இனவாதத்தை கையிலெடுத்தால் கைது செய்யப்படுவர் : அரசாங்கம் எச்சரிக்கை

சமஷ்டி  கோரிக்கையை அரசாங்கம் ஏற்கா விடினும் ஜனநாயகத்தின்பால் நிலைப்பாட்டை தெரிவிக்க களம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இனவாதத்தை கையிலெடுத்து யார் செயற்பட்டாலும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மோசமாகவும் பகிரங்கமாகவும் ஞானசார தேரரை போன்று வட மாகாண முதலமைச்சர் விக்ணேஷ்வரன் பேச வில்லை. தலைமறைவாகியுள்ள தேரரை பொலிஸார் தொடர்ந்தும் தேடிவருகின்றனர். அமைச்சர் ஒருவரின்  பாதுகாப்பில் உள்ளதால் தான் அவரை தேடுவதில்  இந்தளவு கடினாமாக உள்ளதா ? […]

மஹிந்தவின் ஜப்பான் விஜயம் உத்தியோகப்பூர்வமானதல்ல

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜப்பான் விஜயம் உத்தியோகப்பூர்வமானதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜப்பான் இந்த விடயம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை  தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத்தின்  செலவில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜப்பான் சென்றுள்ளதாக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் எவ்விதமான உண்மை தன்மையும் இல்லை. தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அவர் ஜப்பான் வந்துள்ளதாக […]

ரவி கரு­ணா­நா­யக்­கவிடம் கேள்வி எழுப்பிய மோடி

இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த புதிய வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை புது­டில்­லியில்  சந்­தித்து பேச்சு நடத்­திய இந்­தியபிர­தமர் நரேந்­திரமோடி இலங்­கையின் அர­சியல் நிலைமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு  உரு­வாக்க விட­யங்கள் குறித்து  கேட்­ட­றிந்­து­கொண்டார். அத்­துடன்  இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவை அடுத்­த­கட்­டத்­துக்கு கொண்டு செல்தல்,  பொரு­ளா­தார வர்த்­தக தொடர்­பு­களை கட்­டி­யெ­ழுப்­புதல், முத­லீ­டு­க­ளுக்­கான வாய்ப்­புக்கள்  உள்­ளிட்ட விட­யங்கள் குறித்தும்   வெ ளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவும்  இந்­திய பிர­தமர்  நரேந்­திர மோடியும் விரி­வாக  பேச்சு நடத்­தி­யுள்­ளனர். […]

மடி­க்க­­ணனியில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்கம் கடத்­தி­யவர் விமான நிலை­யத்தில் கைது

இலங்­கையில் இருந்து இந்­தி­யா­வுக்கு விமான மூலம்  மடி­க­­ணனியில் 40 இலட் சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கத்தை கடத்திச் செல்ல முற்­பட்ட ஒரு­வர் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து நேற்று அதி­காலை சுங்கப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­த­தாக விமா­ன­ நி­லைய பொலிஸார் தெரி­வித்­தனர். பண்­டா­ர­நா­யக்கா சர்­வ­தேச விமான நிலை­யத்தில் இருந்து நேற்று அதி­காலை இந்­தியாவின் மும்­பைக்கு செல்ல இருந்த விமா­னத்தில் பய­ணிக்க விமா­ன­ நி­லை­யத்­திற்கு வந்­த­டைந்­துள்ள மாவ­னெல்லைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த 40 வய­து­டைய குறித்த நபரின்  மடிக் […]

“அரசாங்கத்தின் பயணம் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே”

நாட்டின் பொருளாதார கொள்கையிலும் சர்வதேச உடன்படிகைகளையும் மிகவும் மோசமான கொள்கைகளையும் அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது, தேசிய அரசாங்கத்தினுள் ஒற்றுமையும் புரிந்துணர்வும் இல்லது போயுள்ளது. எனவே இந்த அரசாங்கத்தின் மீது இனியும் நம்பிக்கை வைக்க முடியாது என தேசிய மஹா சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். இந்த அரசாங்கம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரமே செயற்பட முடியும் அதன் பின்னர் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யபடுவார் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை தேசிய […]

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் பதற்றம்

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10.15 மணியளவில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா முதலாம் குறுக்கு வீதியில் தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இ.போ.ச பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் இரு தரப்பினருக்கும் இடையில் மத்திய பஸ் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இ.போ.ச ஊழியரும், தனியார் பஸ்ஸின் […]

7 மாத குழந்தையை குழந்தை வரம் வேண்டி கொலை செய்த மந்திரவாதி..!

குழந்தை வரம் பெறவேண்டும் என்பதற்காக 7 மாதமான குழந்தையை மந்திரவாதி கடத்தி சென்று நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள செராய்கேலா-கர்ஸ்வான் மாவட்டத்தின் சாய்டா கிராமத்தில், சுபாஷ் என்பவரின் 7 மாத பெண் குழந்தையை, அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு குழந்தை இல்லை என்பதற்காக கடத்தி சென்று நரபலி கொடுத்த மந்திரவாதி மற்றும் குறித்த பக்கத்து வீட்டுக்காரர் என்போரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் கடந்த மாதம் கடத்தப்பட்ட […]

லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது தீவிரவாதியின் வேன் மோதியதில் பலர் காயம்

லண்டன் பாலத்தில் தீவிரவாதியொருவர் பாதசாரிகள் மீது   வேனால் மோதி விபத்து ஏற்படுத்தியதில், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அப்பகுதிக்கு ஆயுதமேந்திய பொலிஸார் விரைந்துள்ளனர். லண்டன் மாநகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் லண்டன் பாலத்தின் அருகே பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் மூன்று முறை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தை அடுத்து ஆயுதங்கள் ஏந்திய ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். நேற்று இரவில் நிகழ்ந்த விபத்தில் பாதசாரிகள் […]

மனைவியின் சடலத்தை மகனின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவன்

இந்தியாவிலுள்ள அரச மருத்துவமனையினால் சடலத்தை எடுத்துச்செல்வதற்கு வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படதாதால், தனது மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவரின் செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய ஷங்கர் என்ற கணவர் தனது இறந்த 50 வயது மனைவியான சுசீலா தேவியின் சடலத்தை தனது 32 வயது மகனான பப்புவின் உதவியுடன் இவ்வாறு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார். […]

பஸ் – முச்சக்கரவண்டி விபத்து : சாரதிக்கு படுகாயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வட்டகொட நகரில் இடம்பெற்ற பஸ்- முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற அரச பஸ் வண்டியும் எதிர்த்திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த  முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்.