வழமை நிலைக்குத் திரும்பும் கேரளா: நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தீவிரம்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை குறைவடைந்து வருவதால், குறித்த பகுதிக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 370 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், சுமார் 30,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு காணாத பாரிய வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் கேரளா மாநிலம் முழுவதும் சுமார் 20,000 கோடி ரூபா அளவிற்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கத்தார் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்கவுள்ளதாக நேற்று 919) அறிவித்தது. தமிழக அரசின் சார்பில் 10 கோடி, டில்லி அரசின் சார்பில் 10 கோடி ரூபா, தெலுங்கானா அரசின் சார்பில் 25 கோடி ரூபா, பீஹார் அரசின் சார்பில் 10 கோடி…

Read More

வெலிகம ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் ஆரம்பம்

வெலிகம ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (19) இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்து ரவைகள், மற்றும் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மதுபோதையுடன் சிலர் இருந்ததுடன்,வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

Read More

ஆனமடுவ ஹோட்டலின் உடைமைகளை சேதப்படுத்திய மூவர் கைது

ஆனமடுவ – ஆண்டிகம பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஆனமடுவ – ஆண்டிகம பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்குள் நேற்று முன்தினம் (18) நுழைந்த சிலர் அங்கிருந்த உடமைகளை சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தேர்தல் தாமதமடைவது தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் தாமதமடைவது தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். தற்போது மாகாணசபைத் தேர்தல் முறைக்கான பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளனர். அந்த முறைமைக்கு எந்தத் தொகுதி என்பதை முதலில் அடையாளங்காண வேண்டும். எந்தெந்த தொகுதி என தற்போது அறிக்கையும் தயார் செய்துள்ளனர். தொகுதி பிரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் காணப்படும் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தைத் தாண்டி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லக்கூடிய அதிகாரத்தை வழங்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் முக்கியமானதொரு வழக்கு தீர்ப்பும் காணப்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தாமதமடைவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சரும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும் குறிப்பிடப்பட்டிருந்தனர். நாங்கள் அந்த…

Read More

25 வகை மருந்துகளின் விலை குறைப்பு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 25 வகை மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் குறைக்கப்படவுள்ள 25 வகை மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். தொற்றா நோய் தொடர்பாக ஆராயும் பேரவை கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் 7 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை அரசாங்கம் செலவிட்டு வந்தது. இந்த நிலையில், புற்று நோய்க்கான 95 சதவீதமான மருந்து வகைகளின் விலைகளை அரசாங்கம் இதுவரை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விமல் கைதாகாமல் தப்பிக்க ரணில் காரணம் – ரங்கே

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, சிறைக்கு செல்லாது தப்பிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அவருக்கு உதவியதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். புத்தளம் – ஆனமடுவ, சிரம்பியடி பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சட்டவிரோதமான கடவுச்சீட்டை பயன்படுத்துவது சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய குற்றம் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொண்டு வந்த சட்டத்திற்கு அமைய, அந்த குற்றத்திற்கு பிணை வழங்க முடியாது. குற்றம் தொடர்பான வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் இருக்க வேண்டும். எனினும் விமல் வீரவங்சவுக்கு மாத்திரம் அந்த சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Read More

எகிப்தில் இணையத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு

எகிப்தில் இணைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மூலத்தில் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் ஸீஸி கையொப்பமிட்டுள்ளார். சைபர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அவர் இந்த சட்ட மூலத்தில் கையொப்பமிட்டுள்ளார். இணையத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில், இணைய வழித்தாக்குதல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளமையால் அவர் இந்தக் கட்டுப்பாட்டை விதித்துள்ளார். இதன்மூலம் சைபர் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது. எகிப்தில் இதுவரையில் 500 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பல நாடுகளிலும் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Read More