இலங்கைக்கும் பங்களா தேஷிற்கும் இடையிலான தொடர்பு குறித்து புதிய திட்டம்

இலங்கை மற்றும் பங்களதேஷ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த, கலந்துரையாடல் ஊடான செயற்பாட்டு திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பங்களதேஷ் அமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபாவுடனான சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக வியட்நாம் சென்றுள்ள பிரதமர், பங்களதேஷ் அமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபாவை நேற்று சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார். பங்களதேஷிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அந்த நாட்டு அமைச்சர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இதன்போது அழைப்பு விடுத்துள்ளார். தேயிலை, கடற்றொழில், ஔடதம், கல்வி மற்றும் நிதித்துறைகளின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களை வழங்க இலங்கை முன்வர வேண்டும் என பங்களதேஷ் அமைச்சர், பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தமது கிரிக்கெட் துறையை மேம்படுத்த இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்களையும் அவர் இதன்போது நினைவூட்டியுள்ளதாக பிரதமர்…

Read More

குலோப்பசைட் இராசாயனத்தை நிறுத்தமாறு யாரும் கோரவில்லை என்கிறார் நவீன்

சுகாதார அமைச்சின் ஊடாகவோ அல்லது தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஊடாகவோ குலோப்பசைட் இராசாயனத்தை நிறுத்தமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் அதனை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். எனினும், அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். தேயிலைச் செடிகளுக்கு தெளிக்கப்படும் குலோப்சைட் எனும் இராசாயனத்தை சுகாதார அமைச்சின் ஊடாகவோ அல்லது தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஊடாகவே ஆய்வினை மேற்கொண்டு இதனை இடைநிறுத்துமாறு என்னிடம் கோரிக்கை வைத்தால் அதற்கான நடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். பொருந்தோட்ட கைதொழில் அமைச்சர் என்ற ரீதியில் அதற்கான நடவடிக்கையினை எடுக்க முடியும் எனவும் நவீன் திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார். தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 99.9மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு தேயிலை…

Read More

புகையிரத போராட்டம் இரத்து

29 ஆம் திகதி மேற்கொள்ள தீர்மானித்திருந்த புகையிரத சேவை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மஹிந்தவை பிரதமராக்க மைத்திரி விருப்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித அதிருப்தியும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமராக பதவியை ஏற்றுக்கொள்வதற்காக விருப்பத்துடன் ஜனாதிபதிக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனூடாக ஆட்சியில் மாற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்குல் அரசாங்கத்தால் நாட்டிற்கு ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More