தொற்றுநோய் பரவல்; ரஜரட்டவின் 3 பீடங்கள் பூட்டு

தொற்று நோய் பரவல் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலையிலுள்ள மூன்று பீடங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது. சமூகவியல் மானிட விஞ்ஞானம், முகாமை மற்றும் வர்த்தக கற்கை, விஞ்ஞான தொழில் நுட்பப் பிரிவு என்பனவே இவ்வாறு மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தவர்களில் சிலருக்கு அம்மை நோய்த்தாக்கம் காணப்பட்டதாலேயே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 44 மாணவர்கள் அம்மை நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் சிலருக்கு வைரஸ் காய்ச்சல், மற்றும் வயிற்றுப் போக்கு என்பன காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 27 ஆம் திகதி விடுதிகளுக்கு திரும்புமாறு உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

பணிப்பகிஷ்கரிப்புகளால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே: ஜனாதிபதி

பணிப்பகிஷ்கரிப்புகளால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே தவிர அரசாங்கம் அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஒரு இலட்சம் மூலிகைத் தாவரங்களை பயிரிடும் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். நான் பல வருடங்களாக கொழும்பு – கம்பஹா ரயிலில் பயணித்துள்ளேன். ரயிலில் செல்லும் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்ட சிலரிடம் ரயிலுக்கான சீசன் டிக்கெட் மாத்திரமே இருக்கும். 5 சதமேனும் இருக்காது என்பதை நான் அறிவேன். பாடசாலை மாணவர்கள் வீட்டில் வழங்கும் உணவுப்பொதி மற்றும் சீசன் டிக்கெட் உடன் தான் செல்வார்கள். சில ஏழ்மையிலுள்ள அரச ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு தொழில் செய்யும் இடத்தில் உணவு கிடைக்கும். சிலரிடம் ரயிலுக்கான சீசன் டிக்கெட் மாத்திரமே இருக்கும். ரயிலிலுள்ள குழாயிலேயே நீர் அருந்துவார்கள். ஒரு போத்தல் நீர் வாங்குவதற்கு…

Read More

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் W.M. மென்டிஸ் நிறுவனம், பேர்ப்பச்சுவல் அசட் மெனேஜ்மன்ட் நிறுவனம், பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் நிறுவனம், பேர்ப்பச்சுவல் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளின் விபரங்களை இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கிக்கு பெற்றுக்கொடுக்குமாறு 13 அரச மற்றும் தனியார் வங்கி நிறுவனங்களுக்கு நீதவான் இன்று உத்தரவிட்டார். முறிகள் ஏலத்தின் போது பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் முறையற்ற விதத்தில் இலாபமீட்டியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு, அந்த வங்கியின்…

Read More

மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கதிரை ஐந்தரை லட்சம்!

மேல் மாகாண சபைக்கென புதிதாக அமைக்கப்பட்டுள்ள பத்தரமுல்ல டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள கட்டிடத்தில் ஒரு மாகாண சபை உறுப்பினர இருக்கை கதிரைக்கு ஐந்தரை லட்சம் ரூபா செலவு செய்யப்படவுள்ளமை குறித்து மேல் மாகாண சபை ஜேவிபி உறுப்பினர் லக்ஷமன் நிப்புணாராச்சி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். 104 மாகாண சபை உறுப்பினர்களுக்கு இருக்கை கதிரை கொள்வனவு செய்ய விலைமனு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒரே இடத்தில் அனைவருக்கும் கதிரை கொள்வனவு செய்வது சிறந்தது என்றாலும் ஒரு கதிரைக்கு ஐந்தரை லட்சம் செலவு செய்வது அநியாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிக விலையில் இவ்வாறு கதிரை கொள்வனவு செய்ய அனுமதி அளித்தது யார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

யாழில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 05 பேர் கைது

இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 சாத்திரகாரர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (09) கைதுசெய்துள்ளனர். யாழ். நகரில் உள்ள பிரபல தங்குமிடத்தில் வைத்தே இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஐந்து பேரையும் கைதுசெய்துள்ளனர். இந்தியாவில் இருந்து வருகை தந்த இவர்கள் ஐந்து பேரும், விசா காலம் நிறைவடைந்த பின்னரும் யாழில் தங்கியிருந்த குற்றச் சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Read More

வெட் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் சம்பந்தமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (09) பாராளுமன்றில் இடம்பெற உள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது இது தொடர்பான விவாதம் இடம்பெற உள்ளது. இது தவிர சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக தலைவர்கள் மற்றும் உறுப்பினரகைளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு சம்பந்தமாகவும் இன்று விவாதம் இடம்பெற உள்ளது. இதேவேளை ஊடகங்களுக்கு அரசாங்கம் விதிக்கின்ற அடக்குமுறை சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ள யோசனை மீதான விவாதமும் இடம்பெற உள்ளது.

Read More

இஸ்ரேலின் வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் பலி!

இஸ்ரேலிய இராணுவத்தினர் காஸா எல்லையில் நடத்திய வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய நிலப்பரப்பின் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய பல ரொக்கெட் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸின் ரொக்கெட் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. காஸாவின் ஜபாரவி பகுதியிலுள்ள 23 வயதான எனாஸ் கம்மாஷ் என்ற கர்ப்பிணிப் பெண்ணும் அவரது 18 மாதக் குழந்தையும் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், ஹமாஸ் வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. நேற்று (08) காஸாவில், இஸ்ரேலிய வாகனம் ஒன்று தாக்கப்பட்டதன் பின்னர் குறித்த…

Read More

இராணுவ குழுக்களை ஒன்றிணைக்கும் பணி ஆரம்பம்; காணி விடுவிப்பு

இராணுவத்தினர் வடக்கில் இருந்து அகற்றப்படுவதாகக் கூறப்படுவது தவறாகும். இராணுவக் குழுக்களை ஒன்றிணைக்கும் பணியே மேற்கொள்ளப்படுகிறது. முகாம்கள் அகற்றப்படும் போது அதற்கு ஏற்ப அங்கு நிரந்தர வசிப்பிடம் கொண்டவர்களுக்கு அக்காணிகள் வழங்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா தெரிவித்தார். இராணுவத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவித்தார். நடைபெற உள்ள பெரஹரா வைபத்திற்கு கொப்பரா தெங்குப் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு கொப்பராவை வழங்க அவர் விஜயம் செய்தார். ஐந்தரை மெற்றிக் தொன் கொப்பரா இதன் போது அன்பளிப்புச் செய்யப்பட்டது. விஜயபாகு படை அணியினர் இம்முறை அதற்கான கொப்பராக்களை வழங்கியிருந்தனர். அவர் மேலும் தெரிவித்தாவது, வடக்கிலோ அல்லது கிழக்கிலோ எந்த இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது. இராணுவம் குறைக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறாகும். இராணுவக் குழுக்களை ஒன்றிணைக்கும் பணியே மேற்கொள்ளப்படுகிறது. முகாம்கள்…

Read More

தமிழகத்திலுள்ள அகதிகளை அழைத்து வர இந்தியா முன்வருகை

தமிழக அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்களை கடல்மார்க்கமாக அழைத்துவருவதற்கு இந்திய அரசாங்கம் உதவ முன்வந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாடு திரும்பும் அகதிகளுக்கான கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவிலிருந்து 9509 இலங்கை அகதிகள் அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர். இவர்களுக்காக இலவச விமான டிக்கட்டுக்கள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. சமூகத்தில் இணைத்துக் கொள்வதற்காக கொடுப்பனவாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக தலா 10 ஆயிரம் ரூபாவும், 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கான கொடுப்பனவாக 7,500 ரூபாவும்,…

Read More

பிரதமர் ரணிலின் அனுதாப செய்தியுடன் மனோ, இராதா, செல்வம் நேரில் அஞ்சலி

தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை அரசின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, பிரதமரின் இரங்கல் செய்தியையும் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் வழங்கி அனுதாபங்களை தெரிவித்தனர்.

Read More