ரம்யா நம்பீசனின் படத்திற்கு இடைக்காலத் தடை

ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாகவும் கவின் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். ஷிவகுமார் அரவிந்த் இயக்கியுள்ள இந்த படம் எதிர்வரும் 27 ஆம் திகதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தை எதிர்த்து திரைப்பட விநியோகஸ்தர் மலேசியா பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில் பின்வருமாறு கூறியுள்ளார். நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து வாங்கினேன். இதற்காக ரூ.8 இலட்சம் முன்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் போட்டேன். அதன் பிறகும் பல கட்டங்களாக பணம் கொடுத்தேன். மொத்தம் ரூ.25,20,000 வழங்கி இருக்கிறேன். ஆனால் திட்டமிட்ட திகதியில் படம் வெளியாகவில்லை.…

Read More

அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபா மோசடி செய்த பெண் கைது

அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பலரிடம் சுமார் ஒரு கோடி ரூபா நிதி மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கமைய பத்தரமுல்லை – சுஹுருபாயவிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, குறித்த பெண்ணிடமிருந்து 22,50,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் பனாகொடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More

இத்தாலி, ஜோர்ஜியா விஜயத்தை முடித்துக்கொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

இத்தாலி மற்றும் ஜோர்ஜியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் நாடு திரும்பினார். ரோமில் இடம்பெற்ற 6 ஆவது உலக வன வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு மற்றும் வன பாதுகாப்பு சபையின் 24 ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இத்தாலிக்கு சென்றிருந்தார். ஜோர்ஜியாவில் இடம்பெற்ற திறந்த அரசாங்க பங்குடைமை தலைவர்கள் சந்திப்பில் 75 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி, அரச தலைவர்கள் மற்றும் சபாநாயகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். திறந்த அரசாங்க பங்குடைமை கொள்கைகளை மேம்படுத்தும் நோக்கில், அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது. 6 ஆவது உலக வன வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற மாநாடு மற்றும் உலக வன பாதுகாப்புக் குழுவின் 24 ஆவது கூட்டத்தொடரில்…

Read More

யூத நாடாக இஸ்ரேல் பிரகடனம்

இஸ்ரேலை யூத நாடாகப் பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று (19) நிறைவேற்றப்பட்டது. 1948, மே 14 ஆம் திகதி இஸ்ரேல் நாடு உருவானது. அப்போது வெளியிடப்பட்ட பிரகடனத்தில், “மதம், இனம், பாலின பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமூக, அரசியல் உரிமைகள் வழங்கப்படும். மத, மொழி சுதந்திரம் பாதுகாக்கப் படும்” என அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலில் 85.5 இலட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 74.5 சதவீதம் பேர் யூதர்கள். 20.9 சதவீதம் பேர் பாலஸ்தீனர்கள். இதர இனங்களைச் சேர்ந்த 4.6 சதவீதம் பேரும் அந்நாட்டில் வசிக்கின்றனர். மத ரீதியாக 74.7 சதவீத யூதர்கள், 17.7 சதவீத முஸ்லிம்கள், 2 சதவீத கிறிஸ்தவர்கள் உள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக 62…

Read More

மாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்விற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு சபாநாயகரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 6 பேர் கொண்ட குழுவொன்றே நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கே.தவலிங்கம் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இன்று நடைபெற்றது. தற்போது நாட்டில் பேசுபொருளாக உருவாகியுள்ள மாகாண சபை தேர்தல் தொடர்பில் இந்த கூட்டம்…

Read More