Play Boy மாடலுடன் டிரம்ப் – ரகசிய ஆடியோ பதிவு!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொள்வதை, டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் ரகசியமாக பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூயோர்க்கில் உள்ள கொஹென் வீட்டில் நடத்தப்பட்ட எஃப் பி ஐ சோதனைக்கு பிறகு, இந்த ஆடியோ பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி டிரம்புடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறும் கரென் மெக் டொகலுக்கு பணம் அளிப்பது தொடர்பாக, டிரம்ப் மற்றும் கொஹென் பேசிக் கொள்ளும் ஆடியோ அதில் இருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

முதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் – இஷாக் ரஹ்மான்

இலஞ்சம், ஊழல்களை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி ஊழலில் இருந்து முதலில் வெளிவர வேண்டும் என அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இலஞ்சம் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், இலஞ்சம், ஊழல்களை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதலில் அரசியல்வாதிகள் ஊழலில் இருந்து வெளியேற வேண்டும் . அரசியல்வாதிகளிடையே ஒழுக்கமில்லாத காரணத்தினாலேயே நாடு இன்னம் முன்னேற்றம் காணாமல் உள்ளது. மலேசியாவில் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்ட காரணத்தினால் முன்னாள் பிரதமரை சிறையில் அடைத்துள்ளனர். மஹதீர் மொஹமட் அதற்கான ஏற்பாடுகளை அச்சமில்லாமல் செய்துள்ளார். இந்நிலையில் இலங்கை பெளத்த நாடு என்ற…

Read More

போலி நாணயத்தாள்களுடன் தேரர் கைது

போலி 1000 ரூபா நாணயத்தாள்கள் இரண்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பகல் இந்த கைது இடம்பெற்றுள்ளது. புளத்பிட்டிய ரஜமாக விகாரையின் விகாராதிபதியாக இருந்துள்ளதாக கூறப்படும் சந்தேகநபர் பின்னர் நவத்தேகம மகமெத்தேவ பிரதேச விகாரை ஒன்றில் பணியாற்றியுள்ளார். சிலாபம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள பல கடைகளில் ஆயிரம் ரூபா நாணயத் தாளை கொடுத்து பலவிதமான பொருட்களை கொள்வனவு செய்ய சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது வியாபாரி ஒருவரால் சிலாபம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தேரரிடமிருந்து போலி 1000 ரூபா நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த தேரர் வருகை தந்த முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியை அந்த இடத்திலேயே வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

எந்த தடை வந்தாலும் மரண தண்ட​னை அமுல்படுத்தப்படும்

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டே போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எந்த தடை வந்தாலும் அவர்களுக்கு எதிராக மரண தண்ட​னையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை கூட்டமொன்று இடம்பெற உள்ளதாகவும், சட்டம், நீதித்துறை, சிறைச்சாலை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரையும் உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு எவ்வித ஒத்துழைப்புக்களையும் வழங்குவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Read More

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அளுத்கம, தர்கா நகர் பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகளிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் தீவிரமடைந்ததையடுத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அளுத்கம, சீனவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். கொலை தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

කඳු තුනකට ගිනි ඇවිලෙයි- අක්කර 50 ක් විනාශයි

ඇල්ල ආරුක්කු පාලම කන්ද, වැලිමඩ ගවරම්මාන කන්ද ,වැලිමඩ රොහල් කන්ද යන කදු තුනෙහි ඊයේ රාත්‍රී (20) කැලෑවට තැබු ගිනි පැතිර යාමෙන් අක්කර 50 ක පමන හානි සිදුව ඇතැයි ඇල්ල,වැලිමඩ පොලීසි පවසයි. ගවරම්මාන කන්දේ ගින්න එම ගම්මානයේ නිවාස දක්වාම පැතිරගොස් තිබු අතර එක් නිවාසයකට හානි සිදුව ඇතැයිද පොලිසිය පවසයි . මේ ගිනි තැබීම් සම්බන්ධයෙන් වැලිමඩ හා ඇල්ල පොලීසි පරීක්ෂණ පවත්වයි.

Read More

අඹෝගමදී පුද්ගලයෙකු ඝාතනය කරලා

අඹන්පොල, වලත්වැව, අඹෝගම ප්‍රදේශයේදී පුද්ගලයෙකු ඝාතනය කර තිබේ. අඹන්පොල පොලීසියට ලද තොරතුරකට අනුව හිසේ තුවාල සහිතව අදාළ පුද්ගලයා මියගොස් සිටියදී සොයාගෙන ඇති බව පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක කාර්යාලය සඳහන් කළේය. මියගොස් ඇත්තේ වලත්වැව, අඹන්පොල ප්‍රදේශයේ පදිංචිව සිටි 28 හැවිරිදි පුද්ගලයෙකි. අදාළ ඝාතනය සම්බන්ධයෙන් මියගිය පුද්ගලයාගේ මවගේ අනියම් පුරුෂයා අත්අඩංගුවට ගෙන තිබේ. සැකකරු අද (21) දින මහව මහේස්ත්‍රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.

Read More

වත්මන් රජය මේ වන විට වගකීම් රැසක් ඉටු කර අවසන්

රට තුළ සංවර්ධනයක් සිදුව ඇති බවට විද්‍යාමාන නොවුණද වත්මන් රජය විසින් මේ වන විට වගකීම් රැසක් රට වෙනුවෙන් ඉටු කර ඇති බව අමාත්‍ය දුමින්ද දිසානායක මහතා පවසයි. ඔහු පවසන්නේ වත්මන් රජය විසින් මිල කළ නොහැකි සේවාවන් රැසක් රටේ අනාගතය වෙනුවෙන් ඉටු කර ඇති බවය. අනුරාධපුර ප්‍රදේශයේ පැවති ජන හමුවකදී දුමින්ද දිසානායක අමාත්‍යවරයා මේ බව ප්‍රකාශ කළේය.

Read More

மரணதண்டனை கைதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதாயின், அடையாளங் காணப்பட்ட கைதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு 3 அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, சட்டமா அதிபர், நீதி அமைச்சர் மற்றும் மரணதண்டனை உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி ஆகியோரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கைகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். நீதியமைச்சரின் அறிக்கை, அமைச்சின் விசேட குழுவினரால் தயாரிக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ள அதேநேரம், குறித்த குழுவினர், கைதிகளின் கருத்துக்களையும் கேட்டறிதல் அவசியமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. கைதிகளுக்கு மரணதண்டனையைப் பிறப்பித்த நீதிபதியும் தமது உத்தரவு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சட்டமா அதிபரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபரின் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார். குறித்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இறுதி…

Read More

50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது

ஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லொறி மற்றும் காரில் எத்தனோலைக் கொண்டுசென்ற வேளையிலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, பதுக்கி வைத்திருந்த மேலும் எத்தனோல் பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனடிப்படையில், இதுவரை 50 எத்தனோல் பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கலால்வரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More