விஜய்க்காக ராஜமௌலியை சந்தித்த சசிகுமார்

இயக்குநர் சசிகுமார் அடுத்ததாக விஜயை வைத்து வரலாற்றுப் படமொன்றை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகுமார் சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலியை சந்தித்திருந்தார். வரலாற்றுத் திரைப்படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் ராஜமௌலி என்பதால், சமீபத்தில் அவரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார். இருவரும் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமார், விஜயிடம் ஒரு வரலாற்று திரைப்படக்கதையை சொன்னபோது, அவர் மிகவும் ரசித்து நிச்சயம் பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். இதை சசிகுமாரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். எனவே, சசிகுமார் இயக்கத்தில் வரலாற்றுப் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். விஜய் தற்போது ஏ.ஆர். முருகாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அட்லியுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், சசிகுமார் இயக்கத்தில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க…

Read More

ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி உள்ளிட்ட நால்வரை விசேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட 04 பிரதிவாதிகளை மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசிற்கு சொந்தமான 04 பில்லியன் ரூபா பணத்தை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காமினி செனரத், பியதாச குடாபாலகே, நில் பண்டார ஹப்புஹின்ன மற்றும் லசந்த பண்டார ஆகிய பிரதிவாதிகள் இன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். சம்பவம் தொடர்பில் சட்ட மா அதிபரால் மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று மன்றில் அறிவித்தனர். மேலும், வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் பிரதிவாதிகளின் வௌிநாட்டு கடவுச்சீட்டை மீள நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இதன்போது உத்தரவிடப்பட்டது

Read More

ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்காக ரயில் ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில்வே தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் (08) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும் , ரயில் இயந்திர பரிசோதகர்களை ஈடுபடுத்தி 10 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. மாத்தறை, காலி, கண்டி, சிலாபம் , இறம்புக்கன மற்றும் மஹவ ஆகிய பகுதிகளுக்கு இந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும்…

Read More

எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற இயலாது: சபாநாயகர் அறிவிப்பு

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, எதிர்க்கட்சித் தலைவரை தம்மால் மாற்ற இயலாது என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியும் என சபாநாயகர் கூறியுள்ளார். அதற்கமைய, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் செயற்பட முடியும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது அணிக்கு வழங்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த விடயம் தொடர்பில் ஏற்பட்ட பாரிய சர்ச்சையை அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய பாராளுமன்ற சபை அமர்வின் ஆரம்பத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

Read More

சவுதி நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உட்பட 43 பேர் பலி

யேமனில் சவுதி அரேபிய படையினர் நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. யேமன் அரசுக்கெதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, அரசப்படையும் சவுதி அரேபியப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி எனப்படும் கிளர்ச்சிக்காரர்களுக்கு, ஆதரவாக ஈரான் படை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சாடா மாகாணத்தில் (Saada) டாயான் (Dahyan) என்ற இடத்தில் உள்ள சந்தையில் சவுதி அரேபிய படையினர், நேற்று (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்து ஒன்று வெடித்துச் சிதறியதில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 பேர் படுகாயமுற்றனர். மேலும் படுகாயமுற்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பது அவமதிப்பதற்கு சமன்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக பிக்குகள் வீதிகளில் இறங்க வேண்டும் எனவும், அரச நிகழ்வுகளைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் குறித்த தண்டனை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒன்று என்பதை அவர்கள் தெரிவிக்க முனைவதை அவதானிக்க முடிகிறது. அரசாங்கம் பிக்குகளை இலக்குவைத்து பழிவாங்குவதாக சில பிக்குகள் நேற்று தெரிவித்திருந்தனர். நாட்டிற்காகவும், சமயத்திற்காகவும் குரல் கொடுக்கும் பிக்குகளை இவ்வாறு ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்திருந்தனர். இதேவேளை, பிக்குகளை நீதிமன்றத்தின் ஊடாக இலக்குவைக்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த டளஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டே ஞானசார தேரருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.…

Read More