மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றமைக்கு எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு மினுவாங்கொட பிரதேச சபை தாமரை மொட்டு உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு மூன்றாண்டுகள் பூர்த்தியாகின்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை செய்வது அரசியல் தந்திரம் என்று அந்த உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மினுவாங்கொட பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று உடுகம்பொல பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபைத் தவிசாளரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. பிரதேச சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து கொண்டு இன்று சபைக்கு வருகை தந்துள்ளனர். அரசியல் பழிவாங்கல் தவிர ரணில் மைத்திரி அரசாங்கத்துக்கு செய்வதற்கு வேறொன்றுமில்லை என்று மினுவாங்கொட பிரதேச சபை தவிசாளர் இதன்போது கூறினார்.

Read More

கூரையில் இருந்து விழுந்து இராணுவ வீரர் பலி

பான்கொல்ல இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர் தாங்கி ஒன்றை சுத்தம் செய்வதற்காக கூரையின் மேல் ஏறியுள்ளபோது கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததால் இராணுவ வீரருக்கு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர் பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். காலி தொம்பகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Read More

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க யோசனை

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க மகா சபைக்கு யோசனை முன்வைத்ததாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க கூறியுள்ளார். உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பது நியாயமற்றதல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாகலகம்வீதிய, பொது வர்த்தக கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கொழும்பு மாநகர சபைக்குள் ஒருபோதும் காணாத அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்

Read More

ரிஷாட்டின் வாகன பாவனை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் இன்றைய (16) டெய்லி மிரர், லங்கா தீப பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் TDSP பெரேரா திருத்தமொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பத்திரிகை ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர், தரிந்து ஜயவர்தன என்பவரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையின் கணிப்பு தவறானதெனவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாவனையில் 03 வாகனங்கள் மாத்திரமே இருப்பதாகவும் வெளியிட்டுள்ள திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பத்திரிகைகளில், அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் 3 வாகனங்களுக்கு மேலதிகமாக சட்டத்திற்கு முரணாக 7 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர், இணைப்பு செயலாளர், மக்கள் தொடர்பாடல் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் வாகனங்களும் அத்தகவலில் தனித்தனியாக குறிப்பிடப்படாத…

Read More

காபுல் கொலைவெறித் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றது

ஆஃப்கனிஸ்தான் தலைநகர் காபுலில், கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை வர்ணித்துக் கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. குறித்த தினத்தில் நடத்தப்பட்ட 2 வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். இது தங்களின் ‘கமாண்டோ ஆப்ரேஷன்’ என்று இந்த தாக்குதலை அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வி நிலையம் ஒன்றில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் மாணவர்கள் என்பதுடன், அவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான தேர்வை எதிர்கொள்ள காத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நேற்று புலனாய்வுத்துறை சார்ந்த பயிற்சி நிலையம் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை கொமாண்டோ தாக்குதல் என குறிப்பிட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்த சம்பவத்தில்…

Read More

வாஜ்பாயின் இறுதிக்கிரியை இன்று

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் இறுதிக்கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இறுதிக்கிரியைகள் நடத்தப்படும் ஸ்மிருதி சித்தால் அருகில், இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பூதவுடல் டெல்லியிலுள்ள அவரது கிருஸ்ண மேனன் இல்லத்திற்கு நேற்றிரவு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், இன்று காலை வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு பா.ஜ.க.தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதிக்கிரியைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கொழும்பு – கொச்சின் விமான சேவை இடைநிறுத்தம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம் காரணமாக, கொழும்பு (CMB) மற்றும் இந்தியாவின் கொச்சி (COK) நகருக்கும் இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று (15) முற்பகல் 9.00 மணிக்கு புறப்படவிருந்த UL 165 விமான சேவை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மறு அறிவித்தல் வரை, குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

Read More

சுவாசிக்க ஆரம்பித்து மூன்று வருடங்கள்

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக உள்விவகார பிரதியமைச்சர் ஜே.சீ. அலவதுவல தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாத்து தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்கும் போது, நாடு அனைத்து வழிகளையும், நெருக்கடியைச் சந்தித்திருந்ததாகக் கூறினார். தற்போது இந்த நெருக்கடிகளை நீக்கிக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நல்லாட்சி அசராங்கம் நாட்டை வழிநடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் செய்யும் நல்ல பணிகளை ஊடகங்கள் பேச மறந்துவருவதாகவும், ஊடகங்கள் இதுகுறித்து இன்னமும் பேச வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

பலத்த காற்றினால் வீடுகள் பல சேதம்: அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிக மழை காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – காரைநகர், கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரம் பகுதியில் நேற்றிரவு வீசிய கடும் காற்றினால் ஒரு வீடு முற்றாகவும் நான்கு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, நேற்றிரவு வீசிய கடும் காற்றினால் வலிகாமம் மேற்கு – பொன்னாலை பகுதியில் உள்ள மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடனான வானிலையால் செலகம தோட்டத்தின் 15 லயன் குடியிருப்புகளின் கூரைத்தகடுகள் வீசி எறியப்பட்டுள்ளன. இதனால் 15…

Read More

FCID ஐ எதிர்க்கும் அமைச்சர் ராஜித்த

பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு (FCID) தனது கடமையை சரிவர செய்யவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். பியகம பிரதேசத்தில் நேற்று (15) நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”பாரிய நிதி மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. சிறிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தப் பிரிவு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் தற்போது அரச சேவையும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.” என்று சுட்டிக்காட்டினார். ”FCID பெரிய திருடர்களை பிடிக்கவே முயற்சித்தது. எனினும், சிறு குற்றவாளிகளே பிடிபட்டனர். அரச ஊழியர்களின் குற்றங்கள் குறித்தும் விசாரிக்குமாறு கேட்டிருந்தோம். பாரிய குற்றங்கள் குறித்து விசாரிக்கவே இதனை ஸ்தாபித்தோம். எனினும், அவர்கள் 1000, 500 ரூபா களவாடியவர்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதனால் அரச சேவையில்…

Read More