அமெரிக்காவின் பொருளாதாரத்தில் திடீர் வளர்ச்சி

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி 4.1% அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பொறுத்தே அமைகின்றது. சமீப காலமாக அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் சற்றே சரியத் தொடங்கியதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் அமெரிக்கா ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து ஈரானுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்தது. மேலும் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஈரானுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என மிரட்டியது. இதனால் இந்நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம் குறைய ஆரம்பித்துள்ளது. மேலும் சீனாவுடனான வர்த்தக போரில் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை அமெரிக்கா உயர்த்தியது. அதனால் சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் முழுவதுமாக நின்று போகும் நிலை உண்டாகி இருக்கிறது. இவைகளால் ஏற்பட்ட பொருளாதார தொய்வுகளுக்கு இடையே தற்போது சற்றே…

Read More

விபத்தில் ஒருவர் பலி

களுத்துறை, பண்டாரகம தெல்கட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். வாத்துவ, தெல்துவ பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் வேனின் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதனடுப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 194 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. போட்டியில் தென்னாபிரிக்க அணி சார்ப்பில் டுமினி ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் டூ பெலஸிஸ் மற்றும் டீ கெக் ஆகியோர் தலா 47 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். இலங்கை…

Read More

அரசியலில் இருந்து ஓய்வுபெற நான் தயார்

2020 ஆம் ஆண்டின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெற தான் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மக்களுக்கு எவ்வாறான சேவைகள் செய்தாலும் தேர்தலின் போது அவர்கள் எதிராக வாக்களிப்பது சிக்கலுக்குரிய ஒரு விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நவகத்தேகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More

செலவுக்கு காசு இல்லை – ஐ.நா சபை

கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர், அன்டோனியோ குட்டெரஸ் கடிதம் எழுதி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உரிய காலத்தில் செலுத்தவில்லை என்பதால் சபையின் முக்கிய நடவடிக்கைகளுக்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா சில மாதங்களுக்கு முன், 123 கோடியை செலுத்தி உள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பிரேசில், எகிப்து, இஸ்ரேல் உள்ளிட்ட 81 நாடுகள் இன்னும் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை தோல்வி

அரசாங்கம் முன்வைத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். இந்த முறையினால் உள்ளூராட்சி சபைகளில் பல்வேறு சிக்கல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தலிலும் இதே முறை முன்வைக்கப்பட்டால் நாட்டில் ஆட்சி சீர்குலையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய தேர்தல் முறை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சித்தலைவர்கள் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.

Read More

மிளகாய் தூளை வீசி பணத்தை கொள்ளையிட்ட இருவர் கைது

புளத்சிங்கள பிரதேசத்தில் மிளகாய் தூளை வீசி தாக்கிவிட்டு பணக் கொள்ளை நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார். தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்திற்கு நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட சுமார் 20 மில்லியன் ரூபா பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் நிறுவனத்தின் வாகன ஓட்டுனரையும் பாதுகாப்பு அதிகாரியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். புளத்சிங்கள – ஹொரண வீதியின் பஹல நாரகல பகுதியில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பணத்தை எடுத்துச்சென்ற மோட்டார் வாகனம் உணவு உற்கொள்வதற்காக விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ஜீப் வாகனம் ஒன்றில் வந்த ஒரு குழு மிளகாய் தூளை வீசி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். பணத்திற்கு பாதுகாப்பிற்காக…

Read More

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

மொனராகல, கும்புக்கன பகுதியில் அனுமதி இல்லாமல் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை மொனராகல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் நீண்டகாலமாக மாணிக்க அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. புத்தள, மாகொடயாய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை மொனராகல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் மொனராகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கடலுக்கு அடியில் புதைக்கப்படும் இராணுவ டாங்கிகள்?

போருக்கு மட்டும் அல்ல சுற்றுசூழலுக்காகவும் இராணுவ டாங்கிகளை பயன்படுத்தலாம் என்று தங்கள் செயல் மூலம் காட்டி இருக்கிறார்கள் லெபனான் சூழலியலாளர்கள். ஆம், அவர்கள் கடல் உயிரினங்களுக்கு புகலிடம் தருவதற்காக கடலுக்கடியில் 10 பழைய இராணுவ டாங்கிகளை செலுத்தி இருக்கிறார்கள். இந்த இராணுவ டாங்கிகள் அனைத்தும் கடலில் மூன்று கி.மீ அழத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனை சுற்றி விரைவில் கடல்பாசி வளரும், கடல் உயிரினங்களின் வசிப்பிடமாக இது மாறும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த பழைய இராணுவ டாங்கிகள் அனைத்தும் இஸ்ரேலை நோக்கி கடலுக்கடியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. சிடோன் கடற்கரையின் நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்த காமில் கோஸ்பர், “பாலத்தீன மக்களுக்கு எங்கள் ஆதவரை காட்டுவதற்காக அந்த திசையில் நிறுத்தி இருக்கிறோம்” என்கிறார்.

Read More

போட்டிப் பணத்தில் 25% நன்கொடையாக வழங்கவுள்ள இலங்கை அணி

இன்றைய இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போட்டிப்பணத்தில் 25 வீதத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார ரீதியில் பின்னடைவில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வாதார உதவிக்காக அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பிற்கு இந்த நன்கொடையை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

Read More