கேரளாவில் தொடரும் வௌ்ள அனர்த்தங்கள்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு

கேரளாவில் தொடரும் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. இடம்பெயர்ந்த சுமார் 250,000 பேர் 1500-இற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வௌ்ள அனர்த்தத்தை கேரளா எதிர்கொண்டுள்ளது. நிவாரணம் வழங்குதல் மற்றும் மீட்புப் பணிகளில் 125 மீட்புக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. அத்துடன், 4 விமானங்கள் மற்றும் 3 கரையோர பாதுகாப்பு கப்பல்கள் மீட்புப் பணிகளில் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளன. கேரளாவின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வௌ்ளத்தில் சிக்குண்டுள்ள நிலையில், அவர்களை வான் மார்க்கமாக மாத்திரமே மீட்க முடியும் என்பதால் மேலதிக ஹெலிகொப்டர்களை பாதுகாப்பு அமைச்சிடம் கேரள முதல்வர் கோரியுள்ளார்.

Read More

ஐ.நா-வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் காலமானார்

நோபல் பரிசு பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் காலமானார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோஃபி அன்னான் தனது 80 ஆவது வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 7 ஆவது செயலாளராக பதவி வகித்தவர் கோஃபி அன்னான். 1938 ஆண்டு கானாவில் பிறந்த அவர், 1997 ஆம் ஆண்டில் ஐ.நா-வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். “ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக” கோஃபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பதவி ஓய்விற்குப் பின்னர் 2012 ஆம் ஆண்டு வரை சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக செயற்பட்டார். சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த…

Read More

கடன்களை மீள செலுத்தினால் அபிவிருத்தியை எவ்வாறு மேற்கொள்வது: பிரதமர் கேள்வி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊருபொக்க பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். நல்லாட்சி அரசாங்கத்திற்கு மூன்று வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டும் தெனியாய – பஸ்கொட பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு 25 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, ஆயிரம் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். நீங்கள் மேற்கொண்ட அபிவிருத்திகள் எங்கே என எங்களிடம் கேட்கின்றனர். இவர்களின் கடன்களை செலுத்தினால் நாங்கள் எங்கே அபிவிருத்தியை மேற்கொள்வது? மஹிந்த ராஜபக்ஸவின் ஒரு அமைச்சு தொடர்பில் கூறுகின்றேன். பெருந்தெருக்கள் அமைச்சு… நாங்கள் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் அவர் கையகப்படுத்தியிருந்த இடங்களுக்காக 40,000 மில்லியன் நட்ட…

Read More

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவானது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது. இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப்பும் போட்டியிட்டனர். இதில் 176 வாக்குகளைப் பெற்று இம்ரான் கான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷாபாஸ் ஷெரீஃப்பிற்கு 96 பாராளுமன்ற உறுப்பினர்களின்…

Read More

”இவன் ஒரு முட்டாள் – தள்ளிப்போ” செயலாளரை கண்டிந்துகொண்ட மகிந்த

சிரேஸ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு. பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் நேற்று இரண்டரை மணி நேரம் விசாரிக்கப்பட்டது. கொழும்பு 07, விஜயராம வீதியில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் இலத்திற்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்குப் பின்னர், அதுகுறித்த கேட்டறிவதற்காக ஊடகவியலாளர்கள் வெளியே கூடியிருந்தனர். விசாரணைகளின் பின்னர் வெளியே வந்து தனது ஆதரவாளர்களிடம் பேசிவிட்டு, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், வெளியே ஆதரவாளர்கள் அதிகளவில் கூடியிருந்ததால், வெளியே நின்றுகொண்டிருந்த ஊடகவியலாளர்களை வீட்டு வளாகத்திற்குள் அழைக்க முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதித லொகு பண்டார நடவடிக்கை எடுத்திருந்தார். பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டு, ஊடகவியலாளர்கள் உள்நுழைந்ததால் குழப்பமடைந்த மகிந்த ராஜபக்ச, ”நான் வெளியில் சென்று இவர்களைச் சந்திக்கவிருந்தேன். இப்போது…

Read More