நல்லாட்சி எனும் சொல் சீர்குலைந்துள்ளது: கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க

நல்லாட்சி எனும் சொல் தற்போது சீர்குலைந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்தார். அரச சேவையில் அதிகளவில் முறைகேடுகள் இடம்பெறும் நாடுகளில் முதன்மையாகவுள்ள இலங்கையின் முறைகேடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் நிறுவனமே கணக்காய்வாளர் திணைக்களம் என காமினி விஜேசிங்க சுட்டிக்காட்டினார். நல்லாட்சி அரச துறைகளில் இருக்க வேண்டிய முக்கியமான விடயம் அரச ஊழியர்களின் நேர்மை எனவும் அதனை கட்டியெழுப்புவதற்கான திட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கும் பாரிய பொறுப்புக்கள் தம்வசம் உள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Read More

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மலையகத்தில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது. செனன் பகுதியில் இன்று மாலை மீண்டும் மண் சரிவு ஏற்பட்டமையால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில், மாலை வேளையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. தற்போது ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணிப்போர் வனராஜா சந்தியூடாக காசல்ரீ சென்று அங்கிருந்து நோட்டன் பிரிட்ஜ் ஊடாக ஹட்டன்…

Read More

வெப் சீரியலாக தயாராகிறது சில்க் ஸ்மிதாவின் வரலாறு

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியலாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி மற்றும் காலா படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் திரைப்படமாக வெளிவந்துள்ள நிலையில் தற்போது வெப்சீரியலாக விரைவில் வெளிவரவுள்ளது. தற்போது ஹிந்தியில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு குறித்த வெப் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் சில்க்ஸ்மிதாவின் சீரியலும் அதேபோன்று வெப் சீரியலாக வரவுள்ளது. இந்த வெப் சீரியலில் திரைப்படங்களில் வெளிவராத சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை குறித்த தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நாளை கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தை நாளை (17) நடைபெறவுள்ளது. நாளை காலை 9.30-க்கு இராஜகிரியவில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்

Read More

நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வென்று நாளை பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான் கான்

பாகிஸ்தானின் பிரதமராக நாளை (18) பதவியேற்கவுள்ள இம்ரான் கானுக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பில் 176 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து அண்மையில் தேர்தல் இடம்பெற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீஃப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும் மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் ஆரம்பத்தில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன. ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின்…

Read More

வாஜ்பாயின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார் லக்ஷ்மன் கிரியெல்ல

இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற அட்டல் பிஹாரி வாஜ்பாயின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று அதிகாலை இந்தியாவிற்கு பயணமானார். இலங்கை அரசின் சார்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்னாள் பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளார். இதேவேளை, இந்தியா தனது மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாஜ்பாய் மிக சிறந்த தலைவர் மட்டுமல்லாது அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்ட வழிவகுத்தவர் என இரா.சம்பந்தன் தனது இரங்கல் செய்தியில் மேலும் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இழப்பால் துயரத்தில் ஆழ்ந்துள்ள இந்திய மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை தமிழ் மக்கள் சார்பில் தமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்…

Read More

வௌ்ளத்தில் சிக்கிய நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சுமார் 2,23,000 பேர் வரை இடம்பெயர்ந்துள்ள நிலையில், நடிகர் பிரித்விராஜ் வீட்டிலும் வௌ்ளம் புகுந்துள்ளது. வௌ்ளத்தில் சிக்கிய பிரித்விராஜின் தாயார், பெரிய பாத்திரம் ஒன்றின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவிற்கு பலத்தமழை பெய்து வருகிறது. தமிழில் மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜின் வீடு கொச்சியில் உள்ளது. கொச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. பிரித்விராஜின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. பிரித்விராஜின் தாயாரும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அவரை 4 பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். பெரிய பாத்திரத்தில் அமர வைத்து வீட்டில் இருந்து வெளியே தூக்கி வந்துள்ளனர். அந்த படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மலையாளம்,…

Read More

திருவிழா எனும் பெயரில் திமிங்கலங்கள் கொலை: இரத்த சிவப்பாக மாறிய கடல் நீர்

டென்மார்க்கின் பரோயே தீவில் அதிகளவில் திமிங்கலங்கள் கொல்லப்படுவதால், அவற்றின் உடலில் இருந்து வெளியாகும் இரத்தம் காரணமாக கடல் நீர் சிவப்பாக மாறிவிடுகிறது. பரோயே தீவில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் முடிவில் கடலில் வாழும் திமிங்கலங்களைக் கொல்லும் திருவிழா நடைபெறுகிறது. இந்த தீவில் வாழும் மக்கள் கூட்டம் கூட்டமாக படகுகளில் கடலுக்குள் சென்று அங்கிருந்து திமிங்கலங்களை கரைக்கு ஓட்டி வந்து, பின்னர் கடற்கரையில் ஒதுங்கும் திமிங்கலங்களை கூரிய கத்தியால் வெட்டிக்கொல்கின்றனர். 5 வயது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை திமிங்கலங்களைக் கொல்லும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். இந்த திருவிழா அங்கு 16 ஆம் நூற்றாண்டில் இருந்து நடைபெற்று வருகின்றது. உலகம் முழுவதும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், இங்குள்ள மக்கள் அதை கண்டுகொள்வதில்லை.

Read More

மட்டக்களப்பில் சமுர்தி நிதி மோசடி: 8 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு சமுர்தி சமூக பாதுகாப்பு நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சமூக திணைக்கள பாதுகாப்பு மைய பகுதிக்கான 57 இலட்சம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது. அரச வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த சமூக பாதுகாப்பிற்கான நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டது. இது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, வைப்பிலிடப்பட்ட நிதிக்கான காசோலையில் போலியான கையொப்பமிடப்பட்டு 57 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நேற்று (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து, 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சமுர்தி திணைக்களத்தில் கடமையாற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கேரளாவில் வௌ்ளம்: உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு, 2,23,000 பேர் இடம்பெயர்வு

கேரளாவில் வௌ்ள அனர்த்தங்கள் காரணமாக கடந்த 8 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது. கேரளா முழுவதும் உள்ள 1,568 நிவாரண முகாம்களில் 52,856 குடும்பங்களைச் சேர்ந்த 2,23,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு வழங்கிய ஹெலிகொப்டர்கள் மட்டுமல்லாது மாநில அரசின் அதிகாரிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வௌ்ள நிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கேரளாவின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கனமழை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More