விராட்கோஹ்லியை அசிங்கப்படுத்திய அவுஸ்திரேலியா ஊடகம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லியை விலங்குகளுடன் ஒப்பிட்ட அவுஸ்திரேலியா ஊடகத்தின் செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித், டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த டிரஸிங் ரூமில் இருந்த […]

விளையாட்டு அமைச்சிடம் வருடாந்த நிதியறிக்கையை சமர்ப்பித்தது இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட அறிக்கையை விளையாட்டு அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது. இந் நிகழ்வு இன்று விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைற் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட அறிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளித்தார்.