கோத்தபாய மீதான தற்கொலை தாக்குதல் : சந்தேகநபர் ஶ்ரீஸ்கந்தராஜா விடுதலையானார்

2006 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு, உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஶ்ரீஸ்கந்தராஜா கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீஸ்கந்தராஜா எனப்படும் சர்மா என்ற இந்து மதகுரு ஒருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பிரதிவாதியான மதகுரு, பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதல்ல என்று தெரிய வந்ததையடுத்து அவரை விடுதலை செய்யுமாறு நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார். ஒப்புதல் வாக்குமூலத்திற்கு எதிராக வேறெந்த சாட்சிகளும் பிரதிவாதிக்கு எதிராக இல்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார். இதன்காரணமாக அவரை விடுதலை செய்யுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதிவாதியை நிபந்தனையற்ற விடுதலை…

Read More

மகிந்த ராஜபக்ச பெயரில் சர்வதேச மயானம் ஒன்று மட்டும் இல்லை – அசாத் சாலி

கடந்த அரசாங்கம் அரச நிர்வாகத்தில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் “மகிந்த ராஜபக்ச” என்றே இடப்பட்டதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி குற்ற்ம்சுமத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து உரையாற்றிய, இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் மகிந்த ராஜபக்சவின் பெயரே சூட்டப்பட்டது. தாமரை தடாகத்திற்கும் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டதுடன். விளையாட்டு மைதானம் ஒன்றை நிர்மாணித்தால் அதற்கும் மகிந்த ராஜபக்ச என்றே பெயர் சூட்டப்பட்டது. காலி மைதானத்தின் பார்வையாளர் கூடத்தை நிர்மாணித்து அதற்கும் மகிந்த ராஜபக்ச என பெயரிட்டனர். மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றுக்கும் மகிந்த ராஜபக்சவின் பெயரே சூட்டப்பட்டன. மகிந்த ராஜபக்ச என்ற பெயரில் சர்வதேச மயானம் என்ற ஒன்று மட்டுமே இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கம் உதாவ…

Read More

வவுனியா; வரட்சியால் 1,825 குடும்பங்களைச் சேர்ந்த 6,583 பேர் பாதிப்பு

வவுனியா மாவட்டத்தில் வரட்சி காரணமாக 1,825 குடும்பங்களைச் சேர்ந்த 6,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 720 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 257 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 446 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களைச் சேர்ந்த 5160 பேருமாக1825 குடும்பங்களைச் சேர்ந்த 6583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் மழை இன்மை காரணமாக இப்பகுதிகளிலுள்ள குளங்கள், கிணறுகளில் தண்ணீரின் மட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை…

Read More

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் உத்தரவு

சட்டவிரோதமாகக் குடியேறிய 6 இலட்சம் பேரை உடனடியாக சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கண்டறியும் நடவடிக்கையை கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் மலேசிய குடியேற்றத்துறை ஆரம்பித்தது. அதன்படி, இதுவரை 3,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆகஸ்ட் 30-க்குள் சரணடைய வேண்டும் என்றும் அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் மலேசிய அரசு எச்சரித்துள்ளது. தானாக முன்வந்து சரணடையும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

Read More

முதுகெலும்பு உள்ள ஒருவரே ஞானசார தேரருக்கு வேண்டுமாம்!

முதுகெலும்புள்ள ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர் சர்வாதிகாரியா? அல்லது ஜனநாயகவாதியா? என்பது குறித்து தமக்குப் பிரச்சினையில்லை என்றும் கலகொட அத்தே ஞான சார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் போகம்பரை சிறைச்சாலைக்கு விஜயம் செய்த போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஞான சார தேரர் அங்கு மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார்? என்பது தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியினர் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். நமக்கு தனிநபர்கள் யார் என்பது முக்கியமில்லை. நாட்டை சரியான திசைக்கு கொண்டு செல்ல கூடிய முதுகெலும்புள்ள ஒருவர் நமக்கு தேவை. அத்துடன் மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்றும் கலகொட அத்தே ஞான சார தேரர் கூறியுள்ளார்.

Read More

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளுக்கு எச்சரிக்கையிலான அறிவித்தல்

கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை (ளiஅ) தம்வசம் வைத்திருக்கும் கைதிகள் அவற்றை உடனடியாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலையில் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைக்குள் கைதிகள் அடிக்கடி நடமாடும் பிரதேசங்களில் இந்த அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறைக்கூடங்களுக்குள் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்பதாக கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்படுமெனவும், அவ்வாறு கையளிக்காத கைதிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தும் கைதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சு ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

வாதுவையில் அரைநிர்வாணத்துடன் பெண்களை கட்டிப்பிடிக்கும் கிறீஸ் மனிதன்

வாதுவை பிரதேசத்தில் பொஹத்தரமுல்லை, பொதுபிடிய, கம்மனயாவத்தை கிராமங்களில் இரவு நேரங்களில் குடியிருப்புக்களுக்குள் நடமாடும் கிறீஸ் மனிதனினால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது. கருப்பு நிற குட்டையான காற்சட்டை மாத்திரம் அணிந்துவரும் இந்த கிறீஸ் மனிதன் இரவு நேரங்களில் வீடுகளிலுள்ள இளம் பெண்களைக் கட்டிப்பிடிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் பொஹத்தரமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் பரிசோதகர்கள் தம்பதிகள் வசிக்கும் வீடொன்றில் புகுந்த இந்த கிறீஸ் மனிதன் பெண் பொலிஸ் பரிசோதகரின் காலை பிடித்து இழுத்துள்ளார். இதன்போது குறித்த பெண் சத்தமிடவே கிறீஸ் மனிதன் தப்பியோடியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இரவில் நடமாடும் இந்த கிறீஸ் மனிதன் தொடர்பாக வாதுவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

இராணுவ விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா!

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீது இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவே கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இராணுவ விவகாரங்களுக்குள், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மூக்கை நுழைக்கிறார் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க முறைப்பாடு செய்துள்ளார். தனக்குத் தெரியாமல் சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்குகிறார். இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் குறித்தும் பேசுகிறார் என்றும் சிறிலங்கா அதிபரிடம், இராணுவத் தளபதி கூறியுள்ளார். இது தொடர்பில் சரத் பொன்சேகா தரப்பிலிருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ராஜபக்ஷக்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தொகை : வெளியிட்டது அரசாங்கம்

ராஜபக்ஷ குடும்பத்தினரின் பெயர்களில், வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் வைப்பிலப்பட்டுள்ள பணத் தொகை சிலவற்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.(mahinda rajapaksa foreign bank details) ராஜபக்ஷ குடும்பத்தினரின் பெயர்களில் ஹொங்கொங், டுபாய் வங்கிகளில் பேணப்பட்டு வரும் கணக்கு விபரங்களையே அமைச்சர் ராஜித சேனாரட்ன வெளியிட்டுள்ளார். ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்களில் டுபாயில் மூன்று வங்கி கணக்குகளில் 1086 மில்லியன் அமெரிக்க டொலர் பணமும், மற்றுமொரு வங்கிக் கணக்கில் 500 மில்லியன் டொலரும் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர் ஒருவரது கூட்டு வங்கிக் கணக்கில் 1800 மில்லியன் டொலர் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் வங்கிகளில் ராஜபக்ச குடும்பத்தினர் வைப்புச் செய்துள்ள பணம் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகம் இந்த வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை பெற்றுக் கொள்வதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள்…

Read More

கட்சி முடக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏக்களை நீக்குவது எப்படி?

டிடிவி தினகரன் தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதம் கட்சி, சின்னம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அதிமுக என்ற கட்சியே முடக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தை மீறி பேரவைத் தலைவர் எப்படி 18 பேரை தகுதி நீக்கம் செய்ய முடியும். இவ்வாறு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதிட்டார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் 3-வது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன்பாக நடந்து வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜராகி வாதிட்டதாவது: இந்த தகுதி நீக்கம் நடந்தபோது அதிமுக என்ற கட்சியே முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டதால்…

Read More