பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டது கிரேக்கம்

கடன் சுமையை சமாளிக்க யூரோ வலய நாடுகளின் கடன் பிணை திட்டத்தை கிரேக்கம் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இதன்படி கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக கிரேக்கம் நிதி சந்தைகளில் கடன் வாங்குவதில் இருந்து விடுதலை பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் கிரேக்கத்திற்கு ஐரோப்பிய மண்டலம் 61.9 பில்லியன் யூரோக்களை வழங்கியது. இது நாட்டின் மோசமான பொருளாதார நிலையில் இருந்து மீண்டுவர கிரேக்க அரசுக்கு உதவியது. இதன்போது உலக நிதி வரலாற்றில் வழங்கப்பட்ட மிகப்பெரிய கடன் பிணை தொகையான 260 பில்லியன் யூரோ உதவியை சர்வதேச நாணய நிதியம் 2010 ஆம் ஆண்டு கிரேக்கத்திற்கு வழங்கியது. இந்த கடனுக்கான நிபந்தனையாக கிரேக்க அரசு நாட்டில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் கிரேக்க பொருளாதாரம் மெதுவாக வளர்ச்சி கண்டு வருகிறது. எனினும் அந்த நாடு பொருளாதார நெருக்கடிக்கு…

Read More

பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்பதற்கு 46 வீதம் கட்சிகள் தயார்

பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் என்று ‘இந்தியா டுடே_ – கார்வி இன்சைட்ஸ்’ நடத்தியகருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘இந்தியா டுடே_ – கார்வி இன்சைட்ஸ்’ அமைப்பு இணைந்து இந்தியா முழுக்க கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. பல முக்கியமான விஷயங்கள் குறித்து இதில் மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. ‘எதிர்க்கட்சிகளின் கூட்டணி ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்குமா’ என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கான பதில்கள் வெளியாகி உள்ளன. ‘காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் ராகுல் காந்தி சிறப்பாக செயல்படுவாரா, எதிர்க்கட்சிகளுடன் இணக்கமாக இருப்பாரா, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துவாரா’ என்ற கேள்விக்கு 47% மக்கள் சாதகமாக பதில் அளித்துள்ளனர். 36 சதவீத மக்கள் எதிராக பதில் அளித்துள்ளனர். 17…

Read More

முச்சக்கர வண்டிகளை கண்காணிக்க ஆணைக்குழு

*சாரதிகளுக்கு வயதுக்கட்டுப்பாட்டை கொண்டுவருவது அடிப்படை உரிமை மீறல் *12 இலட்சம் பேர் உள்ள துறையில் வயதுக் கட்டுப்பாடு பெரும் பாதிப்பு முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வயதுக் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவது அடிப்படை உரிமை மீறலாக அமைந்துவிடும் என நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளை கண்காணிப்பதற்கு விசேடமான ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முச்சக்கர வண்டி சாரதிகளாவதற்கு 35 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற போக்குவரத்து அமைச்சின் புதிய யோசனை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்ட தனது நிலைப்பாட்டை வெளியிட்டார். எமது நாட்டில் உள்ள ஒரு நபர் தனக்கு விரும்பிய…

Read More

சவூதியில் புழுதிப் புயல் அரபாவை நோக்கிய பயணம் தாமதிப்பு

சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரிகர்கள் கூடி இருக்கும் பகுதியில் கடந்த ஞாயிறு இரவு கடும் புழுதிப் புயல் வீசியதால் யாத்திரிகர்கள் மினாவில் இருந்து அரபாவை நோக்கி பயணிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அந்தப் புழுதிப் புயல் நின்ற பின் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையின் முக்கிய அம்சமான அரபாவை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் பாலைவன சமவெளியான அரபா நோக்கி பயணிக்க ஆரம்பித்த யாத்திரிகர்கள் அங்கு அரபா மலைக்கு அருகில் தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஒருநாளை கழித்தனர். யாத்திரிகர்கள் தங்கியிருக்கும் மினா கூடாரங்கள் மீது புயல் காற்று கடுமையாக வீசியதே அரபா பயணத்தில் தாமதத்தை ஏற்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர். இதனால் யாத்திரிகர்கள் அரபா பயணத்திற்கு அனுமதி கிடைக்கும் வரை தமது கூடாரங்களில் காத்திருந்தனர். இந்த புழுதிப் புயல் காரணமாக ஞாயிறு இரவு…

Read More

தமிழின எதிர்கால இலக்கை சிதைத்து விட வேண்டாம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர்கால இலக்கினைச் சிதைத்து விட வேண்டாமென என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறிவுரை கூறியுள்ளார். பலர் இதனைச் செய்வதற்கு முனைப்பாக உள்ளனர். நீங்கள் ஒரு பெரிய மனிதர், தூர நோக்கு டையவர் இத் தவறினைச் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன். கடந்த கால உயிர்த் தியாகங்களுக்கு அர்த்தம் தேட வேண்டும். தயவுசெய்து அழித்து விடாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று முன்தினம் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் போரளிகளையும், மாவீரர் குடும்பங்களையும் உள்வாங்கி புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான சில யோசனைகள் கடந்த காலத்தில் என்மனதில் எழுந்ததுண்டு. எம்மினத்திற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்ய துணிந்தவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தால் இதைவிட இரண்டுமடங்கு…

Read More

ராஜபக்ஷ இன்னும் திருந்தவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தன்னை ஒரு உருக்கமான மனிதாபிமானமுள்ள தலைவராகக் காட்டிக் கொண்டாலும் அவரது ஆட்சி காலத்தில் அமைச்சர்களையும் விலங்குகளைப் போல திட்டியதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சிரேஸ்ட அமைச்சர்கள்கூட மஹிந்தவினால் கேவலமாக நடத்தப்பட்டதாக பெலியத்த அங்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி தனது செயலாளரை திட்டிய காணொளி வௌியாகியுள்ளதாகவும் அதன்மூலம் பதவிஇன்றியும் அவர் திருந்தவில்லை என மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Read More

உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது: இறுதி பட்டியலில் விஜய்

ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற சிறந்த சர்வதேச நடிகருக்கான இறுதி பட்டியலில் நடிகர் விஜய்யின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆவது படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு…

Read More

சிறுவனின் போராட்டத்தால் வெற்றி

பசிபிக் பெருங்கடலில் உள்ள நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புகலிட கோரிக்கையாளர்களை நாட்டுக்குள் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில், அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. பன்னிரெண்டு வயதான ஈரான் சிறுவன் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் அவுஸ்திரேலியாவில் காத்திரமான ஒரு கோரிக்கைக்கு வழிவகுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் ஆயிரகணக்கான மக்கள் நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த தீவில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பன மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் 119 சிறார்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய கடல் தடுப்புக் கொள்கை தரப்பு தனது கண்டனத்தை வௌியிட்டுள்ளது. நவ்ரு தீவுக்கான வசதிகள் நாட்டின் கடுமையான குடியேற்றக் கொள்கையின்…

Read More

விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பம்

பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார். பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றத்தை அமைப்பதறங்கான சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த விஷேட மேல் நீதிமன்றத்தின் நீதியரசர்களாக சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

நீதிமன்றம் செல்கிறார் பீரிஸ்!

2019 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியுமா என்பது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக, உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோரவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அரசியலமைப்பின் 125 ஆவது பிரிவின் கீழ், மாவட்ட நீதிமன்றம் ஒரு தீர்ப்பு பற்றிய விவகாரத்தை உச்சநீதிமன்றத்திடம் பாரப்படுத்த முடியும். அந்த விடயம் தொடர்பான தமது முடிவை, உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்குள், மாவட்ட நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசியலமைப்புக் குறித்து உச்சநீதிமன்றம் மாத்திரமே விளக்கமளிக்க முடியும். தேவைப்பட்டால், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் என்ற வகையில், மாவட்ட நீதிமன்றத்தை நாடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஜனாதிபதி மாத்திரமே, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோர முடியும் என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியிருந்தார்.…

Read More