இரண்டு மாதத்திற்குள் வர்த்தமானி வெளியிட்டால் ஜனவரியில் தேர்தல்

சபாநாயகர் கையில் பந்து மீளாய்வு செய்யப்படும் எல்லை மீள்நிர்ணய அறிக்கை இரண்டு மாதத்துக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படுமாயின் திட்டமிட்டபடி ஜனவரி முதல் வாரத்தில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்த முடியும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். “பாராளுமன்ற சபாநாயகரிடத்திலேயே தற்பொழுது பந்து உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைகளுக்கான எல்லை மீள்நிர்ணய அறி க்கை 139 வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதனால் மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் காலதாமதப் படுத்தப்படலாம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அடுத்த கட்டமாக இடம்பெறக் கூடிய செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அவர், எல்லை மீள்நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்கு பிரதமர் தலைமையில் ஐவரைக் கொண்ட குழுவை சபாநாயகர் நியமிக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் குழுவுக்கு எல்லை…

Read More

சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டால் பழைய முறையில் தேர்தல் வராது : பைசர்

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறாத காரணத்தினால், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான வாய்புக்கள் இல்லையென மாகாண அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்படாததால், சபாநாயகரின் பொறுப்பாக பிரதமர் தலைமையில் இதற்காக குழுவொன்று நிறமிக்கப்பட்டு, இதன் குறைகளைத் தீர்த்து, இரண்டு மாத காலத்திற்குள் அதனை ஜனாதிபதியிடம் கையளித்து, வர்த்தமானியில் அறிவிப்பதன் மூலம் இதனை சட்டமாக்கும் வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Read More

அரசியல் புரட்சி குறித்து பேசும் சம்பிக்க

இரண்டு கோடி வயிறுகள் குறித்து பேசுவதைவிட, இரண்டு கோடி மூளைகளைப் பயன்படுத்தி, புத்தாக்கத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என எரிசக்தி, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 78 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையைத்தைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் அரசயல் மாற்றம் ஒன்று அவசியம் தேவைப்படுகிறது. அரச, தனியார் துறைகளில் பிரதான பதவிகளை வகிக்க கிராமத்தில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும், அரசியல் அதிகாரத்தில் முக்கிய பதவிகளை வகிக்க முடியாதிருப்பது மிகப் பெரிய பிரச்சினை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Read More

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை

முத்தெனிய – ஜூலன்பிட்டிய பகுதியில் சட்டவிரோ​தமாக இயங்கிய மதுபான உற்பத்தி நிலையத்தை வீரகெட்டிய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்படி மேற்கொண்ட சுற்றிவளைப்பில், ஜூலன்பிட்டிய பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதன்போது, குறித்த பகுதியிலிருந்து 41 கோடா பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட யா எல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் வலஸ்ஸமுல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஜா எல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் வீரகெட்டிய பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த சேர்ந்த ஒருவரும் இணைந்து இந்த சட்டவிரோத மது வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் போதைப்பொருள் அடங்கிய 90 பொதிகளை தெலிஜ்ஜவில பகுதியில் மாலிம்பொட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதனுடன்…

Read More

ஊழல் மிகு தேர்தல் முறையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் நிலவிய ஊழல் மிகு தேர்தல் முறைமையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கான பலம்வாய்ந்த சூழல், தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்துத் தேர்தல்களையும் சுதந்திரமாகவும் நீதியாகவும் அமைதி மற்றும் சுயாதீனமாக நடாத்தி, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தமது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆசிய நாடுகளுக்கிடையிலான புதிய அறிக்கையின் பிரகாரம் இலங்கை நீதித்துறை, பக்கசார்பின்மை குறித்து மிக உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி 3 நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று (27) அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டி.கே. ராஜபக்ஸ ஞாபகார்த்த நூதனசாலையை அமைப்பதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான வழக்கிற்காகவே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள 2ஆவது வழக்கு இதுவாகும்.

Read More

மொறட்டுவையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஐவர் கைது

மொறட்டுவை – லுனாவ பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 5,000 போலி நாணயத்தாள்கள் 15 கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் மடிக்கணினி, ஸ்கேனர், இறப்பர் முத்திரை ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். லுனாவ, கொரவெல்ல, எகொடயன, அங்குலான பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், போலி அரச சான்றிதழ்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களை அச்சிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (26) மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read More

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக முதலீட்டு வாய்ப்பு அற்றுப்போகிறது

நாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் பணிப் பகிஷ்கரிப்புகளால், முதலீட்டு வாய்ப்புகள் அற்றுப்போவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளர். கடந்த பல வருடங்களுடன் ஒப்பிடுகையில், வௌிநாட்டு முதலீடுகள் குறைவடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிரிமல் அபேரத்ன குறிப்பிட்டுள்ளா​ர். பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க தெரிவித்துள்ளார். அதேநேரம், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு, நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதனடிப்படையில், விலைத் திருத்தம் அவசியமானதா என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் கீழ் ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளதாக ரஞ்சித் அசோக்க மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

வடக்கு கிழக்கில் சீனா அபிவிருத்தி

இலங்கையின் வட மாகாணத்தில் வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி பணிகளில் சீனா ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனாவின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொயட்டர் நேற்றைய தினம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சீனா அதிக முதலீடுகளை மேற்கொண்டு இலங்கை மீது ஆதிக்கம் செலுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்திலேயே சீன மற்றும் இலங்கை அதிகாரிகளை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது. சீனா, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு உதவவுள்ளதாக சீனாவின் இலங்கை தூதரக அரசியல்துறை தலைவர் லூ சொங் தெரிவித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்திற்கு உதவவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More