துப்பாக்கியுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது

டுபாய் நோக்கி பயணிப்பதற்காக துப்பாக்கியுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்த ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகிரியவைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர் விமானப்படையின் விமானியாக கடமைபுரிந்துள்ளதுடன், தற்போது கென்யாவில் உள்நாட்டு விமான நிறுவனமொன்றில் பணிபுரிவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

Read More

பொலிஸ் உயரதிகாரி 20 பேருக்கு இடமாற்றம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உயரதிகாரி 20 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பிரதி பொலிஸ்மா அதிபர் 06 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டள்ளது. பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலின் பேரில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் 09 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர, பொலிஸ் அத்தியட்சகர் மூவரும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Read More

வெல்கமவின் தாக்குதல்

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, சக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறித்து லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்துள்ள கருத்து குறித்து நேற்று (05) வெல்கம எம்.பி. காரசாரமான கருத்தைத் தெரிவித்துள்ளார். ”நாம் எதிர்பார்த்துள்ள ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச. ஜனாதிபதித் தேர்தலுக்கு நீங்களே வேண்டும். அப்படி இல்லாமல் அரசியல் செய்யாதவர்கள் வருவது பயனற்றது. 36 வருடங்களாக தொகுதி அமைப்பாளராக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி வகித்துள்ளேன். அமைப்பாளராக நான் பதவியேற்கும் போது நாமல் பிறக்கவும் இல்லை. நான் நினைக்கிறேன், ரோஹித்த தனது காற்சட்டையுடன் சிறுநீர்கழிக்கும் காலம் அது என நான் நினைக்கிறேன். வெல்கம குறித்து கதைத்து பிரயோசனம் இல்லை, அவர் விகடகவியின் பாத்திரத்தை ஏற்றுள்ளதாக லங்காதீப பத்திரிகைக்கு மகிந்தானந்த கூறியுள்ளார், அன்று மத்திய செயற்குழுக் கூட்டத்தில் செயற்பட அவருக்கு முதுகெலும்பு இருக்கவில்லை. நுகேகொடை மேடையில் ஏறுவதற்கு முதுகெலும்பு…

Read More

சுதந்திரமாக வாழ வழங்கிய சுதந்திரத்தை மறந்துவிட்டனர்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மக்கள் சுதந்திரமாக வாழ வழங்கிய சுதந்திரம் குறித்து எவரும் பேசுவது கிடையாது என பிரதியமைச்சர் அனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டில் அபிவிருத்தி நடந்துவரும் அதேவேளை, மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சமயங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். ”புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தியது. அனைத்துக் கட்சிகளும் இணைந்துகொண்டன. இவை இணைந்து நாட்டிற்கு பாரிய அபிவிருத்தியைக் கொண்டுவந்தன. அபிவிருத்தி நடந்த அதேவேளை, நாட்டில் மக்கள் வாழ்வதற்கான உரிமையை வழங்கியது. இதுதான், நாம் இன்று பேச மறந்த, மிக முக்கியமான விடயம். மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. தான் விரும்பிய, மதத்தைப் பின்பற்ற…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் யார்? இன்று தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கருத்தை இன்று உத்தியோகபூர்வமாக சபாநாயகர் கருஜயசூரியவதற்கு அறிவிக்கவுள்ளது. பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என அண்மைக்காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தினேஷ் குணவர்தனவின் பெயர் பரிந்துரை செய்து எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று சபாநாயகருக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் தெரிவாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் அல்லது குழுக்கள் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு பெயரை பரிந்துரை செய்யும் சந்தர்ப்பம் இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக வினப்படும். இதற்கமைய சபாநாயகர் கருஜயசூரிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கருத்தை உத்தியோகபூர்வமாக கேட்டிருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள சிலர், அரசாங்கத்துடன் செயற்படுவதாலும், கூட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சி கட்சி…

Read More

கோப்பாய் விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ஸதலத்திலேயே பலி

உடன் சென்ற 18 வயது மகள் பலத்த காயமுற்று யாழ் போதனாவில் அனுமதி யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இன்று (06) பிற்பகல் நகைக்கடை உரிமையாளரான ரஞ்சன் (45) தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பின்னால் வந்த தண்ணீர் பவுசரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். அவருடன் பயணித்த 18 வயதுடைய அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

இந்தோனேஷியா பூகம்பம்; பலி எண்ணிக்கை 91

– பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் – அனர்த்தத்தில் பிறந்த குழந்தைக்கு பூகம்பம் என தாய் பெயர் சூட்டினார் இந்தோனேஷியாவில் இடம்பெற்ற பூகம்பத்தில் இது வரை 91 பேர் பலியாகியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான லொம்பொக் தீவில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பமொன்று பதிவாகியிருந்தது. இது அப்பகுதியில் ஒரு வாரத்திற்குள் இடம்பெறும் இரண்டாவது பூகம்பம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், தற்போது வரை 92 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரக்கணக்கானோர் கட்டடகங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டடங்கள் முற்றாகவும், பகுதியாகவும் இடிபாடடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என, அந்நாட்டு அனர்த்த சீரமைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் மின்சாரம், தொடர்பாடல் என்பனவும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த…

Read More

பலஸ்தீனர்களின் அகதி அந்தஸ்தை நீக்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் முயற்சி

மில்லியன் கணக்கான பலஸ்தீனர்களின் அகதி அந்தஸ்தை அகற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சஞ்சிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாகவே குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மருமகன் ஜரெட் குஷ்னர் பலஸ்தீனத்திற்கான ஐ.நா நிறுவனத்தில் இடையூறு செய்திருப்பதாக, ‘பொரின் பொலிசி’ தனது கட்டுரை ஒன்றில் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய ஒரு நடவடிக்கையாக பலஸ்தீன நிவாரண அமைப்புக்கான 125 மில்லியன் டொலர் நிதியில் 65 மில்லியன் டொலரை அமெரிக்கா முடக்கியது. மில்லியன் டொலர் உதவிக்கு பலஸ்தீனர்கள் நன்றியாக இல்லை என்றும் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதில் அந்த சஞ்சிகை அம்பலப்படுத்தி இருக்கும் குஷ்னரில் மின்னஞ்சல் செய்தி ஒன்றில், “பலஸ்தீனத்திற்கான ஐ.நா அகதி நிறுவனத்தை சீர்குலைக்க உண்மையான மற்றும்…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: சபாநாயகரின் அறிவிப்பு நாளை

மகேஸ்வரன் பிரசாத் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது நிலைப்பாட்டை இன்று சபாநாயகருக்குத் தெரியப்படுத்தவுள்ளது. பாராளுமன்ற அமர்வு வாரம் நாளை ஆரம்பிக்கிறது. நாளைய அமர்வில் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிரணியில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக தாம் இருப்பதால் தமக்கே எதிர்க்கட்சிப் பதவி வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தொடர்ச்சியாக கோரி வருகிறது. இது தொடர்பில் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்தால் ஆராய்ந்து பார்க்க முடியும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். இதற்கமைய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எழுத்து மூலம் கோரிக்கைவிடுத்தது. இதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாட்டை சபாநாயகர் கேட்டிருந்தார். இன்றைய தினம் ஐ.ம.சு.முவின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மஹிந்த…

Read More

கிளிநொச்சி இயக்கச்சி விபத்தில் தாயும் மகளும் பலி

கிளிநொச்சி- இயக்கச்சி பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும் அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, பருத்துறை தும்பளையை சேர்ந்த குடும்பம் ஒன்று வெளி நாட்டிலிருந்து வந்த தமது மகளை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தபோது, இயக்கச்சிக்கும் பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் மின் கம்பங்களுடன் வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் ஹயஸ் வாகனம் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்துவந்த மகளும் மகளை அழைக்க சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

Read More