சீ.வி விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மற்றும் இரு அமைச்சர்களை செப்டம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரனை அமைச்சராக நியமிப்பது தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாததன் மூலம் வடக்கு முதலமைச்சர் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா ஆகியோர் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு கோரி வடமாகாண முன்னாள் அமைச்சர் பி.​டெனிஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இதனை ஆராய்ந் உச்ச நீதிமன்றம் முதலமைச்சரின் முடிவிற்கு இடைக்கால தடைஉத்தரவு வழங்கியிருந்தது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவை வட…

Read More