடர்ந்து ஊக்குவிக்கும் பணியில் ஈடுபடுவேன். பாக்கிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டிக்கு சிறந்த  பாதுகாப்பு வழங்கிய […]

முன்னாள் வீரர்களை பயன்படுத்தி தங்களுடைய சேறுகளை மறைக்க முயற்சிக்கிறார்கள் : அர்ஜுன ரணதுங்க

தற்­போ­தைய கிரிக்கெட் நிர்­வா­கத்தில் இணை­வ­தற்கு தாம் தயா­ரில்­லை­யென முன்னாள் இலங்கைக் கிரிக்கெட் அணித் தலை­வரும் துறை­மு­கங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்­ச­ரு­மான அர்­ஜூன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க கிரிக்கெட் நிர்­வா­கத்தில் இணைந்­து­கொள்ள வேண்­டு­மென இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் முகா­மை­யாளர் அசங்க குரு­சிங்க முன்­வைத்த கோரிக்­கைக்கு முதன் முறை­யாக பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் இக்­க­ருத்­தினை வெளி­யிட்டார். உடு­கம்­ப­லவில் நடை­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் கருத்து தெரி­வித்த போதே மேற்­கண்­ட­வாறு அர்­ஜூன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட் நிர்­வா­கத்தில் […]

இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் அதிரடி மாற்றம்? உற்சாகத்தில் கும்ளே!

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் அதிரடி மாற்றம் ஏற்படவுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அனில் கும்ளேவை இந்திய அணியின் இயக்குனராக நியமிக்க நிர்வாகிகள் குழு தீர்மானித்துள்ளது. அதனால், இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌயாகியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ளே திகழும் கடைசி தொடர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் ஆகும். எதிர்வரும் ஏப்ரல் 14ம் திகதி இந்திய அணியின் இயக்குனராக அவர் பொறுப்பேற்க்கவுள்ளதாக […]

விராட்கோஹ்லியை அசிங்கப்படுத்திய அவுஸ்திரேலியா ஊடகம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லியை விலங்குகளுடன் ஒப்பிட்ட அவுஸ்திரேலியா ஊடகத்தின் செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித், டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த டிரஸிங் ரூமில் இருந்த […]

விளையாட்டு அமைச்சிடம் வருடாந்த நிதியறிக்கையை சமர்ப்பித்தது இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட அறிக்கையை விளையாட்டு அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது. இந் நிகழ்வு இன்று விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைற் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட அறிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளித்தார்.