“இனவாதத் தீயை அணைக்கும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்துவோம்”

நாட்டிலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனிபோடும் சமூகமாக நாங்கள் இருக்காது, அந்த நடவடிக்கைகளை எவ்வாறு அணைக்க முடியுமோ அவ்வாறான செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டுமென்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமன்கடுவ, திவுலான அல்/அக்ஸா மஹா வித்தியாலயத்தில், புதிய இரண்டுமாடி கட்டிடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் எம்.எச். பாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்கிரமரத்ன கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். பொலன்னறுவை நகரசபையின் உபதலைவர் எம்.ஐ. அரபா, ஜனாதிபதியின் பணிப்பாளர் கலாநிதி கோர்ட்டன் பெர்னாண்டோ, முன்னாள் பிரதியமைச்சரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஹுஸைன் பைலா ஆகியோர் உட்பட பல அதிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, பொலன்னறுவை…

Read More

மக்களுக்காக உழைக்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள்

அரசியலுக்குள் பிரவேசித்த தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து உழைப்பவர்களுக்கு மத்தியில் மக்களுக்காக உழைக்கும் நல்ல மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் யாவர்க்கும் வீடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 101 ஆவது மாதிரி கிராமத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் மஸ்தான் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வசதியாக இருந்த பல குடும்பங்கள் இன்று தமது அன்றாட வாழ்வை கொண்டு செல்ல முடியாத நிலையில் இருக்கும் பொழுது அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களின் நாடு முழுவதுமான மிக நீண்டதொரு செயல் திட்டத்தின் ஒரு…

Read More

தொழிற்படாத ஒலுவில் வர்த்தகத் துறைமுகம்: சவால்களுக்கு முகங்கொடுக்கும் மீனவர்கள்

ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு 46.1 மில்லியன் யூரோவை வட்டியில்லாக் கடனாக டென்மார்க் அரசு இலங்கைக்கு வழங்கியது. ஒலுவில் துறைமுக வளாகத்திற்குள் வர்த்தகம் மற்றும் மீன்பிடித் தேவைகளுக்கென இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்றொழிலுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 300-க்கும் அதிகமான படகுகள் இந்தப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. மீன்பிடித் துறைமுகத்தில் கடலுக்குள் நுழையும் முகப்புப் பகுதியில் மண் மூடியுள்ளமையால், படகுகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீன்பிடித்துறைமுகத்தில் தரித்து நின்ற பாரியளவிலான படகுகள் வர்த்தகத் துறைமுகப் பகுதியில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், வர்த்தகத் துறைமுகத்தின் முகப்புப் பகுதியினையும் மண் மூடியுள்ளமையால் தொழிலை முன்னெடுக்க முடியாதுள்ளதாக மீனவர்கள் கூறினர். இதேவேளை, துறைமுகத்திற்கு வடக்கு பக்கமாகவுள்ள கரையோரப் பகுதியில் நில அரிப்பு அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர். இந்த கடலரிப்பு காரணமாக 150 மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பை கடல் உள்வாங்கியுள்ளது.…

Read More

சம்பந்தனின் பதவியால் அரசாங்கம் – கூட்டு எதிகட்சி இடையே மோதல்

கூட்டு எதிர்க்கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல எனவும், அது அரசியல் கோஷ்டி என்பதால் அப்படியான கோஷ்டிக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது எனவும் நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 5 அரசியல் கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்றன. அந்த 5 அரசியல் கட்சிகளில் கூட்டு எதிர்க்கட்சி உள்ளடங்காது. கூட்டு எதிர்க்கட்சி என்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு குழு, அப்படியான குழு தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவது நியமற்றது. அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் முரணானது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கி கூட்டு எதிர்க்கட்சிக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை எனில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை…

Read More

பிரகீத் விடயம் தொடர்பில் ஏ.எச்.94 புனைபெயர்கொண்ட இராணுவ அதிகாரி விரைவில் கைது?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர், தமது விசாரணைக்கு அமைய மற்றுமொரு இராணுவ அதிகாரியை கைது செய்யவுள்ளதாக தெரியவருகிறது. பிரகீத் எக்னெலிகொட முதன்முறையாக கடத்தப்பட்டமை சம்பந்தமான ஏ.எச்.94 என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் கிரித்தலை இராணுவப் புலனாய்வு முகாமில் சேவையாற்றியதாக தெரிவிக்கப்படும் மேஜர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான கேர்ணல் சிறிவர்தனவின் வீட்டை சோதனையிட்ட போது, எக்னேலிகொடவை கடத்தி செல்வது சம்பந்தமான கிரித்தலை புலனாய்வு முகாமில் தயாரிக்கப்பட்ட அறிக்கை கிடைத்துள்ளதுடன், கைது செய்யப்படவுள்ள அதிகாரியே குறித்த அறிக்கையை கொழும்பிற்கு கொண்டு வந்து அது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்படவுள்ள அதிகாரி, எக்னெலிகொட கடத்தப்பட்டதில் இருந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் வரை சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.…

Read More

அளித்த வாக்குறுதிகளில் ஒன்றையேனும் அரசு நிறைவேற்றவில்லை

நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைபெறச் செய்வதற்குரிய காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் அரசு மேற்கொள்வதாகத் தெரியவில்லையெனவும் இந்த அரசு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட பூரணப்படுத்தத் தவறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் த​லைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்திடமிருந்து நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் திருப்தி தரக்கூடிய வகையில் எதுவுமே நடக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிஸியாஸ் காட்லாண்ட் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நேற்று பாராளுமன்றிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் செயலாளர்நாயகத்தை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், ஆயுதபோராட்டம் முற்றுபெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லை என்பதனை சுட்டிக்காட்டினார். மேலும் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. அரசாங்கம்…

Read More

ராஜபக்ச தரப்பினர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்

ராஜபக்ச தரப்பினர் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக நவசம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். ”தேர்தலை பிற்போடுவது குறித்து மகிந்த ராஜபக்ச ஒரு கருத்தையும், அந்தக் கூட்டணியில் இருக்கும் தினேஸ் குணவர்தன இன்னுமொரு கருத்தையும் தெரிவிக்கின்றனர். இவர்களுக்குள் கருத்தொன்றுமை இல்லை. இவர்கள் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.” என்று விக்ரமபாகு மேலும் தெரிவித்தார். இனவாதத்தை மையப்படுத்தி, இவர்கள் செயற்பட்டு வந்ததாகவும், இவ்வாறு இவர்களினால் தொடர்ந்தும் செயற்பட முடியாது எனவும், எனவே ராஜபக்ச தரப்பினர் பெரும் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ராஜபக்ச சகோதரர்களுக்கு மத்தியில் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பரஸ்பரக் கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும் விக்ரபாகு மேலும் சுட்டிக்காட்டினார்.

Read More

பலாலியில் இறங்க தயாராகும் இந்திய விமானங்கள்

இலங்கை அர­சாங்­கத்தின் கோரிக்­கையின் பிர­காரம் பலாலி விமான நிலை­யத்­தி­லி­ருந்து விமான சேவையை முன்­னெ­டுக்க முடி­யு­மான சில இந்­திய விமான சேவை நிறு­வ­னங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்றோம் என்று இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்து தெரி­வித்தார். கொழும்பில் நேற்று நடை­பெற்ற பீம்ஸ் டெக் கூட்­டு­றவு மாநாட்டு அமர்வில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்; இந்த பீம்ஸ் டெக் அமைப்பின் முக்­கிய நோக்­க­மாக மக்­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்பே காணப்­ப­டு­கின்­றது. இலங்­கை­யுடன் எமக்கு பாரிய தொடர்­புகள் உள்­ளன. சிறி­லங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­ன­மா­னது இந்­தி­யாவின் 14 நக­ரங்­க­ளுக்கு தனது சேவையை மேற்­கொள்­கின்­றது. அதே­போன்று இந்­தியா இலங்­கையின் உட்­கட்­ட­மைப்பு மற்றும் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களில் பங்­காள­ராக இருக்­கி­றது. இலங்­கையின் ரயில்வே பாதை­களை மேம்­ப­டுத்தும் நோக்கில் 1.3 பில்­லியன் டொலர்கள் உதவி வழங்­கி­யுள்­ளது. கொழும்பு துறை­மு­கத்தின் 70 வீத­மான…

Read More

அணுவாயுத நடவடிக்கையைத் தொடரும் வட கொரியா

வட கொரியா தனது அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறுத்தவில்லை எனவும் ஐ.நா.வின் தடைகளை மீறுவதாகவும் ஐ. நா. பாதுகாப்புப் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், அதிகரித்த சட்டவிரோத கப்பல் மூலமான எண்ணெய்ப் பரிமாற்றங்களும் வௌிநாடுகளுக்கான ஆயுத விற்பனை முயற்சிகளும் வட கொரியாவினால் மேற்கொள்ளப்படுவதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சர்ச்சைக்குரிய அறிக்கையானது சுயாதீன வல்லுநர்கள் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டு, ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் நேற்று (03) கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிக்கை தொடர்பில் வட கொரியா கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. புதிய அணுவாயுத நடவடிக்கையில் பியோங்யாங் ஈடுபடுவதாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். செய்மதிப் புகைப்படங்களின் அடிப்படையில், குறித்த பகுதியில் தொடர்ந்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். கடந்த ஜூன் மாதம் அமெரிக்க…

Read More

விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை

கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் மூன்று வருட போராட்த்திற்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 10 ஆம் திகதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ´மர்மயோகி´ என்ற திரைப்படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் 100 கோடி செலவில் தயாரிக்க, கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தர சம்மதம் தெரிவித்து இருந்தார். இதற்கு…

Read More