18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் கோலாகலமாக ஆரம்பம்

18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. ஆசிய விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண வைபவம் கண்கவரும் விதத்தில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஆசிய விளையாட்டு விழா நடத்தப்பட்டு வருகின்றது. இம்முறை ஜெலோரா கன் கர்னோ விளையாட்டரங்கில் நடைபெற்ற அங்குரார்ப்பண வைபவம் கண்களுக்கு விருந்தளித்தது. இந்தோனேஷியாவின் பாரம்பரியத்தை உலகுக்கு உணர்த்தும் கலாசார நடனங்கள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின. ஆசியாவின் பலம் என்பதே இந்த முறை விளையாட்டு விழாவின் தொனிப்பொருளாகும். விளையாட்டு விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 10,000-ற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பஙகேற்பதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து இந்த முறை 177 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற பளு தூக்கல் வீராங்கனையான ஹங்ஷனி கோமஸ் அங்குரார்ப்பண வைபவத்தில் இலங்கையின்…

Read More

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் பாதிக்கப்படும் கைத்தொழில்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா?

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு பக்கசார்பான சில பிரிவினருடனான சந்திப்பின் பின்னர், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு கடந்த 15 ஆம் திகதி ஆவணமொன்றைத் தயாரித்திருந்தது. இந்த உடன்படிக்கையுடன் தொடர்புடைய கைத்தொழில்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த உடன்படிக்கையின் ஊடாக நாட்டின் தொழில்துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பல சந்தர்ப்பங்களில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கூறியிருந்தார். குறித்த ஆவணத்தின் 11 ஆவது பக்கத்திற்கு அமைய, இந்த உடன்படிக்கையின் ஊடாக நாட்டின் தொழில்துறைக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் கைத்தொழில்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நிதி நிலை தற்போதை அரசாங்கத்திடம் காணப்படுகின்றது எனின், உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட, சாலாவ ஆயுதக்களஞ்சியம் வெடித்ததில் பாதிக்கப்பட்ட, சாமசரகந்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம்…

Read More

14 மாணவர்கள் மரணம்; கல்வியை கைவிட்டோர் 1989

பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பகிடிவதை காரணமாக இதுவரை சுமார் 14 மாணவர்கள் மரணமாகியுள்ளதுடன் சுமார் 1989 மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சு நடத்திய ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். 2015/ 2016 கல்வியாண்டில் 1352 மாணவர்களும் 2016/ 2017 கல்வியாண்டில் 637 மாணவர்களும் பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்த பின்னர் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகங்களை விட்டுச் சென்றுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் 1998 ஆம் ஆண்டில் 20 ஆம் இலக்க பகிடிவதைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதுடன் பகிடிவதைகளை தவிர்ப்பதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். கலாசார அமைச்சில் நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு…

Read More

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி

மழையால் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொச்சிக்கு சென்றார். அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றதும் அப்பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் மீண்டும் கொச்சிக்கு திரும்பி தரையிறங்கியது. ஆய்வுப் பணி தாமதம் ஆனதால், மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக கொச்சியில்…

Read More

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை

ஞாயிற்றுக் கிழமை மற்றும் போயா தினங்களில் தனியார் பிரத்தியே வகுப்புக்களை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட உள்ளதாக புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறினார். ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 02.00 மணி வரை மற்றும் போயா தினங்களில் தனியார் பிரத்தியே வகுப்புக்களை தடை செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார். அனைத்து மதங்களினதும் வேண்டுகோள் படி அந்த அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இதனைக் கூறினார்.

Read More

இலங்கை வருகிறார் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இதுசுணோரி ஒனோஜெரா (Itsunori Onodera) எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய விஜயத்தின் போது அவர் 20ம் திகதி இலங்கைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் இதுவாகும். அவர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Read More

நயன்தாரா சம்பளம் 4 கோடி

நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா படங்கள் பெரிய கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் கதாநாயகர்கள் இல்லாத கதைகளை அவருக்காகவே தயார் செய்து கால்ஷீட் கேட்டு இயக்குனர்கள் மொய்க்கிறார்கள். கடந்த வருடம் வெளிவந்த அறம் படத்துக்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் மேலும் உயர்ந்து இருக்கிறது. கோலமாவு கோகிலா படத்தையும் கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவை முதன்மை படுத்தியே எடுத்து திரைக்கு கொண்டு வருகிறார்கள். விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு அதிகாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடுவதுபோல் கோலமாவு கோகிலா படத்துக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடுகிறார்கள். தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகையை முதன்மைப்படுத்திய எந்த படத்துக்கும் இதுபோல் சிறப்பு காட்சிகள் திரையிட்டது இல்லை என்கின்றனர். தற்போது நடித்து வரும் இமைக்கா…

Read More

மக்களின் வரிப்பணத்தில் Jaguar காரை கொள்ளவனவு செய்யவுள்ள குருநாகல் மாநகர சபை மேயர்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை 125 வீதத்தால் அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது. இதேவேளை, குருநாகல் மாநகர சபை மேயர் 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியுடைய Jaguar ரகக் காரொன்றை கொள்வனவு செய்யத் தயாராகுகின்றமை தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது. இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் குருநாகல் மாநகர சபைக்காக போட்டியிட்டு, அதன் மேயராக துஷார சஞ்ஜீவ தெரிவு செய்யப்பட்டார். இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய மாவட்டமான குருநாகல் மாவட்டத்தில் 10 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்றியும் 20 வீதத்திற்கும் அதிகமானவர்கள் அடிப்படை வசதிகளின்றியும் இருக்கின்றமை 2016 ஆம் ஆண்டு மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. தனது வீட்டில் இருந்து மாநகர சபைக்கு சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரமே மேயர் பயணிக்க வேண்டியுள்ளது.…

Read More

பெண்ணைக் கொலை செய்ய முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள்: விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பெண்ணொருவரை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆம் திகதி பொலிஸ் கான்ஸ்டபிளினால் குறித்த பெண்ணை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 51 வயதான பெண் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், இது குறித்த விசாரணைகள் பொலிஸ் மா அதிபரினால் இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டது.

Read More

காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த கஞ்சாப்பொதி

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து கேரளக்கஞ்சா அடங்கிய பொதியொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடலில் மிதந்த நிலையில் கஞ்சாப் பொதி கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பொதியில் 87 கிலோ கேரளக்கஞ்சா காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதி காங்கேசன்துறை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிராஞ்சி கடற்பரப்பில் 1.6 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது. நேற்றிரவு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியை மேலதிக விசாரணைகளுக்காக நாச்சிக்குடா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

Read More