மட்டக்களப்பில் குளத்தில் நீராடச்சென்று காணாமற்போன இளைஞர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – கரடியனாறு, உறுகாமம் பகுதியில் குளத்தில் நீராடச்சென்று காணாமற்போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த 16 வயதான தங்கராசா ஜெசுகரன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் தனது நண்பர்களுடன் குளத்திற்கு நீராடச்சென்றிருந்த போதே இவர் நீரில் மூழ்கிக் காணாமற்போயிருந்தார். நீராடச் செல்லும் பொருட்டு, நண்பர்கள் நால்வர் பயணித்த தோனி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அனைவரும் நீரில் மூழகியுள்ளனர். இதன்போது, மூவர் காப்பாற்றப்பட்டதுடன் தங்கராசா ஜெசுகரன் காணாமற்போயிருந்தார். மீட்கப்பட்ட மூவரும் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கரடியனாறு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நுவரெலியா முன்னாள் மேயர் கமகே மஹிந்தகுமாரவிற்கு பிணை

நுவரெலியாவின் முன்னாள் மேயர் கமகே மஹிந்தகுமாரவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது. 2013 ஆம் ஆண்டு வசந்தகால கொண்டாட்டத்திற்கான அனுசரணையாளரிடமிருந்து கிடைத்த 2,25,000 ரூபா நிதியை நகர சபை பொது நிதியத்தில் வைப்பிலிடாது, நகர மேயருக்கான நிதியத்தில் வைப்பிலிட்டமை குறித்தான வழக்கு தொடர்பில் முன்னாள் மேயருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் முன்னாள் மேயருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. தனக்கெதிரான 14 குற்றச்சாட்டுகளிலிருந்தும் தாம் நிரபராதி என முன்னாள் நகர மேயர் இன்று மன்றுக்கு அறிவித்துள்ளார். இதன்போது, 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More

கடவத்தயில் துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு

கடவத்த – கண்டி வீதி, கோனஹேன ஆம்ஸ்ட்ரோங் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கடவத்த – கோனஹேன பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்த துப்பாக்கிப்பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் இதுவரை உறுதியாகவில்லை. சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Read More

திருகோணமலையில் ஆசிரியை கொலை: இருவருக்கு மரண தண்டனை

திருகோணமலை – சம்பூர், பாட்டாளிபுரத்தில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்றத்தில், நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதிகள் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளார். வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் முதலாவது சந்தேகநபரான 38 வயதான பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் இரண்டாவது சந்தேகநபரான 28 வயதான விஜயகுலசிங்கம் சந்திரபாலன் ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்ட ஏனைய இரண்டு சந்தேகநபர்களான 32 வயதான கிருஷ்ணபாலன் ரஜிவ்காந்தன் மற்றும் 27 வயதான சிவகுமார் சிவரூபன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை…

Read More

நியோமால், லமாஹேவாவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் சுற்றிவளைப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையின் 27 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சாலையில் திடீரெனத் தோன்றிய இராட்சத பள்ளத்தில் அடுத்தடுத்து வீழ்ந்த கார்கள்

வடக்கு சீனாவின் ஹார்பின் பகுதியில் உள்ள பிரதான சாலையொன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இராட்சதப் பள்ளத்தில் அவ்வழியாகச்சென்ற கார்கள் வீழ்ந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் பகுதியில் சுமார் 86 சதுர அடி அளவிற்கு இராட்சதப் பள்ளம் ஏற்பட்டது. திடீரென உருவான பள்ளத்தால், அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன சாரதிகள் செய்வதறியாது திணறினர். இதில் ஒரு கார் பள்ளத்தில் வீழ்ந்தது. அதைத்தொடர்ந்து வந்த காரின் சாரதியும் பள்ளத்தைக் கவனிக்காததால், முன் சக்கரங்கள் பள்ளத்திற்குள் பாய்ந்த பிறகு பிரேக்கை அழுத்த அது பலனில்லாமற்போனது. மூன்றாவது கார் சாரதி சற்று முன்னதாகவே பிரேக்கை அழுத்த அவரது கார் சக்கரங்கள் பள்ளத்திற்குள் பாயாமல் தடுக்கப்பட்டது. பள்ளத்தில் வீழ்ந்த கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சீனாவில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக மண் அரிப்பு…

Read More

கலைஞர் மு. கருணாநிதி காலமானார்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், கலைஞர் மு. கருணாநிதி தமது 94 ஆவது அகவையில் காலமானார். மாலை 6.10 அளவில் உயிர் பிரிந்ததாக காவேரி வைத்தியசாலை அறிக்கை வௌியிட்டுள்ளது. மு. கருணாநிதி சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக 11 நாட்களுக்கு முன்னர் காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக வைத்தியசாலை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1924 ஆம் ஆண்டு பிறந்த கலைஞர் மு.கருணாநிதி 5 தடவைகள் தமிழகத்தின் முதலமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதி முறைமையை ஒழிக்க சதி!

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு வரும் புதிய அரசமைப்பால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படப் போகின்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் சதியும் இடம்பெறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு – நெளும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ​மேலும், புதிய அரசமைப்பு தொடர்பில் தமக்கு இரகசியமான ஆவணம் ஒன்று கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கரை ஒதுங்கிய சடலம் – கொலையா? தற்கொலையா?

ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (07) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் தியாவட்டவான் பிரதேசத்தில் ஆற்றுக்கு அருகில் இன்று காலை சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த நபர் 55 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகிப்பதுடன் இவரை எவரும் கொலை செய்து ஆற்றில் வீசினார்களா அல்லது குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

7 ரிக்டர் நிலநடுக்கம் – நிலை குலையாமல் தொழுகை நடத்திய நபர்!

பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாடு அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள பாலி மற்றும் லம்பாக் தீவின் அருகே நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த பல வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இடிபாடுகளில் சிக்கி 91 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கம் அருகாமையில் உள்ள பாலி நகரத்திலும் உணரப்பட்டது. அப்போது அங்குள்ள மசூதிகளில் மாலை வேளை தொழுகை நடந்து கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் அங்குள்ள ஒரு மசூதி கட்டிடம் பெரிய அளவில் அதிர்ந்தது. நிலநடுக்கம் போன்ற வேளைகளில் பாதியில் தொழுகையை…

Read More