நாளாந்தம் 100 பெண்கள் வீதம் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணம்

நாளாந்தம், சுமார் 100 பெண்கள் வீதம் சுற்றுலா விசா மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்கு செல்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், 5க்கும் குறைவான வயதுடைய பிள்ளைகள் தாய்மார் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். இந்தநிலையில், 5 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளின் தாய்மார் வௌிநாடுகளுக்கு செல்வது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தாம் எதிர்பார்க்கப்பதாகவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பணிகளின் நிமித்தம் வௌிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வதைத் தடுக்கும் வகையில், புதிய சட்டமொன்றை தயாரிப்பதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

சிரியாவில் போர் முடிவுக்கு வந்த பிறகும் அதிபராக அல்-அஸாத் நீடிப்பது விசித்திரமான பிழை: மெக்ரோன்

சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகும், அந்நாட்டு அதிபர் அல்-அஸாத் பதவியில் நீடிப்பது விசித்திரமான பிழையாக இருக்கும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முறியடிக்கப்பட்டு, அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அவ்வாறு அமைதி ஏற்படும் போது, அங்கு அல்-அஸாத்தின் அரசு நீடிக்கும்; ஐரோப்பிய அகதிகள் நாடு திரும்புவார்கள்; நாடு புனரமைக்கப்படும். இருந்தாலும், இதில் அல்-அஸாத்தின் அரசு நீடிப்பது தான் விசித்திரமான பிழையாக இருக்கும் என மெக்ரோன் கூறியுள்ளார். சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை இடம்பெற்ற போது, கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரான்ஸ் கடைப்பிடித்து வந்தது. இந்த நிலையில், சிரியா மற்றும் ஈராக்கின் கணிசமான இடங்களை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கைப்பற்றி, இஸ்லாமியப் பேரரசாக அறிவித்தனர். மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய…

Read More

பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் அரச மரியாதை இரத்து

பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் அரச மரியாதை இரத்து செய்யப்படுவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆடம்பர பிரதமர் பங்களா தேவையில்லை என்று கூறி இராணுவ செயலாளரின் 3 படுக்கை அறையுடன் கூடிய வீட்டில் தங்கியுள்ளார். தன்னுடன் 2 பணியாளர்களை மட்டுமே உதவிக்கு வைத்திருக்கும் அவர், 2 அரச கார்களை மட்டுமே பயன்படுத்துகிறார். ஆளுநர் மாளிகைகளில் ஆடம்பர வசதி கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், இராணுவத் தலைமை தளபதி மற்றும் அரச அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கும் அண்மையில் தடை விதித்தார். இந்த நிலையில், மற்றொரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பொதுவாக விமான நிலையங்களில் அரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அரச மரியாதை…

Read More

தொழிற்சங்க நடவடிக்கையில் வனஜீவராசி அதிகாரிகள்: சிக்கலை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்

மின்னேரியா தேசிய பூங்காவில் பணிபுரியும் வனஜீவராசி அதிகாரிகளை தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, பொலன்னறுவை பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதனால், கவுடுல்ல, மின்னேரியா, வஸ்கமுவ, அங்கம்மெடில்ல ஆகிய பூங்காக்களுக்கு செல்வதில் சுற்றுலாப் பயணிகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். களப்பணிகள் மற்றும் சுற்றுலா சேவையிலிருந்து விலகி, அலுவலக சேவையை மட்டுமே முன்னெடுப்பதாக கவுடுல்ல தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். மின்னேரிய தேசிய பூங்காவிற்கு அனுமதியின்றி பிரவேசித்து, சட்ட ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் வனஜீவராசி அதிகாரிகளால் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, வனஜீவராசிகள் அலுவலகத்திற்குள் நுழைந்த மீனவர்கள் சிலர், அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு, கைது செய்யப்பட்டிருந்த மீனவரை அழைத்துச்சென்றதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மீனவர்களின் தாக்குதலில் 10 அதிகாரிகள் காயமடைந்ததுடன், நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை…

Read More

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஸ்டாலின் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், தலைவருக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார். இதன்போது, பொதுக்குழுவில் பங்கேற்றுள்ள தி.மு.க. நிர்வாகிகள் கரகோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்து அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் தலைவர் பொருளாளர் பதவிக்கான தேர்தல் இன்று (28) நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்தார். இதனை முன்னிட்டு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26ஆம் திகதி நடைபெற்றது. தலைவர் பதவிக்கு செயல் தலைவர் மு.க. ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம்…

Read More

அமெரிக்கா – மெக்ஸிகோ இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையே வர்த்தக உடன்பாடொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வட அமெரிக்க திறந்த வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிறைவு செய்வதற்கான அழுத்தம் அதிகரித்திருப்பதால் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நடைமுறையிலுள்ள இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் விமர்சித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வர்த்தக உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கனடாவின் ஒப்புதலுடன் குறித்த ஒப்பந்தம் முழுமை பெறவுள்ளது. ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார். குறித்த ஒப்பந்தத்தினூடாக அமெரிக்காவின் உற்பத்திகள், குறிப்பாக வாகன உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதன்காரணமாக 1994 ஒப்பந்தம் தொடர்பில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வலியுறுத்தல் விடுத்திருந்தார். இந்நிலையிலேயே, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடா இந்த ஒப்பந்தத்தின் மூன்றாவது…

Read More

பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் இராணுவ அதிகாரிகளின் கணக்குகள்

மியன்மார் இராணுவ அதிகாரிகள் சிலரின் கணக்குகளை சமூக வலைத்தளம் மற்றும் இன்ஸ்டகிராமிலிருந்து நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களின் பதிவுகளை ஆராய்ந்ததன் பின்னர், தவறானதும் வெறுப்பானதுமான தகவல்கள் பரவுவதைத் தவிர்ப்பதற்காக அவை நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக, சிரேஷ்ட இராணுவ ஜெனரல் மின் ஆங் லைங், இராணுவத் தலைமை கொமாண்டர் ஆகியோர் உள்ளிட்ட 20 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 18 பேஸ்புக் கணக்குகள், ஒரு இன்ஸ்டகிராம் கணக்கு மற்றும் 52 பேஸ்புக் பக்கங்கள் ஆகியவற்றுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

அபிவிருத்திப் பணிகளில் பாகுபாடு இல்லை; வடக்கு, கிழக்கிற்கு முழுமையான செயற்திட்டம்

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எவ்வித பேதங்களும் கிடையாது. வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பினை நிறைவேற்றுவேனென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்காக மாகாணங்களின் சகல மக்கள் பிரதிநிதிகளினதும் அதேபோன்று அரச உத்தியோகத்தினரின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களைப் போன்றே மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை முறையாகவும் துரிதமாகவும் செயற்படுத்துவதற்கு இதன்போது பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அம்மக்களின் குடிநீர், சுகாதார, கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார். வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான…

Read More

பழைய தேர்தல் முறைக்கு செல்ல பிரதமர் குழுவுக்கு அதிகாரம் எதுவும் இல்லை

சபாநாயகரினால் நியமிக்கப்பட இருக்கும் பிரதமர் தலைமையிலான ஐவரடங்கிய குழுவுக்கு எல்லை நிர்ணய அறிக்கையிலுள்ள குறைபாடுகளை திருத்தி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே முடியும். பழைய விகிதாசார முறைக்கு செல்வதற்கான அதிகாரம் இந்த குழுவுக்கு கிடையாது என மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். மீண்டும் பழைய தேர்தல் முறையில் ​மாகாண சபை தேர்தலை நடத்துவதானால் மாகாண சபை தேர்தல் சட்டத்தை திருத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தனக்கு சட்டத்தினூடாக வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தின் படியே குறைபாடுகள் இருப்பது தெரிந்த நிலையிலும் எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார். மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பெரும்பான்மை வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்து தெரிவிக்கையிலே அமைச்சர் இதனை தெரிவித்தார். புதிய தேர்தல்…

Read More

இன அழிப்பிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: பிரித்தானியா

ரோஹிங்கிய இனத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு காரணமானவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. மியன்மாரின் ரோஹிங்கிய முஸ்லீம் இனத்தவர்களுக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா. இன்று (திங்கட்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பின்னர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான கொடூரமான செயற்பாடுகளுக்கு காரணமானவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக் கூடாததென பதில் வெளிவிவகார அமைச்சர் (JUNIOR FOREIGN MINISTER) மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

Read More