விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை

கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் மூன்று வருட போராட்த்திற்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 10 ஆம் திகதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ´மர்மயோகி´ என்ற திரைப்படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் 100 கோடி செலவில் தயாரிக்க, கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தர சம்மதம் தெரிவித்து இருந்தார். இதற்கு…

Read More

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தினாரா கமல்? பொலிஸில் புகார்

தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், முதலாவது சீசன் அளவிற்கு, இந்த சீசனில் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். ரசிகர்களை கவர பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், போட்டியாளர்களில் ஒருவர் சர்வதிகாரி போல நடந்து கொள்ள வேண்டும். அந்த டாஸ்க்கில், “தமிழகத்தில் கடந்த காலங்களில் சர்வாதிகாரியால் என்ன நடந்தது தெரியாது” என சக போட்டியாளர் கூறுவதாக அமைந்துள்ளது. இதையடுத்து, இந்த டாஸ்க், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் விளம்பரத்திற்காக இதுபோன்று ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதாகவும், சென்னையைச் சேர்ந்த லூயிசாள் ரமேஷ் என்ற வழக்கறிஞர் காவல்…

Read More

ரஜினி – கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன்!

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ´அட்டகத்தி´ தினேஷ் நடித்துள்ள படம் ´அண்ணனுக்கு ஜே´. அரசியலை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ´அட்டகத்தி´ தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:- இது தனிப்பட்ட நபர் யாரையும் குறிக்கும் கதை அல்ல. எனக்காக எழுதப்பட்ட கதை. பொதுவான ஒரு அரசியல் கட்சி பற்றிய கதை. நான் மட்டை சேகர் என்ற பெயரில் ஒரு ஏழைத் தகப்பனின் மகனாக வருகிறேன். அரசியலே தெரியாமல் காதலித்துக் கொண்டு வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவன், ஒரு துரோகத்திற்கு பிறகு அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதியாகிறான் என்பதே படம். படத்தில் ஒரு தேசிய கட்சி, மாநில கட்சி இரண்டுக்குமான போட்டியாக இருக்கும். சின்ன வயது முதலே எனக்கு அரசியல் ஆசை இருக்கிறது. அரசியலுக்கு வரும் எண்ணமும் உண்டு. அதற்கு அனுபவம் வேண்டும்.…

Read More

தனுஷை நான் கிண்டல் செய்யவில்லை: விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகியுள்ள ஜுங்கா படத்தில் தனுஷை கிண்டல் செய்யவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ஜுங்கா படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நகைச்சுவை வில்லன் பற்றிய ‘பொயட்டு தினேஷ்’ என்ற கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும். இது நடிகர் தனுசை கிண்டல் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விஜய் சேதுபதி, “நான் தனுசை கிண்டல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதுடன் தேவையுமில்லை. அப்படி எந்த உள்நோக்கமும் இல்லை. தனுஷ் தன்னை நிரூபித்து தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தவர். அவர் மிக முக்கியமான நடிகர். தன்னை எல்லாத் தளங்களிலும் நிரூபித்த திறமைசாலி என்பதுடன், அவர் எனக்கு சீனியர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ரஜினியோடு என்னை ஒப்பிட வேண்டாம் – நான் சந்தர்ப்பவாதி அல்ல!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு பேட்டி அளித்தார். அரசியலை தனது அடுத்தகட்ட பயணமாக நினைக்காமல், தான் வாழ்ந்ததை நிலைநாட்டுவதற்கான அத்தியாவசியத் தேவையாக கருதுவதாகவும், கடந்த 2000-ம் ஆண்டில் ‘ஹே ராம்’ படத்தை தயாரித்த காலகட்டத்தில் இந்த எண்ணம் தனக்குள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் இருந்து அரசியல் பாதையை தேர்வு செய்த நிலைப்பாடு குறித்து பதிலளித்த அவர், ´நான் ஒரு கலைஞன், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டுமா? என்று நான் முன்னர் எண்ணியதுண்டு. ஆனால், சமூகத்துக்கு தொண்டு செய்யும் தனிநபர் கடமையின் உந்துததலால் தற்போது இருக்கும் தேக்கநிலை மற்றும் ஊழலில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் எனது முயற்சியின் ஒரேவழி அரசியலாகத்தான் இருந்தது’ என்றார். எனக்கு மக்கள் மிகவும் முக்கியமானவர்கள். புகழின்போதும், சிக்கலான வேளைகளிலும் அவர்கள் என்னை ஆதரித்து வந்துள்ளனர்.…

Read More

குலாப் ஜாமூனுக்காக 8 வருடங்களின் பின் இணையும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்

ராவணன் படம் வௌியாகி சுமார் 8 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் இருவரும் ‘குலாப் ஜாமூன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். மணிரத்னம் இயக்கத்தில் 2007–இல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்திருந்தனர். குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் `ராவணன்’ என்ற பெயரிலும் இந்தியில் `ராவண்’ என்ற பெயரிலும் தயாரான படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் 2010–இல் வெளிவந்தது. அதன் பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இருவரும் ‘குலாப் ஜாமூன்’ என்ற புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில்…

Read More

படப்பிடிப்பு முடிந்தது : மீண்டார் ரஜினிகாந்த்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இமாசல பிரதேச மாநிலத்தில் 35 நாட்கள் நடந்தது. அத்துடன், டார்ஜிலிங் பகுதியில் மலைபிரதேசங்களிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுத்து சென்னை வந்த ரஜினிகாந்த் அரசியல் நடவடிக்கை குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினார். அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மீண்டும் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் புறப்பட்டு சென்றார். அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினிகாந்தும், கதாநாயகியாக வரும் சிம்ரனும் நடிக்கும் காட்சிகளையும் படமாக்கினார்கள். சண்டை காட்சிகளையும் எடுத்தனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. பகலில் விடுதியில் பணியாற்றும் அவர் இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளுடன் மோதுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக…

Read More

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையில் நடிக்க போவதாக த்ரிஷா கூறுகிறார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமாக்க போவதாகவும், அதில் நடிக்க தயார் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா தெரிவித்துள்ளார். அதில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கயிருப்பதாகவும் கடந்த ஆண்டு செய்தி வெளியானது. அதன்பிறகு சமீபத்தில் ஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கயிருப்பதாக இன்னொரு செய்தி வெளியாகின. ஆனால் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்று செய்தி வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ். இப்படியான சூழ்நிலையில், தற்போது ஒரு பேட்டியில், ஜெயலலிதா வாழ்க்கை கதையை யாராவது படமாக்க முன்வந்தால், அதில் ஜெயலலிதாவாக நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். மேலும், அவர் எனக்கு பிடித்தமான தலைவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Read More

உதவி இயக்குநர்களின் அன்பால் நெகிழ்ந்த ஷங்கர்

திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அவரோடு பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் அனைவரும் ஷங்கரை நெகிழச்செய்திருக்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜென்டில்மேன்’. ஜூலை 30 ஆம் திகதி வெளியான இப்படம் நேற்றுடன் 25 ஆண்டுகளைத் தொட்டது மட்டுமன்றி, இயக்குநர் ஷங்கர் திரையுலகிற்கு அறிமுகமாகியும் 25 ஆண்டுகளானது. இதுவரை அவரது இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் ஷங்கர். இந்நிலையில், ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த அனைவருமே ஒன்றிணைந்து நேற்று சென்னையில் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் ஷங்கரிடம் ஆரம்பகால கட்டத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களிலிருந்து, இப்போது பணிபுரியும் உதவி இயக்குநர்கள் வரை கலந்து கொண்டார்கள். பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அறிவழகன், அட்லீ…

Read More

காதல் தான் என் பலம்: யுவன்

திரைப்படங்களில் எனது பலமே காதல் பாடல்கள் தான் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் எடுக்கலாம் என முடிவு செய்தோம். ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழுப் படத்தையும் பார்த்த பிறகு முழுத் திருப்தி. இயக்குநர் இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்துக்…

Read More