கொழும்பு – கொச்சின் விமான சேவை இடைநிறுத்தம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம் காரணமாக, கொழும்பு (CMB) மற்றும் இந்தியாவின் கொச்சி (COK) நகருக்கும் இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று (15) முற்பகல் 9.00 மணிக்கு புறப்படவிருந்த UL 165 விமான சேவை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மறு அறிவித்தல் வரை, குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

Read More

ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுக்களுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 126 என்ற விமானத்தில் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். குறித்த நபர் அணிந்திருந்த காற்சட்டை பையில் 100 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

கடும் மழையுடனான வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வான்மட்டத்தை அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட காரியாலயம் தெரிவித்துள்ளது. அதேநேரம், லக்ஸபான நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்றும் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் 3 அடி உயரம் வரை திறக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது தொடர்ந்தும் உயர்ந்து வருவதால், அதன் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வுகூறியுள்ளது. கடற்பிராந்தியங்களில் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்பதால், கடல்சார் ஊழியர்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு…

Read More

மஹிந்தவை விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு

எதிர்வரும் வௌ்ளிக்கிமை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி, இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் கையொப்பத்தில் இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. சிரேஸ்ட ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு கீத் நொயருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் தவறியதால் இரண்டு அதிகாரிகள் சென்று அவுஸ்திரேலியா கான்பரேவில் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர். மஹிந்த ஆட்சி காலத்தில் அனைத்து ஊடகவியலாளர் கடத்தல் கொலை சம்பவங்களும் ஒரே குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

UNP கட்சியில் மீண்டும் ஜோன்ஸ்டன்?

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ​ஜோன் பெனாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஒன்றிணைந்த எதிர்கட்சியின் செயற்குழுவில் பேசப்படும் விடயங்கள் உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியவருவதாகவும் அதற்கு ஜோன்சன் பெனாண்டோ காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவருடன் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தொடர்பு வைத்திருப்பதாக தெரியவருகிறது. இரவு நேரங்களில் ஜோன்ஸ்டன் குறித்த அமைச்சரை சந்திப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. இனிமேலும் ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இருக்க முடியாது எனவும் சந்தர்ப்பம் வரும்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வதாகவும் ஜோன்ஸ்டன் பெனாண்டோ பிரபல அமைச்சரிடம் கூறியுள்ளார். ஆனால் தன்மீது மஹிந்த ராஜபக்ஷவிற்கு சந்தேகம் வராம அளவிற்கு நடந்துகொள்ள ஜோன்ஸ்டன் முயற்சித்து வருகிறார். ஆனாலும் மஹிந்த, நாமலுக்கு ஜோன்ஸ்டனின் இருவேடம் தெரியும் என ஒன்றிணைந்த…

Read More

இலங்கைக்கு 39 மில்லியன் நிதியுதவி அளிக்கும் அமெரிக்கா

வௌிநாட்டு இராணுவத்தினருக்காக நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு 39 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது. இதற்காக காங்கிரசின் அனுமதி கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த இந்த நிதியை வங்காளவிரிகுடாவின் பாதுகாப்பு, மனிதாபிமான சேவை, மற்றும் இடர்நிவாரணம் உள்ளிட்ட துறைகளில் எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நொயட், இந்து சமுத்திர வலய பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார். கடந்த 7 ஆம் திகதி இந்தோனேஷியா, மலேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு அவர் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ், இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்த…

Read More

பதுளையில் வர்த்தக நிலையத்தில் தீ

கட்டடம் எரிந்து நாசம்; உரிமையாளர் பலி பதுளை – கொக்கோவத்தை வீதியிலுள்ள இரு வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையங்கள் நேற்று (12) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் ஒருவர் பலியானதுடன் கட்டடமும் முற்று முழுதாக தீக்கிரையாகியுள்ளன. மரணமடைந்தவர் 48 வயது துமீர றேமந்தகுமார என்பவராவார். கடும் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் இவர் மரணமானாகியுள்ளார். இத் தீ சம்பவத்தினால் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ ஏற்பட்டதையடுத்து அங்கு விரைந்த பதுளை மாநகர சபை தீ அணைப்புப் படையினர் ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவுவதை தடுத்துள்ளனர். தீ ஏற்பட்ட வேளையில் குறிப்பிட்ட வர்த்தக நிலையத்திற்குள் பாரிய வெடிப்பு சத்தமும் ஏற்பட்டதாக பதுளை பொலிசார் ஊர்ஜிதம் செய்துள்ளனர். கைக்குண்டு ஏதும் வெடித்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது. இத்…

Read More

சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட விசேட குழு

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் சுயாதீன நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு தரப்பிடமிருந்தும் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள கருத்துக்களை கவனத்திற்கொண்டு ஜனாதிபதியினால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஓய்வுபெற்ற பொருளியல் துறை பேராசிரியர் தேசமான்ய டபிள்யு.டீ. லக்ஷ்மன் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழக்கத்தின் பொருளியல் துறை முன்னாள் பேராசிரியர் சிறிமெவன் கொழம்பகே, களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை முன்னாள் பேராசிரியர் அஜிதா தென்னகோன், சுயாதீன ஆலோசகர் கலாநிதி சனத் ஜயனெத்தி, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் ஆர்.ஏ. ஜயதிஸ்ஸ ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர். இலங்கை சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி முன்மொழியப்பட்டுள்ள புதிய வர்த்தக கொள்கையின்…

Read More

பார்கர் சோலர் – வெற்றிகரமாக விண்ணுக்கு!

சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக (பார்கர் சோலர்) Parker Solar என்ற செயற்கைக் கோள் நாசா நிறுவனத்தினால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த செயற்கைக்கோள் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும். அத்துடன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிக வேகமான நகர்வினைக் கொண்ட விண்கலமாகவும் Parker Solar வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதனைத்தவிர உயிருடனுள்ள ஒருவரின் பெயர் விண்கலமொன்றுக்குச் சூட்டப்படுவதும் இதுவே முதற்றடவையாகும். சூரியப் புயல்கள் தொடர்பாக 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த சூரிய இயற்பியலாளர் யூஜின் பார்க்கரின் (Eugene Parker) பெயரே சூட்டப்பட்டுள்ளது. Delta-IV என்ற பாரிய ரொக்கட்டின் மூலம் இந்த விண்கலம் அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 03.31 க்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. புளோரிடா மாநிலத்தின் கேப் கெனவரெல் பகுதியிலிருந்து (ape Canaveral) இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

Read More

ර්‍ஹஜ் பெருநாள் எதிர்வரும் 22ம் திகதி – பிறை தென்பட்டது

நாட்டின் சில பகுதிகளில் துல்- ஹஜ் மாத தலைப்பிறை இன்று தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதனடிப்படையில்,உலக வாழ் முஸ்லிம்கள் துல் ஹஜ் 10 ஆம் நாள் ஈதுல் அல்ஹா எனப்படும் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளை எதிர்வரும் 22 ஆம் திகதி கொண்டாடவுள்ளனர். இதற்கிணங்க எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மாலை மஃரிப் தொழுகையை அடுத்து நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More