பிஜி தீவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு ஆபத்தில்லை

தென் பசுபிக் கடலிலுள்ள பிஜி (Fiji), டொங்கா (Tonga) தீவுகளுக்கு அருகில் (பிஜி : அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அருகில்) கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 559 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள குறித்த நிலநடுக்கம், 8.2 மெக்னிடியூட் என பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில நடுக்கம் கடலினுள் மிக மிக ஆழத்தில் ஏற்பட்டுள்ளதனாலும் பெறப்பட்டுள்ள ஏனைய தகவல்களுக்கு அமைவாகவும், சுனாமி ஏற்படும் பாதிப்பு இல்லை என, பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தை உணர முடியுமாக இருந்த போதிலும், இதனால் நில மேற்பரப்பில் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே காணப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த நிலநடுக்கம் காரணமாக, இலங்கைக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என,…

Read More

மஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்

எதிர்கட்சித் தலைவர் பதவியை கோருவதை நிறுத்திவிட்டு, அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூட்டு எதிர்கட்சியிடம் அமைச்சர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார். கண்டியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருதற்கு ஒத்துழைப்பு வழங்கி, தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண இடமளிக்குமாறும் அவர் கூட்டு எதிர்கட்சியிடம் கோரியுள்ளார். அதன் பின்னர் எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற முற்சிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் போது, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனே பதவியை விட்டுக் கொடுப்பார் எனவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தை கைப்பற்றுவதாக கூறிவந்தவர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லையை அதிகரிக்க மங்கள எதிர்ப்பு

முச்சக்கரவண்டிச் சாரதிகளின் வயதெல்லையை 35ஆக அதிகரிக்கும் யோசனைக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “முச்சக்கர வண்டிச் சாரதிகளின் வயதெல்லையை 25ஆக குறைப்பது குறித்து, அத்துறைசார் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியிருந்தேன். சாரதிகளின் வயதெல்லையை 35ஆக அதிகரிப்பதால், பெருமளவான முச்சக்கர வண்டிச் சாரதிகளின் தொழில் நடவடிக்கைகள் பாதிப்படையும் அபாயம் காணப்படுகின்றது. சாதாரணமாக எமது நாட்டில் அதிகளவிலான சாரதிகள் 35இலும் குறைந்த வயதெல்லையைக் கொண்டிருக்கின்றனர். இதனால் வயதெல்லையை அதிகரிப்பதானது அவர்களது வாழ்வாதாரத்தினைப் பாதிக்கும். எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதுடன் வயதெல்லையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

யாழ். காரைநகரில் ஹெல்மெட்டால் தாக்கி ஒருவர் கொலை

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் ஹெல்மெட்டினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடையாளந் தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (18) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளா​ர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததையடுத்து, அவர் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறிய ரக லொறியொன்றில் வந்த மூவர், குறித்த நபரை கைகள், கால்கள் மற்றும் ஹெல்மட்டினாலும் தாக்கியுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காரைநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து ஆராய்வதற்கு பிரதேச மட்டத்தில் குழுக்கள் ஸ்தாபனம்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதேச மட்டத்தில் 330 குழுக்களை ஸ்தாபிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. சகல மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் இந்த குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரியொருவர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். இதன்முதன் கட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Read More

மேலதிக கட்டணங்களின்றி தென்னிந்தியாவின் எந்தவொரு விமான நிலையத்திற்கும் செல்வதற்கான வசதி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்குப் பயணிப்பதற்காக விமான சீட்டுக்களை பெற்றுக்கொண்ட பயணிகளிடம், மேலதிக கட்டணங்களை அறவிடாமல் தென்னிந்தியாவின் எந்தவொரு விமான நிலையத்தையும் அவர்கள் சென்றடைவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால், கொச்சின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் நலன்கருதி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் ஒரு கட்டமாக கொச்சினுக்கு செல்லவுள்ள பயணிகளிடமிருந்து மேலதிக கட்டணங்களை அறவிடாமல் தென்னிந்தியாவின் எந்தவொரு விமான நிலையத்தையும் அவர்கள் சென்றடைவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பிலான மேலதிக தகவல்களை 1979 என்ற தொலைபேசிக்கு அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 00 91 48 42 61…

Read More

சிலாபத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 18 பேர் கைது

சிலாபம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (18) இரவு நள்ளிரவு முதல் இன்று (19) அதிகாலை வரை, 4 மணித்தியாலங்கள் வரை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா, மதுபானம் ஆகியவற்றை வைத்திருந்தமை மற்றும் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

முறிகள் மோசடி குறித்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

முறிகல் மோசடி தொடர்பிலான அறிக்கையின், சில ஆவணங்களை வௌியிடுவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரூடாக சபாநாயகருக்கு இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதிசெயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சில ஆவணங்களை வௌியிடும் பட்சத்தில் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என சட்டமா அதிபரால் உறுதியளிக்கப்பட்ட ஆவணங்களே இவ்வாறு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர், ஆவணங்களை வௌியிடுவது குறித்து கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற பிரதிசெயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Read More

வாஜ்பாயின் பூதவுடல் அக்கினியில் சங்கமம்

இராணுவ மரியாதை, வேதமந்திரம் முழங்க இந்திய முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை அக்கினியில் சங்கமமானது. இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உடல், வேதமந்திரங்கள் முழங்க தகனம் செய்யப்படும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்குகளை செய்தனர். வாஜ்பாயின் உடல் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டன. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகள் நடந்த போது அவ்விடம் வாஜ்பாயின் தோற்றம் போலவே அமைதியாகக் காணப்பட்டது. அங்கு ஒரு ஆழ்ந்த சோகம் காணப்பட்டதை உணர முடிந்தது. இறுதிச் சடங்கு நடைபெறும் ஸ்மிருதி ஸ்தல்லில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். முப்படை தளபதிகள் இறுதி மரியாதையுடன் பாதுகாப்புத் துறை…

Read More

கேரளா வௌ்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 324ஆக உயர்வு

கேரளாவில் கடும் மழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த கடும் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உட்பட மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 97 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரளாவில் சமீபத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர்…

Read More