7 மாதங்களாக கொடுப்பனவு இல்லை – 6 தோட்ட அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

பதுளை – மடுல்சிமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இநத நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட், தெரேசியா, மோரா, கிவ், சென்ஜோன்டிலரி, கிலானி ஆகிய பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த வெளிகள உத்தியோகத்தல்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் சுமார் 07மாதங்களாக மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரதிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ – டின்சின் நகரில் இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மடுல்சிமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்தின் கிழ் பணிபுரியும் தமக்கு எவ்வித அறிவிப்புகளும் இன்றி வழங்கபட வேண்டிய மேலதி கொடுப்பனவுகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment