65 மில்லியன் பவுண்களுக்கு வில்லியனை கொடுக்க மறுக்கும் செல்சி

பாசிலோனா அணி 65 மில்லியன் பவுண்களுக்கு வில்லியனை வாங்க விருப்பம் தெரிவித்ததை செல்சி அணி நிராகரித்து விட்டது

பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி மிட்பீல்டர் வில்லியன். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் செல்சி அணிக்காக விளையாடி வருகிறார்.

இவரை ‘லா லிகா’ புகழ் பாசிலோனா அணி வாங்க விரும்புகிறது. இதற்காக இரண்டு முறை செல்சிக்கு தூதுவிட்டது. ஆனால் செல்சி அதற்கு அசையவில்லை.

மூன்றாவது முறையாக 65 மில்லியன் பவுண்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியது.

புதிதாக செல்சி அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மவுரிசியோ சர்ரிவிற்கு வில்லியனை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லை.

இதனால் 65 மில்லியன் பவுண்கள் என்பதை நிராகித்து விட்டது.

ஒருவேளை 70 மில்லியன் பவுண்கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம் எனத் தெரிகிறது.

29 வயதாகும் வில்லியன் கடந்த 2013-ல் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 166 போட்டிகளில் விளையாடி 25 கோல் அடித்துள்ளார்.

Related posts

Leave a Comment