கலாவெவ தேசிய பூங்காவிலும் ஆணொருவரின் சடலம்

கலாவெவ தேசிய பூங்காவில் கல்கொடவல பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் 40 மற்றும் 45 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

கருணாநிதியின் அடக்கத்தலத்துக்கு இன்று சென்ற தளபதி விஜய்!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அஞ்சலி செலுத்தினார். திரைப்பட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தமையால் கருணாநிதியின் இறுதி அஞ்சலியில் நடிகர் விஜயால் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய் விமான நிலையத்திலிருந்து அண்ணா சதுக்கத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Read More

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இலங்கை வருகை

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான “டெசிக் பீ.எம்.எஸ்.எஸ்”காஷ்மீர் கப்பல் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நான்கு நாட்கள் பயணத்துக்காக வருகை தந்துள்ள குறித்த கப்பல், நாட்டில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இலங்கையின் முக்கிய கப்பல் துறைமுகங்களுக்கு செல்லவுள்ளதுடன் கப்பலில் வருகை தந்துள்ளவர்கள், இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நட்புறவு கைப்பந்து போட்டியொன்றிலும் பங்கேற்கவுள்ளனர். 95 மீட்டர் நீளமும் 12.2 மீட்டர் அகலமும் கொண்ட குறித்த டெசிக் பீ.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் கப்பல் 1550 டொன் கொள்ளளவு கொண்டதென்பதுடன் அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட 74 பேர் வருகை தந்துள்ளனர். குறித்த கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read More

ரம்பா மீண்டும் கர்ப்பம் – கணவர் செய்த சீமந்தம்

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகியிருந்தார். பின் நடுவில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்து இருந்த அவர்கள் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவான அவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இந்த நேரத்தில் ரம்பாவின் கணவர் இந்திரன் அவரது மனைவிக்கு சீமந்தம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

எதிர்க்கட்சி என கூறுபவர்கள் எதிர்க்கட்சியினர் இல்லை

தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என கூறுபவர்கள் எதிர்க்கட்சியினர் இல்லை எனவும் அவர்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் உரிமைக்காக அரசாங்கம் மிகவும் மும்முரமான முறையில் முன்னிற்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தெரியவருவது, அரசாங்கத்தின் தேவைக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக தற்போதைய எதிர்கட்சி கருதப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

சவுதி வான்வழி தாக்குதல் – 46 கிளச்சியாளர் பலி

ஏமனில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 46 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். துஹாயத், ஜபித், எல் உசேனியா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. சவுதி அரேபிய கூட்டணி படையினரின் உதவியுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அல் தஹார் மாவட்டத்தில் சில பகுதிகளை ஏமன் படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவளித்து வருகின்றது. அதேவேளை, அரச அதிபருக்கு ஆதரவான படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கி தாக்குதல் நடத்துகின்றன. இந்த விடயம் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா மீது தீராப் பகையை தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக அண்மைக்…

Read More

விராட் கோஹ்லியாக மாறிய துல்கர் சர்மா

இயக்குநர் அபிஷேக் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை திரைப்படமாக இயற்றவுள்ளார். இப்படத்தில் விராட் கோஹ்லியின் கதாபாத்திரத்தினை துல்கர் சர்மா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸோயா பேக்டர் என்ற இப்படம், விராட் கோஹ்லி கிரிக்கெட் விளையாட்டில் நடத்திய சாதனைகளை மையப்படுத்தியே எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த படத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் படப்பிடிப்பு நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக உருவாக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பொறுப்பு வகித்த கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிய பிரஜாசக்தி நிலையங்களுக்கும் பெருந்தோட்ட பகுதிகளுக்கும் செட்லைட், இணைய வசதியை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் முன்னாள் பிரதான நிதி பணிப்பாளர் செல்லதுரை லோகநாதன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரஜாசக்தி நிலையங்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளுக்கு உபகரணங்கள் மற்றும் இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்பில் அவரது பொறுப்பில் இருந்த கால்நடை அபிவிருத்தி அமைச்சின் மூலமாக சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு 62 மில்லியன் ரூபா (6 கோடியே இருபது லட்சம்) நிதி…

Read More

UNP கட்சியில் மீண்டும் ஜோன்ஸ்டன்?

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ​ஜோன் பெனாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஒன்றிணைந்த எதிர்கட்சியின் செயற்குழுவில் பேசப்படும் விடயங்கள் உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியவருவதாகவும் அதற்கு ஜோன்சன் பெனாண்டோ காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவருடன் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தொடர்பு வைத்திருப்பதாக தெரியவருகிறது. இரவு நேரங்களில் ஜோன்ஸ்டன் குறித்த அமைச்சரை சந்திப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. இனிமேலும் ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இருக்க முடியாது எனவும் சந்தர்ப்பம் வரும்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வதாகவும் ஜோன்ஸ்டன் பெனாண்டோ பிரபல அமைச்சரிடம் கூறியுள்ளார். ஆனால் தன்மீது மஹிந்த ராஜபக்ஷவிற்கு சந்தேகம் வராம அளவிற்கு நடந்துகொள்ள ஜோன்ஸ்டன் முயற்சித்து வருகிறார். ஆனாலும் மஹிந்த, நாமலுக்கு ஜோன்ஸ்டனின் இருவேடம் தெரியும் என ஒன்றிணைந்த…

Read More

வெள்ளத்தில் இதுவரை 28 பேர் பலி – 100 கோடி ரூபா நிவாரணம்!

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 28 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிக்காக இராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கேரளா வந்தடைந்தார். பின்னர் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி அல்போன்ஸ் உடன் அவர் ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். அதன் பிறகு, அதன் பிறகு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில…

Read More