கொழும்பு – கொச்சின் விமான சேவை இடைநிறுத்தம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம் காரணமாக, கொழும்பு (CMB) மற்றும் இந்தியாவின் கொச்சி (COK) நகருக்கும் இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று (15) முற்பகல் 9.00 மணிக்கு புறப்படவிருந்த UL 165 விமான சேவை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மறு அறிவித்தல் வரை, குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

Read More

சுவாசிக்க ஆரம்பித்து மூன்று வருடங்கள்

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக உள்விவகார பிரதியமைச்சர் ஜே.சீ. அலவதுவல தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாத்து தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்கும் போது, நாடு அனைத்து வழிகளையும், நெருக்கடியைச் சந்தித்திருந்ததாகக் கூறினார். தற்போது இந்த நெருக்கடிகளை நீக்கிக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நல்லாட்சி அசராங்கம் நாட்டை வழிநடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் செய்யும் நல்ல பணிகளை ஊடகங்கள் பேச மறந்துவருவதாகவும், ஊடகங்கள் இதுகுறித்து இன்னமும் பேச வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

பலத்த காற்றினால் வீடுகள் பல சேதம்: அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிக மழை காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – காரைநகர், கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரம் பகுதியில் நேற்றிரவு வீசிய கடும் காற்றினால் ஒரு வீடு முற்றாகவும் நான்கு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, நேற்றிரவு வீசிய கடும் காற்றினால் வலிகாமம் மேற்கு – பொன்னாலை பகுதியில் உள்ள மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடனான வானிலையால் செலகம தோட்டத்தின் 15 லயன் குடியிருப்புகளின் கூரைத்தகடுகள் வீசி எறியப்பட்டுள்ளன. இதனால் 15…

Read More

FCID ஐ எதிர்க்கும் அமைச்சர் ராஜித்த

பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு (FCID) தனது கடமையை சரிவர செய்யவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். பியகம பிரதேசத்தில் நேற்று (15) நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”பாரிய நிதி மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. சிறிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தப் பிரிவு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் தற்போது அரச சேவையும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.” என்று சுட்டிக்காட்டினார். ”FCID பெரிய திருடர்களை பிடிக்கவே முயற்சித்தது. எனினும், சிறு குற்றவாளிகளே பிடிபட்டனர். அரச ஊழியர்களின் குற்றங்கள் குறித்தும் விசாரிக்குமாறு கேட்டிருந்தோம். பாரிய குற்றங்கள் குறித்து விசாரிக்கவே இதனை ஸ்தாபித்தோம். எனினும், அவர்கள் 1000, 500 ரூபா களவாடியவர்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதனால் அரச சேவையில்…

Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யத் தீர்மானம்

ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்சென்று சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், எதிர்வரும் 17 ஆம் திகதி வாக்குமூலமொன்றைப் பதிவு செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் காலை 10 மணியளவில் இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதிக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டும் அதற்கு பதிலளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவினால், சபாநாயகர் கரு ஜெயசூரியவினூடாக குற்றப்புலாய்வுத் திணைக்களத்துக்கு வாக்குமூலமொன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் உதவி வழங்கிய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்…

Read More

காபூலில் கல்வி நிலையம் மீது தாக்குதல்: 48 பேர் கொலை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 67 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காபூலிலுள்ள கல்வி நிலையமொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பரீட்சைக்காக மேலதிக வகுப்புகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஷியா முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. ஐ.எஸ் பயங்கரவாதிகளால் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாரதியார் எழுதியது போல் இந்தியா மகாதேசமாக உருவெடுக்கும் – நரேந்திர மோடி

மகாகவி பாரதியார் எழுதியது போன்று இந்தியா மகாதேசமாக உருவெடுக்கும் என சுதந்திர தின உரையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்துத் தடைகளையும் களைவது எப்படி என்பதையும் இந்தியா உலகிற்கு காட்டும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் 72ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வந்த அவருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, செங்கோட்டையில் நாட்டின் மூவர்ணக் கொடியை மோடி 5ஆவது முறையாக ஏற்றி வைத்துள்ளார். இதேவேளை, Ayushman Bharat என்ற பெயரிலான மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் மோடியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 50 கோடி இந்தியர்கள் பயன்பெறவுள்ளனர். பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களுக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்…

Read More

சீரற்ற காலநிலை; மேல் கொத்மலை உள்ளிட்ட வான்கதவுகள் திறப்பு

அதிக மழை காரணமாக, மேல் கொத்மலை மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக அதன் 5 வான்கதவுக்ள திறக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள், இன்று (15) தன்னியக்க முறையில் திறக்கப்பட்டுள்ளதோடு, லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 2 திறக்கப்பட்டுள்ளதால் தாழ் நில மட்டத்தில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், கெனியொன் (Canyon), நோர்ட்டன் பிரிடஜ், பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Read More

தண்டனை கொடுக்கும் போது…

சாருஹாசன், ஜனகராஜ், கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ´தாதா 87´. விஜய்ஸ்ரீ இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவுதமி பேசும்போது, ´´இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான செய்தி பற்றிப் பலரும் பேசினார்கள். ´பெண்களைக் கொடுமைப்படுத்தினால், அவர்களைக் கொளுத்த வேண்டும்´ என்பதுதான் அந்தச் செய்தி. சினிமா என்று எடுத்துக்கொண்டால், நாடகத்தனமும் கலந்திருக்கும். சில வி‌ஷயங்களைப் பெரிதுபடுத்திக் காட்டினால் நிறைய பேரிடம் சென்றுசேரும் என்பது தவிர்க்க முடியாத ஒரு உண்மை. அதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்கிறோம். கதையைச் சொல்லும்போது அதைப் பயன்படுத்துகிறோம். நிஜ வாழ்வில் மிகப்பெரிய பிரச்சினை. பிரச்சினை மட்டுமல்ல, நம்மைச் சுற்றி சமுதாயத்தில் கொடூரமான நிலை உருவாகியுள்ளது. இதற்கு எவ்வளவு கொடூரமாக ஒரு பதில் சொன்னாலும் கொடுத்தாலும் போதாது.…

Read More

ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுக்களுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 126 என்ற விமானத்தில் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். குறித்த நபர் அணிந்திருந்த காற்சட்டை பையில் 100 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More