வேலை நிறுத்தம் வெற்றி – GMOA : இது ராஜபக்சக்களின் ஒப்பந்தம் – UNP

சிங்கப்பூர் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க்ததினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், இந்த வேலை நிறுத்தமானது ராஜபக்ச தரப்பனருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

எனவே, இந்த இரகசிய ஒப்பந்தத்தை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், பிரதியமைச்சருமான அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

Related posts

Leave a Comment