நயன்தாரா சம்பளம் 4 கோடி

நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா படங்கள் பெரிய கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் கதாநாயகர்கள் இல்லாத கதைகளை அவருக்காகவே தயார் செய்து கால்ஷீட் கேட்டு இயக்குனர்கள் மொய்க்கிறார்கள். கடந்த வருடம் வெளிவந்த அறம் படத்துக்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் மேலும் உயர்ந்து இருக்கிறது. கோலமாவு கோகிலா படத்தையும் கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவை முதன்மை படுத்தியே எடுத்து திரைக்கு கொண்டு வருகிறார்கள். விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு அதிகாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடுவதுபோல் கோலமாவு கோகிலா படத்துக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடுகிறார்கள். தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகையை முதன்மைப்படுத்திய எந்த படத்துக்கும் இதுபோல் சிறப்பு காட்சிகள் திரையிட்டது இல்லை என்கின்றனர். தற்போது நடித்து வரும் இமைக்கா…

Read More

வெப் சீரியலாக தயாராகிறது சில்க் ஸ்மிதாவின் வரலாறு

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியலாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி மற்றும் காலா படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் திரைப்படமாக வெளிவந்துள்ள நிலையில் தற்போது வெப்சீரியலாக விரைவில் வெளிவரவுள்ளது. தற்போது ஹிந்தியில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு குறித்த வெப் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் சில்க்ஸ்மிதாவின் சீரியலும் அதேபோன்று வெப் சீரியலாக வரவுள்ளது. இந்த வெப் சீரியலில் திரைப்படங்களில் வெளிவராத சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை குறித்த தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தண்டனை கொடுக்கும் போது…

சாருஹாசன், ஜனகராஜ், கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ´தாதா 87´. விஜய்ஸ்ரீ இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவுதமி பேசும்போது, ´´இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான செய்தி பற்றிப் பலரும் பேசினார்கள். ´பெண்களைக் கொடுமைப்படுத்தினால், அவர்களைக் கொளுத்த வேண்டும்´ என்பதுதான் அந்தச் செய்தி. சினிமா என்று எடுத்துக்கொண்டால், நாடகத்தனமும் கலந்திருக்கும். சில வி‌ஷயங்களைப் பெரிதுபடுத்திக் காட்டினால் நிறைய பேரிடம் சென்றுசேரும் என்பது தவிர்க்க முடியாத ஒரு உண்மை. அதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்கிறோம். கதையைச் சொல்லும்போது அதைப் பயன்படுத்துகிறோம். நிஜ வாழ்வில் மிகப்பெரிய பிரச்சினை. பிரச்சினை மட்டுமல்ல, நம்மைச் சுற்றி சமுதாயத்தில் கொடூரமான நிலை உருவாகியுள்ளது. இதற்கு எவ்வளவு கொடூரமாக ஒரு பதில் சொன்னாலும் கொடுத்தாலும் போதாது.…

Read More

கருணாநிதியின் அடக்கத்தலத்துக்கு இன்று சென்ற தளபதி விஜய்!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அஞ்சலி செலுத்தினார். திரைப்பட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தமையால் கருணாநிதியின் இறுதி அஞ்சலியில் நடிகர் விஜயால் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய் விமான நிலையத்திலிருந்து அண்ணா சதுக்கத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Read More

ரம்பா மீண்டும் கர்ப்பம் – கணவர் செய்த சீமந்தம்

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகியிருந்தார். பின் நடுவில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்து இருந்த அவர்கள் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவான அவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இந்த நேரத்தில் ரம்பாவின் கணவர் இந்திரன் அவரது மனைவிக்கு சீமந்தம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

விராட் கோஹ்லியாக மாறிய துல்கர் சர்மா

இயக்குநர் அபிஷேக் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை திரைப்படமாக இயற்றவுள்ளார். இப்படத்தில் விராட் கோஹ்லியின் கதாபாத்திரத்தினை துல்கர் சர்மா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸோயா பேக்டர் என்ற இப்படம், விராட் கோஹ்லி கிரிக்கெட் விளையாட்டில் நடத்திய சாதனைகளை மையப்படுத்தியே எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த படத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் படப்பிடிப்பு நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

விஜய்க்காக ராஜமௌலியை சந்தித்த சசிகுமார்

இயக்குநர் சசிகுமார் அடுத்ததாக விஜயை வைத்து வரலாற்றுப் படமொன்றை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகுமார் சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலியை சந்தித்திருந்தார். வரலாற்றுத் திரைப்படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் ராஜமௌலி என்பதால், சமீபத்தில் அவரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார். இருவரும் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமார், விஜயிடம் ஒரு வரலாற்று திரைப்படக்கதையை சொன்னபோது, அவர் மிகவும் ரசித்து நிச்சயம் பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். இதை சசிகுமாரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். எனவே, சசிகுமார் இயக்கத்தில் வரலாற்றுப் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். விஜய் தற்போது ஏ.ஆர். முருகாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அட்லியுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், சசிகுமார் இயக்கத்தில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க…

Read More

இணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ!

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ´விஸ்வரூபம்-2´ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் ´சாதி மதம்´ என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் கமல் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ரசிகர்கள் கவர்ந்துள்ளது. மேலும் இந்த வயதிலும் சிறப்புடன் சண்டைப் போடும் காட்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Read More

இரசிகையைத் தாக்கிய தீபிகா படுகோனே

காதலருடன் செல்லும் போது வீடியோ எடுத்த இரசிகையை தீபிகா படுகோனே தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹிந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதுடன், பொது நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்து கலந்து கொண்டு வருகின்றார்கள். மேலும் இருவரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த பத்மாவத் படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இருவரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள டிஸ்னிலாண்டுக்குச் சென்று சுற்றி பார்த்தனர். அங்கு வந்திருந்த யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. இந்நிலையில் இரசிகை ஒருவர் இவர்களை அடையாளம் கண்டு வீடியோ எடுத்த நிலையிலேயே தீபிகா அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ரஜினி, கமலை நம்பவேண்டிய அவசியமில்லை: பிரியா பவானி சங்கர்

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான ரஜினி, கமல் இருவரும் அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டதையடுத்ததே இருவரின் அரசியல் பயணம் குறித்து இவ்வாறு பேசி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில வி‌டயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். ரஜினி, கமல் இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியலில் குதித்திருக்கும் அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் அவர்களை நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணித்தியாலத் திரைப்படம் அல்ல, அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யப்போகிறார்கள். இந்த வி‌டயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன்” என்றார். மேலும் தெரிவிக்கையில், “நான்…

Read More