FCID ஐ எதிர்க்கும் அமைச்சர் ராஜித்த

பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு (FCID) தனது கடமையை சரிவர செய்யவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பியகம பிரதேசத்தில் நேற்று (15) நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

”பாரிய நிதி மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. சிறிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தப் பிரிவு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் தற்போது அரச சேவையும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.” என்று சுட்டிக்காட்டினார்.

”FCID பெரிய திருடர்களை பிடிக்கவே முயற்சித்தது. எனினும், சிறு குற்றவாளிகளே பிடிபட்டனர். அரச ஊழியர்களின் குற்றங்கள் குறித்தும் விசாரிக்குமாறு கேட்டிருந்தோம். பாரிய குற்றங்கள் குறித்து விசாரிக்கவே இதனை ஸ்தாபித்தோம். எனினும், அவர்கள் 1000, 500 ரூபா களவாடியவர்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதனால் அரச சேவையில் இருந்தவர்கள் விரக்தியடைந்தனர். குறிப்பொன்றை எடுப்பதற்கும் 10 தடவைகள் சிந்திக்கின்றனர். காரணம் அவர்களுக்கு FCID நினைவுக்கு வருகிறது.” என்று தெரிவித்தார்.

Related posts

Leave a Comment