ஸ்ரீதேவி பயந்தது போல அவரது மகளுக்கு ஏற்பட்ட கொடுமை!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயம். அவரது இறப்புக்கு பிறகு ஜான்வி கபூர் தான் அதிகம் பேசப்படுகிறார்.
ஏனெனில் தடக் என்ற படம் மூலம் அவர் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது, வசூலிலும் 50 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ஜான்வியை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்களாம், அதோடு ஸ்ரீதேவி போல் இல்லை என்றும் விமர்சனம் செய்கிறார்களாம்.

இதுகுறித்து ஸ்ரீதேவி கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் கூறியதாவது, ஜான்வியை ஸ்ரீயுடன் ஒப்பிடுகிறார்கள்.

இது நடக்கும் என்று எங்களுக்கும் தெரியும். ஸ்ரீக்கும் தெரியும், அதனால் தான் அவர் மிகவும் கவலைப்பட்டார். இது போன்று நடக்கும் என்று எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள ஜான்வியை தயார் செய்தார் என்றார்.

Related posts

Leave a Comment