பலத்த காற்றினால் 80 இற்கும் அதிகமான வீடுகள் சேதம்

பலத்த காற்றினால் குருணாகல், வீரம்புகெதர பகுதியில் 80 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இருவர் காயங்களுக்கு உள்ளாகி குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (15) காலை ஏற்பட்ட பலத்த காற்றினால் வீரம்புகெதர, உடுகம, கதுருவெல்ல, எல்கம, செவென்தன ஆகிய பகுதிகளில் இருந்த பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மரம் முறிந்து விழுந்ததில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு வழங்கப்படும்

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்களாக இருந்தால், அதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் பல்வேறு வேற்றுமைகள் இருப்பினும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றாக இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சுயாதீனமாக வேண்டும் என்றால் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தனித்தனியாக கடிதம் மூலம் அறிவித்தால் அது தொடர்பில் பரிசீலணை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

செரீனா வில்லியம்ஸூக்கு வெற்றி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 1-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் லூகாஸ் போய்லியிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் ´நம்பர் வன்´ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் அவுஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Read More

தகவல்களை பெற்றுக்கொள்ளவதில் எவ்வித தடையும் ஏற்படவில்லை

கடந்த காலத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளவதில் எவ்வித தடையும் ஏற்படவில்லை என அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காகவே அரச அதிகாரிகள் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More

விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் ஐ.சி.சிக்கும் இம்மாதம் விசேட சந்திப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது எதிர்நோக்கியுள்ள நிர்வாகச் சிக்கல் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையை அறிவுறுத்துவதற்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் சிலகால அவகாசம் கோருவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக இம்மாதம் 28ஆம் திகதி துபாய் நோக்கி பயணமாகவுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு ஏற்கனவே வாக்களித்தவாறு, இலங்கைகிரிக்கெட் நிறுவனத் தேர்தலைஎதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாமல் போனால் இலங்கைக்கு ஐ.சி.சியின் உறுப்புரிமையை இழக்கநேரிடும். அத்துடன், கடந்த மாதம் அயர்லாந்தில் நடைபெற்ற ஐ.சி.சியின் 75ஆவது வருடாந்த கூட்டத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என ஐ.சி.சியின் நிறைவேற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது. இது…

Read More

ஜகார்த்தாவில் காற்று மாசடைவது அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை

ஆசிய விளையாட்டு ஆரம்பமாவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ஆரோக்கியமற்ற காற்று மற்றும் தெற்கு சுமத்ராவிலுள்ள பலேம்பங் வனப்பகுதியில் காட்டுத்தீ அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பரந்த மூலதனத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது உலகில் மிக மோசமான நிலையில் உள்ளது. அத்துடன், காற்றின் தரத்தை அதிகரிப்பதற்கு நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கும் இந்தோனேஷியா பாதுகாப்பற்றதாக உலக சுகாதார அமைப்பு வரையறை செய்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்துரைக்கும் ஜகார்த்தா குடியிருப்பாளர் ஒருவர், உடல் ஆரோக்கியத்தில் கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தலைநகரின் காற்றின் தரத்திற்கு போக்குரத்து முறையே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ‘காற்றின் தரம் மிகக் கவலையளிப்பதாகவும் அடுத்த தலைமுறைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதுடன் உடல்நிலைக்கு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது’ என்கிறார். அதே போன்று பொதுப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படவில்லை. பழைய வாகனங்கள் மாசாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை…

Read More

மணலுடன் தங்கம் கலந்து ஏற்றுமதி செய்யும் மோசடி? பந்துல குற்றச்சாட்டு

மணலுடன் தங்கத்தைக் கலந்து தங்க மணல் ஏற்றுமதி செய்யும் வேலைத் திட்டமொன்று குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இதுகுறித்த விசாரணைகள் அரசாங்கத்தின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுவதாக அவர் மேலும் தெரிவித்தார். தங்கம் கலந்த மணல் கொள்கலன்கள் பலவற்றை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாகவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் (14) அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார். இலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தத்திற்கமைய எதிர்காலத்தில் இவ்வாறான மோசடி செயல்கள் இலகுவாக செய்ய முடியும் எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் 1815 மத்திய மலைநாட்டு ஒப்பந்தத்தைவிட அபாயகரமானது எனவும் அவர் கூறினார். கொழும்பு நகரில் ஓட்டல்கள், வங்கிகள், பெறுமதியான காணிகள் உள்ளிட்ட சொத்துக்களைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து…

Read More

பிரதமர் ரணில் நேற்று கிளிநொச்சி விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (14 ) கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார். நேற்று இரவு ஏழு மணியளவில் கிளிநொச்சிக்கு வருகை தந்த அவர் கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருகிலுள்ள தும்பினி விகாரைக்குச் சென்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடியதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டார். இரவு கிளிநொச்சியில் தங்கியிருந்த பிரதமர் இன்று (15) மன்னார் மடு தேவாலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவாரென என தெரியவருகிறது.

Read More

அமெ. மின்னணு சாதனங்களை புறக்கணிக்க திட்டமிடும் துருக்கி

துருக்கியில் தடுத்து வைத்திருக்கும் அமெரிக்க பாதிரியார் விவகாரத்தில் துருக்கி மீது அமெரிக்கா கொண்டுவந்த தடைகளுக்கு பதிலடியாக அமெரிக்காவின் மின்னணு சாதனங்களை புறக்கணிக்கப்போவதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்க மின்னணு பொருட்களை நாம் புறக்கணிப்போம்” என்று தொலைக்காட்சியில் உரையாற்றிய எர்துவான் குறிப்பிட்டார். “(அமெரிக்காவிடம்) ஐபோன் இருந்தால் மறுபக்கம் சாம்சுங் உள்ளது” என்று அவர் கூறினார். இதில் அமெரிக்க நிறுவனமான ஆப்பிளின் கைபேசியையே அவர் குறிப்பிட்டு கூறியிருந்தார். சாம்சுங் தென் கொரியாவில் உற்பத்தி செய்யப்படும் கைபேசி ஆகும். “எம்மிடம் வீனஸ் மற்றும் விஸ்டன் உள்ளது” என்று எர்துவான் கூறினார். இவை துருக்கியில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகும். தீவிரவாத குற்றச்சாட்டில் அமெரிக்க பாதிரியார் அன்ட்ரூ பிருன்சன் துருக்கியில் தடுத்துவைக்கப்பட்டிருப்பது இரு நேட்டோ கூட்டணி நாடுகளுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க டொலருக்கு இணையாக…

Read More

ஆளுநர் எழுத்து மூலம் அறிவித்தால் இராஜினாமா

வடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக எழுத்து மூலம் முதலமைச்சருக்கு ஆளுநர் அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலனை செய்யப்படுமென வடமாகாண மகளிர் விவகார,கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தற்கால நிைலமைகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (14) மாலை மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென ஆளுநர் உரையாற்றியமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்ைகயிலேயே மாகாண அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதென ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர் தெரிவித்ததாவது, வடமாகாண ஆளுநர், அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், எழுத்து மூலம் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இராஜினாமா தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல்கள், எதுவும், முதலமைச்சருக்கோ எமக்கோ…

Read More