யாழில் அலுவலகம் செல்வதைத் தவிர்த்த கிராம உத்தியோகத்தர்கள்

யாழ். குடாநாட்டின் கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்று தமது அலுவலகங்களுக்கு செல்வதைத் தவிர்த்தனர். கிராம உத்தியோகத்தர் ஒருவர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டு, அவரின் அலுவலகம் சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகம் செல்வதை பகிஷ்கரித்தனர். இதனால் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சேவையைப் பெறச் சென்ற மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். யாழ். உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் , சங்கானை, வலிகாமம் வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. கிராம உத்தியோகத்தர்கள் இன்று தமது உத்தியோகப்பூர்வ அலுவலகம் செல்வதை தவிர்த்தமை தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வினவுவதற்கு நியூஸ்ஃபெஸ்ட் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த திங்கட்கிழமை (30) வண்ணார்ப்பண்ணை வடக்கு பகுதியில் கிராம உத்தியோகத்தர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டு, அவரது…

Read More

யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து வௌியேறப் போவதில்லை: இராணுவத் தளபதி

யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து வௌியேறப் போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். நேற்று (01) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, கோட்டையைப் பார்வையிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். காணொளியில் காண்க…

Read More

சீனாவின் கடன் உதவியில் செயற்படுத்தப்படும் துறைமுகத் திட்டத்தின் பரப்பைக் குறைத்த மியன்மார்

கடன் பிரச்சினை ஏற்படலாம் என்ற அச்சத்தில் சீனாவின் கடன் உதவியில் செயற்படுத்த திட்டமிடப்பட்டிருந்த துறைமுக திட்டத்தின் பரப்பை குறைப்பதற்கு மியன்மார் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சீனாவின் நிதி உதவியின் கீழ் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் முன்னெடுத்த திட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையினால் மியன்மார் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. சீனாவின் கடன் உதவியில், மியன்மாரின் ரெக்கின் மாநிலத்தின் கியுக் பீயு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு மியன்மார் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆரம்ப திட்டத்திற்கு ஏற்ப இந்த திட்டத்தின் செலவு 7.3 பில்லியன் அமெரிக்க டொலராகும். எனினும், திட்டத்தின் பரப்பை குறைத்தமையினால் செலவு 1.3 பில்லியனாகக் குறைவடைந்துள்ளதாக மியன்மார் பிரதி நிதி அமைச்சர் செட் அவுன்ங் தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்திற்கு சொந்தமான CITIC குழுமம் மூலம் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இலங்கை எதிர்நோக்கியுள்ள நிலைமையினால், தமது நாடும் கடன் சுமையில்…

Read More

மக்கள் வங்கியில் கடன் பெற்ற பணிப்பாளர் தொடர்பில் விசாரிக்குமாறு லக்‌ஷ்மன் கிரியெல்ல உத்தரவு

மக்கள் வங்கியின் பணிப்பாளர் ஒருவர் தமது நிறுவனத்திற்காக கடன் பெற்றமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக அரச தொழில் முயற்சி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டதாகவும், இதனை வௌிக்கொணர்ந்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். இதன் உண்மைத் தன்மையை அறிய அமைச்சின் செயலாளர், மக்கள் வங்கியின் தலைவருக்கு விரைவில் அறிக்கையொன்றை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Read More

இலங்கை அகதிகள் தொடர்பான கிரன் ரிஜ்ஜூவின் கருத்தால் மக்களவையில் அமளி

தமிழகத்தினூடாக இலங்கை அகதிகள் இந்தியாவினுள் பிரவேசிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (31) நடைபெற்ற மக்களவை அமர்வின் போது, இந்திய உள்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ இதனைக் கூறியுள்ளார். தமிழகத்தினூடாக இலங்கை அகதிகள் பிரவேசிப்பதாகக் கூறுவதற்கு பதிலாக அவர் தமிழகத்திலிருந்து அகதிகள் பிரவேசிப்பதாகக் கூறினார். அமைச்சரின் இந்தக் கருத்தை அடுத்து சபையில் அமளி ஏற்பட்டதுடன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பை வௌியிட்டனர். ”இலங்கையில் இருந்து தமிழகத்தின் ஊடாக அகதிகள் இந்தியாவிற்குள் பிரவேசிக்கின்றனர்” என்று கூறுவதற்குப் பதிலாக அவ்வாறு வாய்தவறிக் கூறிவிட்டதாக உள்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ கூறியபோது, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சரினால் தவறுதலாகவே குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மஹஜன் கூறியதையடுத்து, சபை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. எவ்வாறாயினும், சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை வௌியேற்றும் உரிமை…

Read More

எழுச்சி பெறும் பொலன்னறுவை: மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

எழுச்சி பெறும் பொலன்னறுவை” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேலும் பல திட்டங்கள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டன. எழுச்சி பெறும் பொலன்னறுவை அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை நகரில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதற்காக 5.52 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதேவேளை, பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டுக் கட்டிடத்தொகுதி இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இதற்காக 250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஜனாதிபதி பொலன்னறுவை ரோயல் கல்லூரி, கொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா விளையாட்டு வீரர்களையும் சந்தித்தார். செவனபிட்டிய மத்திய கல்லூரி உள்ளிட்ட நான்கு பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் இன்று வழங்கப்பட்டன. அதன் பின்னர் அரலகங்வில சிறுநீரக நோய் நிவாரணப் பிரிவு ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டதுடன், அரலகங்வில பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு…

Read More

2nd ODI – SLvSA: தென்னாபிரிக்கா 4 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி தொடரில் 2- -0 என முன்னிலையில் உள்ளது. 245 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய அவ்வணி 6 விக்கெட்டுகளை இழந்து 42.5 பந்து வீச்சுக்களில்246 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.அவ்வணியின் குயின்டன் டி கொக் 87 ஓட்டங்களை பெற்றார்.பந்து வீச்சில் இலங்கை சார்பாக 60 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.போட்டியின் ஆட்ட நாயகனாக குயின்டன் டி கொக் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மெத்திவ்ஸ் மற்றும் டிக்வெல்ல ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. தம்புள்ளை ரங்கிரி…

Read More

தேர்தல் தொடர்பான சட்டங்கள் இழுபறி நிலையில் தொடர்கிறது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடணத்தின் 21வது பிரிவில் ‘ஜனநாயக நாடொன்றில் ஆட்சி அதிகாரம் மக்களின் விருப்பமாக அமைய வேண்டும். அந்த விருப்பமானது சரியான நேரத்தில் நடாத்தப்படும். உண்மையான வாக்களிப்பின் ஊடாக தெரிவிக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் தாமதமடைதல், தேர்தலை நீதமற்ற வகையில் நடாத்துதல் போன்றன குற்றமானது என இந்நாட்டின் தேர்தல்கள் ஆணைக்குழு பகிரங்கமாகவே குறிப்பிடுகின்றது. அவ்வாறான பின்புலத்தினுள் மாகாண சபைகளுக்கான தேர்தல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது தொடர்பில் குற்றம் சுமத்தப்படுவது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கேயாகும். தேர்தல் நடாத்தப்படுவதற்கான தாமதம் தொடர்பில் உண்மையான நிலையினை அறிந்து கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் மேற்கொண்ட நேர்காணல் இது. கேள்வி: – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அவர்களே! அடுத்து எந்த தேர்தல் நடத்தப்படுகிறது. பதில் : — தற்போது கிழக்கு, வட மத்திய மற்றும்…

Read More

ரஜினியோடு என்னை ஒப்பிட வேண்டாம் – நான் சந்தர்ப்பவாதி அல்ல!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு பேட்டி அளித்தார். அரசியலை தனது அடுத்தகட்ட பயணமாக நினைக்காமல், தான் வாழ்ந்ததை நிலைநாட்டுவதற்கான அத்தியாவசியத் தேவையாக கருதுவதாகவும், கடந்த 2000-ம் ஆண்டில் ‘ஹே ராம்’ படத்தை தயாரித்த காலகட்டத்தில் இந்த எண்ணம் தனக்குள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் இருந்து அரசியல் பாதையை தேர்வு செய்த நிலைப்பாடு குறித்து பதிலளித்த அவர், ´நான் ஒரு கலைஞன், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டுமா? என்று நான் முன்னர் எண்ணியதுண்டு. ஆனால், சமூகத்துக்கு தொண்டு செய்யும் தனிநபர் கடமையின் உந்துததலால் தற்போது இருக்கும் தேக்கநிலை மற்றும் ஊழலில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் எனது முயற்சியின் ஒரேவழி அரசியலாகத்தான் இருந்தது’ என்றார். எனக்கு மக்கள் மிகவும் முக்கியமானவர்கள். புகழின்போதும், சிக்கலான வேளைகளிலும் அவர்கள் என்னை ஆதரித்து வந்துள்ளனர்.…

Read More

தேர்தல் முறை சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடையே இணக்கம் இல்லை

மாகாண சபைத் தேர்தல் எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாடு இல்லை என்று பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி கூறியுள்ளார். இன்று (02) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ​தேர்தல் முறை சம்பந்தமாக அறிந்து கொண்டு முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து அவதானம் செலுத்தி யோசனைகள் அடங்கிய அறிக்கையை அமைச்சர் கேட்டிருந்ததாகவும் அவர் கூறினார். தேர்தலை பிற்போடுவது சம்பந்தமாக தமது அறிக்கையில் இல்லை என்றும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள முறையில் தேர்தலை நடத்த முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் ரோஹண ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.

Read More