சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை காதலிப்பதாக செய்தி வந்தது. அதை உறுதிபடுத்தும் வகையில் சுருதி நிகழ்ச்சிகளில் மைக்கேலுடன் கலந்துகொள்கிறார். கமல் முன்பு கூட காதலருடன் வலம் வருகிறார். இது குறித்து கமலிடம் கேட்டபோது ‘என் மகள்களின் திருமணத்தை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். என் கல்யாணத்தையோ விவாகரத்தையோ என் அப்பா முடிவு செய்யவில்லை. அதுபோல அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று பதில் அளித்தார்.

Read More

இராஜாங்க அமைச்சரின் வாகன ஓட்டுனர் விளக்கமறியலில்

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ வீட்டிற்கு மது போதையில் சென்று கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிரிஷ்ணனின் வாகன ஓட்டுனரை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (29) அதிகாலை 3 மணியளவில் குறித்த நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எந்த நோக்கத்திற்காக குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோவின் வீட்டிற்குள் நுழைந்தார் என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

செவ்வாய் கிரகத்தை மிகத் தெளிவாக காண முடியும்

நாளை மற்றும் நாளை மறுதினம் செவ்வாய் கிரகத்தை மிகத் தெளிவாக காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் கோள் மண்டல கற்கைக் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தரன ஜயரட்ன தெரிவித்துள்ளார். 15 வருடங்களுக்கு பின்னர் செவ்வாய்க் கிரகம் தனது அண்டவெளி சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ளது. இது சற்று அபூர்வமான விடயம் என்றும் சந்தரன ஜயரட்ன கூறினார். இந்த நாட்களில் சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் கிழக்கு வானில் செவ்வாய் கிரகணத்தை காண முடியும். அதிகாலை வேளையில் மேற்கு வானில் இந்த கிரகத்தை காண முடியும். நாளை மற்றும் நாளை மறுதினம் செவ்வாய் கிரகத்தை மிகத் தெளிவாக காண முடியும் என்று கலாநிதி சந்தன ஜயரட்ன மேலும் தெரிவித்தார்.

Read More

பவித்ரா வன்னியாரச்சி மீது சொய்ஸா பாய்ச்சல்!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பவித்ரா வன்னியாராச்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்காக செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இன்று குற்றஞ்சாட்டினார். எம்பிலிபிட்டிய விகாரையில் நேற்று நடைபெறவிருந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி கலந்துகொள்ளாமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். இதேவேளை,எம்பிலிபிட்டிய ஹீந்தளுக்ஹின்ன நாக விகாரையில் அமைக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் உருவச் சிலையை திரைநீக்கம் செய்யும் நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொள்ளாமல், சமல் ராஜபக்ஸ கலந்துகொண்டமையால் அமைதியின்மை ஏற்பட்டதுடன், இதன்போது, சமல் ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் உரையாடியபோது கிடைத்த பதில் தொடர்பில், நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் கடும் அதிருப்தி வௌியிட்டமை குறித்தும் அவர் கருத்து வௌியிட்டார்.

Read More

கயிறு கொடுத்தலில் சூரர்கள் தெற்கின் அரசியல்வாதிகள்! – சி.வி

கயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்! – என வடக்கு முதல்வர் சி.வி விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர் இந்து மகா சபையின் கலை விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போது முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

நாட்டை பொறுப்பேற்கும் போது நிதியிருக்கவில்லை – பிரதமர் !

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்ததுடன் இதன்போது உரையாற்றுகையில் பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். கிழக்கு மாகாணம் வடக்குபோல் யுத்ததினால் பாதிக்கப்பட்டமையால் பொருளாதார ரிதியில் முன்னேற்ற வெறு பல திட்டங்கள் உள்ளதாகவும் ,இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாதகவும் பிரதமர் கூறினார். கிழக்கில் சுற்றுலா விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். அதனை ஆரம்பித்த பின்னர் சுற்றுலாத்துறையினால் பலருக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும் இதன் போது பிரதமர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இவையனைத்தையும் செய்ய பாரிய நிதி வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர்,நாங்கள் நாட்டினை பொறுப்பேற்ற போது நிதியிருக்கவில்லைஅத்துடன் வட்டியைச் செலுத்துவதற்கு வருமானம் போதாமலுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Read More

பொதுஜன பெரமுனவிலிருந்து விலகினார் மேஜர் அஜித் பிரசன்ன!

பொதுஜன பெரமுனவிலிருந்து தாம் விலகியுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன, தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பெஸில் ராஜபக்ஸ இரண்டு தடவைகள் பெற்தரைக்கு வந்ததான குறிப்பிட்டுள்ள முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர், மேஜர் அஜித் பிரசன்ன, அதற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும்,பெந்தவர பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் தெரிவின்போதும் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தான் முயற்சி செய்தபோது, இந்த விடயம் தொடர்பில் பேச வேண்டாம் என பெஸில் ராஜபக்ஸ கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதனால் நாம் அதிகளவில் முடக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலுக்கு தகுதியானவர் எனவும், அவரை வெற்றி பெறச் செய்வதற்கு பகிரங்கமாக பேசியமையாலும் பெசில் ராஜபக்ஸ இவ்வாறு நினைத்திருக்கலாம் எனக்…

Read More

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் – கங்கனா ரனாவத்

பிரதமர் மோடியின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படத்தின் திரையீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கங்கனா ரனாவத், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற தனது ஆவலை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் பேசுகையில், “பிரதமர் மோடி சிறு வயதில் மிகவும் கடினமாக சூழ்நிலைகளில் வாழ்ந்துள்ளார் என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது. நாம் தான் அவரை பிரதமர் தேர்ந்தெடுத்தோம். இந்த பதவியை யாராலும் பறிக்க முடியாது. இது அவருடைய கடும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. நம் நாடானது தற்போது பள்ளத்தில் இருக்கிறது. இதிலிருந்து நாட்டை மீட்க 5 வருடங்கள் போதாது. இதை பள்ளத்திலிருந்து மீட்க மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்” என்றார். SHARE OR SAVE THIS POST FOR LATER USAGE

Read More

தற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது – ஸ்ரீரெட்டி

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார். தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார். ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது செக்ஸ் புகார் கூறி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இயக்குனரும், நடிகருமான வாராகி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஸ்ரீரெட்டியே தான் விரும்பி சிலருடன் பாலியலில் ஈடுபட்டதாக கூறியிருப்பதால் அவர் மீது விபசார பிரிவிலும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவிலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாராகி தனது மனுவில் அவர் கூறியிருந்தார். நான் பாலியல் தொழிலாளி இல்லை. பாலியல் தொழிலாளி என்று அவதூறு செய்வதால் தற்கொலை செய்து…

Read More

நல்ல ஆட்சி நமது பிறப்புரிமை என்று சொல்லும் நேரம் இது

பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் எனும் ரேடியோ நிகழ்சி மூலம் இந்திய நாட்டு மக்களிடம் இன்று (29) உரையாடினார். அப்போது, இந்தியாவில் ஆட்சியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நல்ல ஆட்சி நமது பிறப்புரிமை என்று சொல்லும் நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைவருக்கும் சிறந்த ஆட்சியும், அதன் பலன்களும் கிடைக்க வேண்டும். அதன் மூலமே புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என மோடி குறிப்பிட்டார். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இளைஞர்களின் சாதனைகளை பற்றி குறிப்பிட்ட பிரதமர், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இளைஞர்களும் அவர்களது பங்களிப்பை வழங்குவதாக மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் மோடி தெரிவித்தார்.

Read More