“நாங்கள் எங்களுக்கு எதிராக வாக்களிப்பவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம்” – ட்ரம்ப்

கடந்த 1948 ஆம் ஆண்டு  இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் வந்தது. அதன்பிறகு 1967ஆம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் ஒருங்கிணைந்த ஜெருசலேமை நாட்டின் தலைநகராக அறிவித்தது. இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்படுகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. […]

காதலை ஏற்க மறுத்த இளம்பெண் வீதியில் தீயிட்டு கொலை!!!

இந்தியா – ஹைதராபாத்தில்  காதலை ஏற்க மறுத்த இளம்பெண் இளைஞரால் கொடூரமான முறையில் வீதியில் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் வரவேற்பாளராக  பணிபுரிந்த  22 வயது இளம்பெண், அலுவலகத்தில் வேலையை முடித்து மாலை 6.45 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த  இளைஞர் குறித்தத பெண்ணிடம்  பேசுவதற்காக வண்டியை நிறுத்தி தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளார். இந் நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது திடீரென்று மறைத்து வைத்திருந்த கேனை […]

தேர்தல் முடிவுகள் ஸ்பெயின் அரசுக்கு மீண்டும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

கேட்டலோனியா மாகாணத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரிவினைவாதிகள் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயினிடம் இருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற கேட்டலோனியா தனி நாடாக தன்னை பிரகடனப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்பெயின் அரசு கேட்டலோனியா நாடாளுமன்றத்தை கலைத்தது. அதிபர் கார்லஸ் பூஜ்டிமாண்டையும் பதவியில் இருந்து நீக்கியது. இதற்கிடையில் நடந்து முடிந்த கேட்டலோனியா நாடாளுமன்றத் தேர்தலில் கேட்டலோனியா தனி நாடு ஆதரவு கட்சிகளான ஒருங்கிணைந்த கேட்டலோனியா, கேட்டலோனியாவின் இடது குடியரசு கட்சி மற்றும் பாப்புலர் யூனிட்டி […]

பிரிட்டனின் அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான தேர்தல்

பிரிட்டனின் அதிகாரமிக்க அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. பிரிட்டனில் ஆட்சியிலுள்ள தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்காலம், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுவரை இருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், இடைத்தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற அனுமதியை பெற்றார் திரேசா மே. மேலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இம்மாதம் 19ஆம் திகதி […]

ஐக்கிய அரபு இராச்சியம் மக்களுக்கு எச்சரிக்கை

ஐக்­கிய அரபு இராச்­சி­ய­மா­னது சமூக இணை­யத்­த­ளங்­களில் கட்டார் தொடர்பில் அனு­தா­பத்தை வெளிப்­ப­டுத்தும் கருத்­து­களை வெளி­யி­டு­வ­தற்கு மக்­க­ளுக்குத் தடை விதித்­துள்­ளது. மேற்­படி தடையை மீறு­ப­வர்கள் 15 வரு­டத்­திற்கு மேற்­பட்ட சிறைத் தண்­ட­னை­யையும் 136,000  அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான தண்டப் பண விதிப்­பையும் எதிர்­கொள்ள நேரிடும் எனவும் அந்­நாட்டு சட்­டத்­த­ர­ணிகள் நாய­கத்தால்  நேற்று புதன்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்ள  அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய அரபு இராச்­சிய சட்­டத்­த­ர­ணிகள் நாயகம் ஹமாத் சயீப் அல் – ஷாம்­ஸியால் வெளி­யி­டப்­பட்­டுள்ள  அந்த அறிக்­கையில், கட்டார் மீதான […]

ரவி கரு­ணா­நா­யக்­கவிடம் கேள்வி எழுப்பிய மோடி

இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த புதிய வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை புது­டில்­லியில்  சந்­தித்து பேச்சு நடத்­திய இந்­தியபிர­தமர் நரேந்­திரமோடி இலங்­கையின் அர­சியல் நிலைமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு  உரு­வாக்க விட­யங்கள் குறித்து  கேட்­ட­றிந்­து­கொண்டார். அத்­துடன்  இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவை அடுத்­த­கட்­டத்­துக்கு கொண்டு செல்தல்,  பொரு­ளா­தார வர்த்­தக தொடர்­பு­களை கட்­டி­யெ­ழுப்­புதல், முத­லீ­டு­க­ளுக்­கான வாய்ப்­புக்கள்  உள்­ளிட்ட விட­யங்கள் குறித்தும்   வெ ளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவும்  இந்­திய பிர­தமர்  நரேந்­திர மோடியும் விரி­வாக  பேச்சு நடத்­தி­யுள்­ளனர். […]

லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது தீவிரவாதியின் வேன் மோதியதில் பலர் காயம்

லண்டன் பாலத்தில் தீவிரவாதியொருவர் பாதசாரிகள் மீது   வேனால் மோதி விபத்து ஏற்படுத்தியதில், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அப்பகுதிக்கு ஆயுதமேந்திய பொலிஸார் விரைந்துள்ளனர். லண்டன் மாநகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் லண்டன் பாலத்தின் அருகே பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் மூன்று முறை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தை அடுத்து ஆயுதங்கள் ஏந்திய ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். நேற்று இரவில் நிகழ்ந்த விபத்தில் பாதசாரிகள் […]

மனைவியின் சடலத்தை மகனின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவன்

இந்தியாவிலுள்ள அரச மருத்துவமனையினால் சடலத்தை எடுத்துச்செல்வதற்கு வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படதாதால், தனது மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவரின் செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய ஷங்கர் என்ற கணவர் தனது இறந்த 50 வயது மனைவியான சுசீலா தேவியின் சடலத்தை தனது 32 வயது மகனான பப்புவின் உதவியுடன் இவ்வாறு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார். […]

மோடியை இலங்கையில் தீத்து கட்ட நினைத்தது யார்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இடம்பெற்ற சர்வதேச வெசாக் மாநாட்டுக்கு, முஸ்லிம் மதகுருவைப்போல வேடமிட்டு வருகைதந்து, மண்டபத்துக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைவதற்கு முயன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர், நாளை (19) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவரை நாளை வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பதில் நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார். மாளிகாவத்தை, கெத்தாராம வீதியை வசிப்பிடமாகக் கொண்ட அல்தான் மொஹமட் கலீமுல்லா […]

விசா பெற ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கு அவசியம்

அமெரிக்கா விசா பெற ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கு விவரங்களை குறிப்பிட வேண்டும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவில் புதிய கட்டுபாடுகளை கொண்டு வர உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்கா விசா பெறும் விண்ணப்பத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என […]