தலாவ வங்கிக் கொள்ளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

அனுராதபுரம் தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வாடியாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இருந்து ஒன்பது கோடி ரூபா பெறுமதியான ரொக்கப்பணமும், தங்க ஆபரணங்களும் சமீபத்தில் கொள்ளையிடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் பவுண் பெறுமதிக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும். களவு போன ஆபரணங்களுக்கு பதிலாக அவற்றை போன்ற ஆபரணங்களை செய்து தருமாறு சில வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த கோரிக்கை தொடர்பில் வங்கி முகாமைத்துவம் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களம்

Read More

நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தினால் வட மாகாண சபையில் குழப்பம் எழாது

நீதிமன்ற தீர்ப்பை உரிய முறையில் பின்பற்றினால் வட மாகாண சபையில் எவ்வித குழப்பங்களும் இடம்பெற மாட்டாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளையில் எவ்வித குழப்பமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். நீதிமன்ற கட்டளையை சரியாக அமுல்படுத்தினால் எவ்வித குழப்பமும் இன்றி சுமுகமாக மாகாண ஆட்சி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் தௌிவின்றி இருப்பதாக வேண்டுமென்றே பாசாங்கு காட்டிக் கொண்டு அமுல்படுத்தாமல் இருப்பதுதான் குழப்பநிலைக்கு காரணமாக இருக்கின்றது என்று எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

Read More

தமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் செய்த வேலை…

கவர்ச்சி புயல் என்றதும் முதலில் நியாபகம் வருவது நடிகை சன்னி லியோன் தான். இப்போது கவர்ச்சி என்பதை தாண்டி பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதற்கான புரொமோஷன் வேலைகளை அதிகம் செய்துள்ளார். இந்த நேரத்தில் அவர் டுவிட்டர் பக்கத்தில் தமிழில் தனது படம் குறித்தும் அதை நீங்கள் விரும்புவீர்கள் என்று பதிவு செய்துள்ளார். அதில் நிறைய பிழைகள் இருந்தாலும் சன்னி லியோன் தமிழில் பதிவு செய்துள்ளாரே என்று ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Read More

வட மாகாணத்தில் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பித்து வைப்பு

இந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்றுமாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தி அம்புலன்ஸ்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் வடமாகாணம் மற்றும் ஊவா மாகாணத்தில் மேற்படி அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும்பொருட்டு 55 நோயாளர் காவு வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென இந்திய மக்களால் இருபத்தாறு மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு தலா 3 அம்புலன்ஸ் வண்டிகள் வீதமும் வடமாகாணத்திற்கு 21 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டு இந்த அவசர சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் ஊவா மாகாணத்திற்கு 34 வண்டிகளும் இந்த சேவையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன்…

Read More

வாட்ஸ்ஆப் – இனி எவ்வளவு செய்தி அனுப்ப முடியும்?

இந்தியாவில் ஒரு செய்தியை வாட்ஸ்ஆப் மூலம் எத்தனை முறை பிறருக்கு அனுப்பலாம் என்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. வாட்ஸ்ஆப் மூலம் போலிச் செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் பரவிய செய்திகளால் இந்தியாவில் சமீபத்தில் கும்பல் கொலைகள் நடக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போலிச் செய்திகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால், நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று மத்திய அரசு வியாழன்று அந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. சுமார் 20 கோடி பயனாளிகளுடன் இந்தியா வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு உலகிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. உலகில் உள்ள வேறு நாடுகளின் பயனாளிகளைவிட இந்தியர்கள் அதிக அளவில் செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது. ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் அதிகபட்சம் 256 உறுப்பினர்கள் இருக்கலாம்.…

Read More

நான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் – பிக்பாஸ் மமதி!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து பிரபலமானவர் மமதி ஷாரி. இவர் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். மமதிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் ரஜினியுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று மறுத்துவிட்டாராம். இவர் ஸ்ரீரெட்டியின் சர்ச்சை பற்றி கூறுகையில், நான் சிறுவயதில் பாலியல்ரீதியாக தாக்கப்பட்டேன். ஆனால் அந்தவயதில் எனக்கு புரியவில்லை. வளர்ந்த பிறகு தான் நானே இதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் இவர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அதிர்ச்சி தகவல் – புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம்

கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியலாளர்கள். அதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நாகரிகங்கள் அழிந்துபோன இந்தக் காலகட்டத்துக்கு ´மேகாலயன் யுகம்´ என்று பெயரிடப்பட்டுள்ளது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் வளரும் புற்றுப் பாறைகளின் அடிப்படையில் இந்த யுகத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. காலவரிசையை அடிப்படையிலான சர்வதேச பாறைப்படிவியல் விளக்கப்படம்மும் (International Chronostratigraphic Chart) அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் புவியியல் வரலாற்றை காலவரிசைப் படி அந்த புகழ்பெற்ற விளக்கப்படம் பட்டியலிடுகிறது. இந்த யுகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அறிவியலாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வுக் கட்டுரையில் ´மேகாலய யுகம்´ பற்றிய முன்மொழிவு இருந்தாலும், இது குறித்து போதிய விவாதங்கள் நடத்தப்படவில்லை என்று சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் 4.6 கோடி ஆண்டுகள் நீளும் பூமியின் வரலாற்றை காலத் தொகுதிகளாக…

Read More

மீண்டும் எச்.ஐ.வி. தாக்கம் அதிகரிப்பு?

கடந்த சில ஆண்டுகளாக எச்.ஐ.வி. தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நிதியுதவிகள் குறைந்து வருவதால், அதன் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் ஆபத்தான சூழல் நிலவி வருவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி. நோய் தொற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கை அடைய முடியாது என்று ´தி லான்செட்´ என்ற ஆய்விதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக எச்சரிக்கை

அரச நிறைவேற்று அதிகாரிகளின் முகாமைத்துவ கொடுப்பனவு சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினையை தீர்க்காவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம் கூறியுள்ளது. இந்த கொடுப்பனவு பொறியியலாளர் சேவை அதிகாரிகளுக்கு வழங்காதிருக்கு சில தரப்பினர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் டீ. அபேசிறிவர்தன கூறினார்.

Read More

15 இலட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு

சிங்கப்பூரை சேர்ந்த 15 இலட்சம் மக்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் சுகாதார தரவு தளத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள் இலக்கு வைத்து நன்கு திட்டமிட்டு தரவு திருட்டில் ஈடுபட்டதாக அரசாங்க அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த ஆண்டு மே மாதம் முதல் திகதியில் இருந்து ஜூலை நான்காம் திகதி வரை வைத்தியசாலைகளுக்கு சென்றவர்களின் தரவுகள் திருடப்பட்டிருக்கிறது. பெயர்கள், முகவரிகள் மட்டும் திருடப்படவில்லை, மருத்துவ ஆவணங்கள், புறநோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் என பல தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். கிட்டத்தட்ட 1,60,000 புறநோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. பதிவுகள் எதுவும் நீக்கப்படவோ, திருத்தப்படவோ இல்லை. பிற நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள் மருத்துவ பரிசோதனை முடிவுகள், மருத்துவரின் குறிப்புகளும் திருடப்படவில்லை.…

Read More