இணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ!

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ´விஸ்வரூபம்-2´ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் ´சாதி மதம்´ என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் கமல் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ரசிகர்கள் கவர்ந்துள்ளது. மேலும் இந்த வயதிலும் சிறப்புடன் சண்டைப் போடும் காட்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Read More

அல் கொய்தா இயக்க தலைவரின் மகளை திருமணம் செய்த பின்லேடனின் மகன்!

உலகையே அச்சத்தின் உச்சியில் வைத்திருந்த பயங்கரவாத இயக்கங்களில் ஒன்று அல் கொய்தா. இந்த இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின் லேடன் சர்வதேச நாடுகளால் தேடப்பட்டு வந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டார். அப்போது அவர் பதுங்கி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒசாமா எழுதிய கடிதம் ஒன்று இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. அல் கொய்தா இயக்கத்தில் தனது இடத்தை அவரது மகன்களில் ஒருவரான ஹம்ஜா பின் லேடன் நிரப்புவார் என குறிப்பிடப்பட்டிருந்தார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் ஹம்ஜா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில், அல் கொய்தா இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் மூளையாகவும் செயல்பட்ட முகமது அட்டாவின் மகளை, ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்ஜா திருமணம் செய்துகொண்டதாக தகவல்…

Read More

கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடம் – தொண்டர்கள் வீதியில்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், வயதின் காரணமாக அவரின் உடல் உறுப்புகள் சீராக செயல்பட சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளதென்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் தரும் ஒத்துழைப்பை வைத்தே அவரது உடல்நிலை குறித்து கூற இயலும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதுவரை அவரது உடல்நிலை குறித்து, காவேரி வைத்தியசாலை ஐந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகளில் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்போது வெளியிட்டிருக்கும் 6 ஆவது அறிக்கையில் அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக முதன்முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 10 வது நாளாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் பார்க்க அவரது மனைவி தயாளு அம்மாள் காவேரி வைத்தியசாலைக்கு சென்றார்.…

Read More

தேசிய நிலையான அபிவிருத்தி பற்றிய கருத்தாடல் இன்று

2030 ஆம் ஆண்டளவில் இலங்கை அனைத்து நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரட்ன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பான திட்ட அறிக்கை இன்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதிக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக செனவிரட்ன தெரிவித்தார். இந்த அறிக்கையை நோபல் பரிசை பெற்ற பேராசிரியர் மொஹான் முனசிங்ஹ தலைமையிலான குழு தயாரித்துள்ளது. தேசிய நிலைபேறான அபிவிருத்தி குழுவின் தலைவராக உதய ஆர் செனவிரட்ன செயற்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நேற்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த திட்ட அறிக்கை குறித்து செனவிரட்ன விளக்கம் அளித்தார். இந்த அறிக்கையில் சமூக பொருளாதார, சுற்றாடல் மற்றும் இதர விடயங்கள் குறித்த நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த செயற்றிட்டம் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க…

Read More

பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு பரீட்சை நிலையத்தைச் சார்ந்ததாகவும் பொலிஸ் ரோந்து சேவைகளும் இடம்பெறுகின்றன. அவ்வாறே வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களுடனும் தலா இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

Read More

கோப் குழு கலந்துரையாடலுக்கு மின்சார சபை தலைவருக்கு அழைப்பு

இன்று (07) நடைபெறும் கோப் குழுவின் கலந்துரையாடலுக்கு, இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடலே இன்று நடைபெற உள்ளதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை 2.30 மணி அளவில் கோப் குழுவின் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்

சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று (07) பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இந்த மாதத்திற்கான முதலாவது சபை அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, எதிர்கட்சித் தலைவராக யார் செயற்பட முடியும் என்பது தொடர்பில் சபாநாயகர் அறிவிக்கவுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 70 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கையளிக்கப்பட்ட கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைமை பதவி தமது அணியினருக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஏற்கனவே சபாநாயகர் இது தொடர்பில் விளக்கம் கோரியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாடு தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவ…

Read More

பனலிய ரயில் விபத்து குறித்து விசாரணை

மலையக ரயில் மார்க்கத்தின் றம்புக்கனை மற்றும் பொல்கஹவெல இடையே பனலிய பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் ஊடாக, தவறு ஏற்பட்டுள்ள விதம் குறித்து ஆராய்ந்து அதனுடன் தொடர்புடையவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரம தெரிவித்துள்ளார். நேற்று ( (06) ) பிற்பகல் 4.35 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்குப் பயணித்த அலுவலக ரயில் சமிக்ஞை இல்லாததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதேநேரம், கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட மற்றுமொரு அலுவலக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்​த குறித்த ரயிலுடன் மாலை 6.30 மணியளவில் மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 32 பேரும் குருநாகல், பொல்கஹவெல, றம்புக்கனை மற்றும் கேகாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

கடத்தல்காரரிடமிருந்து 11 சிறுவர்கள் மீட்பு! – மெக்சிகோவில் சம்பவம்

நியூ மெக்சிகோவின் எல்லைப் பகுதியிலுள்ள கிராமப் புறமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். டயர்களைக் கொண்டு மதிலிடப்பட்ட கூடாரமொன்றை அந்நாட்டு அமைதிப்படைப் பிரிவினர் சுற்றிவளைத்த போது, குறித்த 11 சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த சிறுவர்களை கடத்தியவர்கள் எனக் கருதப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காணாமற்போன, அபுல் கானி வஹ்ஹாஜ் என்ற ஜோர்ஜியா சிறுவனைத் தேடும் பணியை மேற்கொண்ட போதே குறித்த பகுதியை கண்டுபிடித்ததாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் அபுல் கானி வஹ்ஹாஜ் என்ற சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட கூடாரத்தில் அச்சிறுவன் தங்கியிருந்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர், ஏற்கனவே 3 வயது குழந்தையொன்றை கடத்திய வழக்கில் தேடப்பட்டு வருபவர் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், கூடாரத்திலிருந்து 3 வயது குழந்தைகள் அணியும் அளவிலான ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் அப்பகுதியில்…

Read More

இரசிகையைத் தாக்கிய தீபிகா படுகோனே

காதலருடன் செல்லும் போது வீடியோ எடுத்த இரசிகையை தீபிகா படுகோனே தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹிந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதுடன், பொது நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்து கலந்து கொண்டு வருகின்றார்கள். மேலும் இருவரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த பத்மாவத் படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இருவரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள டிஸ்னிலாண்டுக்குச் சென்று சுற்றி பார்த்தனர். அங்கு வந்திருந்த யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. இந்நிலையில் இரசிகை ஒருவர் இவர்களை அடையாளம் கண்டு வீடியோ எடுத்த நிலையிலேயே தீபிகா அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More