ரஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க மறுப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதால், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கிற்கு இந்திய மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான ரொபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது. ஆயுள்தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறையில் இருக்கவேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியதனால், அந்த வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. இதற்கான அதிகாரம் மத்திய அரசிடமே இருப்பதாக மத்திய அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏனைய கைதிகளின் விடுதலை கோரிய மனுக்களின்…

Read More

சிரிய குண்டுத் தாக்குதலில் 39 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி சிறுவர்கள் உட்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலில் சிக்கியவர்களில் இன்னும் பலரைக் காணவில்லை என கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஒவ்வொரு பகுதிகளாகக் கைப்பற்றிவருகின்ற சிரிய இராணுவத்தினர், அடுத்ததாக இட்லிப் மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளனர். ரஷ்ய மற்றும் ஈரானிய படையினரின் ஆதரவுடன் செயற்படும் சிரிய இராணுவம், அண்மைய மாதங்களாக கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Read More

தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி

தாய்வானின் நியூ தய்பேய் நகரில் (New Taipei City) உள்ள வைத்தியசாலையில் பரவிய தீயில் சிக்கி குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நோயாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. இன்று (13) காலை வைத்தியசாலையின் 7ஆவது மாடியிலுள்ள வாட்டில் (Ward) தீ பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது. தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் தெரியாதபோதிலும், நகரக்கூடிய கட்டில் ஒன்றில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறினால் தீ பரவ ஆரம்பித்திருக்கலாம் என ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன. 2012ஆம் ஆண்டு குறித்த வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயால் 12 நோயாளர்கள் பலியானதோடு, குறைந்தது 60க்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப்படும்: துருக்கி எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் துருக்கி மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையினை தொடர்ந்து துருக்கியின் பணமான லிரா, அமெரிக்காவின் டொலர் மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான வரி விதிப்பை டிரம்ப் 2 மடங்காக அதிகரித்துள்ளார். இதனால் துருக்கியின் பணமான ‘லிரா’ அமெரிக்காவின் டொலர் மதிப்பிற்கு எதிராக 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் குறித்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாதிக்கும் என துருக்கிய வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் தமிழக அரசு கோரிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத்தண்டணையும் ஏனைய மூவருக்கு ஆயுள்தண்டனையும் வழங்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதனிடையே, தண்டணைக்குள்ளானவர்கள் சார்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரினதும் தூக்குத்தண்டணையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், அவர்களை விடுவிக்க முடியாது என இந்திய…

Read More

சூரியனை நோக்கிய பயணத்தை ஒத்திவைத்துள்ள நாசா – பாக்கர் ஆய்வு களத்தில் கோளாறா?

சூரியனை ஆராயும் பொருட்டு பாக்கர் எனும் ஆய்வுக் களத்தை இன்று சனிக்கிழமை அனுப்ப திட்டமிட்டிருந்த அமெரிக்க விண்வௌி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அந்த திட்டத்தை பிற்போட்டுள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள கேப் கெனவரல் ஏவு தளத்தில் இருந்து இன்று குறித்த விண்கலம் புறப்படவிருந்தது. எனினும், இறுதி மணித்தியாலத்தில் ஏற்பட்ட நேரக் கணக்கீட்டு தடங்கல் காரணமாக அந்த முயற்சியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைத்துள்ளது நாசா. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் பாக்கர் விண்கலத்தை சூரியனை நோக்கி ஏவும் பணிகள் இடம்பெறவுள்ளன. “மெம்மொத் டெல்டா IV கனரக ரொக்கட்” பாக்கர் விண்கலத்தை ஏந்திச் செல்கிறது. இந்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில், மனிதனால் தயாரிக்கப்பட்ட மிக வேகமான விண்வௌி வாகனமாக வரலாற்றில் இடம்பிடிக்கும். விண்கலம் தனது தளத்தில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர் நேரக் கணக்கீட்டு கடிகாரத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக பயணம் பிற்போடப்பட்டதாக…

Read More

டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரன் அவசர பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரன் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு வர்த்தகம், ஈரான் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான நெருக்கடிகள் தொடர்பாக நேற்று வௌ்ளிக்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக, டுவிட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “எம்மானுவெல் மெக்ரனுடன் சாத்திப்பாடான தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர் கருத்துக்களை பறிமாறிக் கொண்டார். குறிப்பாக பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டது” என்று கூறியுள்ளார். இரு நாட்டு தலைவர்களும் “விரிவான வர்த்தக செயற்பாடுகள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு காரணிகள் தொடர்பாகவும், ஈரானின் தற்போதைய நிலைமை மற்றும் மத்திய நாடுகளுக்கிடையிலான எல்லை நெருக்கடிகள் தொடர்பாகவும் கருத்துக்களை பறிமாற்றிக் கொண்டதாக” வௌ்ளை மாளிகை வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பிரான்சின் உத்தியோகபூர்வ அரச மாளிகையான எலிஸீ மாளிகை…

Read More

சவுதி நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உட்பட 43 பேர் பலி

யேமனில் சவுதி அரேபிய படையினர் நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. யேமன் அரசுக்கெதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, அரசப்படையும் சவுதி அரேபியப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி எனப்படும் கிளர்ச்சிக்காரர்களுக்கு, ஆதரவாக ஈரான் படை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சாடா மாகாணத்தில் (Saada) டாயான் (Dahyan) என்ற இடத்தில் உள்ள சந்தையில் சவுதி அரேபிய படையினர், நேற்று (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்து ஒன்று வெடித்துச் சிதறியதில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 பேர் படுகாயமுற்றனர். மேலும் படுகாயமுற்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இஸ்ரேலின் வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் பலி!

இஸ்ரேலிய இராணுவத்தினர் காஸா எல்லையில் நடத்திய வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய நிலப்பரப்பின் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய பல ரொக்கெட் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸின் ரொக்கெட் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. காஸாவின் ஜபாரவி பகுதியிலுள்ள 23 வயதான எனாஸ் கம்மாஷ் என்ற கர்ப்பிணிப் பெண்ணும் அவரது 18 மாதக் குழந்தையும் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், ஹமாஸ் வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. நேற்று (08) காஸாவில், இஸ்ரேலிய வாகனம் ஒன்று தாக்கப்பட்டதன் பின்னர் குறித்த…

Read More

பிரதமர் ரணிலின் அனுதாப செய்தியுடன் மனோ, இராதா, செல்வம் நேரில் அஞ்சலி

தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை அரசின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, பிரதமரின் இரங்கல் செய்தியையும் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் வழங்கி அனுதாபங்களை தெரிவித்தனர்.

Read More