என் மகன் மிகவும் நல்லவன்!

தனது மகன் மிகவும் நல்லவன், மாணவப் பருவத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டு கடும் போக்காளராக மாறியவர் என்று அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் தாயார் அலியா கானெம் தனது முதல் நேர்காணலில் தெரிவித்துள்ளார். செளதி அரேபியாவில் பல்கலைக்கழகத்தில் படித்த போது, கலாசாரக் குழு ஒன்றுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, பின்லேடன் வித்தியாசமான மனிதனாக மாறினார் என்று கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். 2011 இல் பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு முதல் முறையாக அவரது தாய் அளித்த பேட்டி இது. அவர் இப்போது சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வசித்து வருகிறார். அந்தக் குழுவிடம் இருந்து விலகியிருக்குமாறு தொடர்ந்து தனது மகனிடம் வற்புறுத்தியதாகவும் பின்லேடனின் தாயார் தெரிவித்தார். அமெரிக்காவில் இரட்டை மாடி கட்டடத்தை தகர்த்தது உட்பட பல தீவிரவாத செயல்களில் பின் லேடனுக்கு தொடர்பு…

Read More

சிலியில் பிளாஸ்டிக் பை பாவனைக்குத் தடை

தென் அமெரிக்க நாடான சிலியில் வர்த்தகச் செயல்பாடுகளில் பிளாஸ்டிக் பைகள் (Plastic) பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்த முதல் தென் அமெரிக்க நாடாக சிலி அமைகிறது. சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவால் (Sebastián Piñera) இயற்றப்பட்டு காங்கிரஸால் அனுமதிக்கப்பட்ட இந்த சட்டம், பிளாஸ்டிக் பாவனையை முற்றாகத் தடை செய்வதற்கு சிறிய கடைகளிற்கு 2 வருட கால அவகாசம் வழங்கியுள்ளது. அதேநேரம், பெரியளவிலான வர்த்தக நிலையங்களிற்கு 6 மாத காலமே வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஒரு வாடிக்கையாளரிற்கு 2 கைப்பைகளை வழங்குவதற்கே அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் இந்தச் சட்டத்தை மீறும் பட்சத்தில் 370 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் கிட்டத்தட்ட 59,000 ரூபா) வரை அபராதம் விதிக்கப்படும்.

Read More

வேலை நிறுத்தம் வெற்றி – GMOA : இது ராஜபக்சக்களின் ஒப்பந்தம் – UNP

சிங்கப்பூர் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க்ததினர் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த வேலை நிறுத்தமானது ராஜபக்ச தரப்பனருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, இந்த இரகசிய ஒப்பந்தத்தை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், பிரதியமைச்சருமான அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

Read More

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தினாரா கமல்? பொலிஸில் புகார்

தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், முதலாவது சீசன் அளவிற்கு, இந்த சீசனில் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். ரசிகர்களை கவர பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், போட்டியாளர்களில் ஒருவர் சர்வதிகாரி போல நடந்து கொள்ள வேண்டும். அந்த டாஸ்க்கில், “தமிழகத்தில் கடந்த காலங்களில் சர்வாதிகாரியால் என்ன நடந்தது தெரியாது” என சக போட்டியாளர் கூறுவதாக அமைந்துள்ளது. இதையடுத்து, இந்த டாஸ்க், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் விளம்பரத்திற்காக இதுபோன்று ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதாகவும், சென்னையைச் சேர்ந்த லூயிசாள் ரமேஷ் என்ற வழக்கறிஞர் காவல்…

Read More

ரஜினி – கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன்!

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ´அட்டகத்தி´ தினேஷ் நடித்துள்ள படம் ´அண்ணனுக்கு ஜே´. அரசியலை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ´அட்டகத்தி´ தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:- இது தனிப்பட்ட நபர் யாரையும் குறிக்கும் கதை அல்ல. எனக்காக எழுதப்பட்ட கதை. பொதுவான ஒரு அரசியல் கட்சி பற்றிய கதை. நான் மட்டை சேகர் என்ற பெயரில் ஒரு ஏழைத் தகப்பனின் மகனாக வருகிறேன். அரசியலே தெரியாமல் காதலித்துக் கொண்டு வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவன், ஒரு துரோகத்திற்கு பிறகு அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதியாகிறான் என்பதே படம். படத்தில் ஒரு தேசிய கட்சி, மாநில கட்சி இரண்டுக்குமான போட்டியாக இருக்கும். சின்ன வயது முதலே எனக்கு அரசியல் ஆசை இருக்கிறது. அரசியலுக்கு வரும் எண்ணமும் உண்டு. அதற்கு அனுபவம் வேண்டும்.…

Read More

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும்

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய முயற்சி சாத்தியமாக அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராக உள்ளேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் சுவாமிநாதனுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, சுமார் 400 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மன்னார் புனித மரியாள் மடு தேவாலய பிரதேசம் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட கோரும் அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்திருந்தார். இதுவே இந்நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள முதலாவது கத்தோலிக்க புனித தலமாகும். இது…

Read More

நோய்க்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 5 மாத கர்ப்பிணி

ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்று தங்காளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளவயது சிறுமி ஒருவர் 05 மாத கர்ப்பிணி என்பது தெரி வந்துள்ளது. பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 01ம் திகதி ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்ற குறித்த சிறுமி பெலியத்தை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிகச சிகிச்சைகளுக்காக தங்காளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த சிறுமி கர்ப்பிணி என்பது தங்காளை ஆதார வைத்தியசாலையில் வைத்து தெரிய வந்துள்ளது. இதனைதயடுத்து அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து பெலியத்தை, கரம்பகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் பெலியத்தை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More