18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் கோலாகலமாக ஆரம்பம்

18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. ஆசிய விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண வைபவம் கண்கவரும் விதத்தில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஆசிய விளையாட்டு விழா நடத்தப்பட்டு வருகின்றது. இம்முறை ஜெலோரா கன் கர்னோ விளையாட்டரங்கில் நடைபெற்ற அங்குரார்ப்பண வைபவம் கண்களுக்கு விருந்தளித்தது. இந்தோனேஷியாவின் பாரம்பரியத்தை உலகுக்கு உணர்த்தும் கலாசார நடனங்கள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின. ஆசியாவின் பலம் என்பதே இந்த முறை விளையாட்டு விழாவின் தொனிப்பொருளாகும். விளையாட்டு விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 10,000-ற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பஙகேற்பதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து இந்த முறை 177 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற பளு தூக்கல் வீராங்கனையான ஹங்ஷனி கோமஸ் அங்குரார்ப்பண வைபவத்தில் இலங்கையின்…

Read More

செரீனா வில்லியம்ஸூக்கு வெற்றி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 1-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் லூகாஸ் போய்லியிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் ´நம்பர் வன்´ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் அவுஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Read More

2nd ODI – SLvSA: தென்னாபிரிக்கா 4 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி தொடரில் 2- -0 என முன்னிலையில் உள்ளது. 245 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய அவ்வணி 6 விக்கெட்டுகளை இழந்து 42.5 பந்து வீச்சுக்களில்246 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.அவ்வணியின் குயின்டன் டி கொக் 87 ஓட்டங்களை பெற்றார்.பந்து வீச்சில் இலங்கை சார்பாக 60 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.போட்டியின் ஆட்ட நாயகனாக குயின்டன் டி கொக் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மெத்திவ்ஸ் மற்றும் டிக்வெல்ல ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. தம்புள்ளை ரங்கிரி…

Read More

முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதனடுப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 194 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. போட்டியில் தென்னாபிரிக்க அணி சார்ப்பில் டுமினி ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் டூ பெலஸிஸ் மற்றும் டீ கெக் ஆகியோர் தலா 47 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். இலங்கை…

Read More

போட்டிப் பணத்தில் 25% நன்கொடையாக வழங்கவுள்ள இலங்கை அணி

இன்றைய இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போட்டிப்பணத்தில் 25 வீதத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார ரீதியில் பின்னடைவில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வாதார உதவிக்காக அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பிற்கு இந்த நன்கொடையை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

Read More

2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்ஸ் நகரில் நேற்று (28) நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க துடுப்பாட்டக்காரர்களாக தமிம் இக்பாலும், அனமுல் ஹக்கும் களமிறங்கினர். அனமுல் 10 ஓட்டங்களிலும், ஷகிப் அல் ஹசன் 37 ஓட்டங்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக துடுப்பெடுத்தாடிய தமிம் இக்பால் சதமடித்து அசத்தினார். அவர் 103 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய மகமதுல்லா 67 ஓட்டங்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், பங்களாதேஷ் அணி…

Read More

இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க

இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சரித் சேனநாயக்க இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய அணி முகாமையாளரின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணிக்காக பணிபுரியவுள்ள சேனநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத்துடன் தனது பணிகளை நிறைவு செய்யவுள்ளார். கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான சேனநாயக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக 2008 ஆம் ஆண்டில் முதல் தடவையாக பணிபுரிந்திருந்ததுடன், தொடர்ந்து இன்னும் இரண்டு தடவைகள் முகாமையாளராக கடமையாற்றியிருந்தார். இதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு இலங்கை அணியின் முகாமையாளராக மீண்டும் பொறுப்பேற்ற சேனநாயக்க இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்…

Read More

27ஆவது அகில இலங்கை மைலோ வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் கண்டியில்

நெஸ்லே லங்கா , இலங்கை பாடசாலைகள் வலைப்பந்து சங்கம் என்பவை இணைந்து நடாத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான 27ஆவது அகில இலங்கை மைலோ வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை கண்டி போகம்பரை மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இலங்கையின் எதிர்கால தேசிய வலைப்பந்து வீராங்கனைகளை உருவாக்கும் முயற்சியில் கைகோர்த்துள்ள நெஸ்லே லங்கா நிறுவனம் மற்றும் இலங்கை பாடசாலைகள் வலைப்பந்து சங்கம் ஆகியவையின் இணைப்பில் நடைபெறும் இந்த போட்டித் தொடரில் சுமார் 4000 பாடசாலை மாணவர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 14 வயதின் கீழ், 16 வயதின் கீழ் மற்றும் 18 வயதின் கீழ் என்ற மூன்று வயதுப் பிரிவுகளுக்கிடையில் போட்டிகள் நடைபெறவுள்ளன. அகில இலங்கை ரீதியில் 480 பாடசாலைகள் பங்கேற்கும் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த போட்டித் தொடரில், ஏ மற்றும்…

Read More

65 மில்லியன் பவுண்களுக்கு வில்லியனை கொடுக்க மறுக்கும் செல்சி

பாசிலோனா அணி 65 மில்லியன் பவுண்களுக்கு வில்லியனை வாங்க விருப்பம் தெரிவித்ததை செல்சி அணி நிராகரித்து விட்டது பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி மிட்பீல்டர் வில்லியன். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ‘லா லிகா’ புகழ் பாசிலோனா அணி வாங்க விரும்புகிறது. இதற்காக இரண்டு முறை செல்சிக்கு தூதுவிட்டது. ஆனால் செல்சி அதற்கு அசையவில்லை. மூன்றாவது முறையாக 65 மில்லியன் பவுண்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியது. புதிதாக செல்சி அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மவுரிசியோ சர்ரிவிற்கு வில்லியனை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லை. இதனால் 65 மில்லியன் பவுண்கள் என்பதை நிராகித்து விட்டது. ஒருவேளை 70 மில்லியன் பவுண்கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம் எனத் தெரிகிறது. 29 வயதாகும் வில்லியன் கடந்த 2013-ல் இருந்து செல்சி அணிக்காக…

Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று பிற்பகல் விடுத்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 5 போட்டிகள் கொண்ட இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி தம்புளையில் ஆரம்பமாகவுள்ளது.

Read More