வெள்ளத்தில் இதுவரை 28 பேர் பலி – 100 கோடி ரூபா நிவாரணம்!

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 28 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிக்காக இராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கேரளா வந்தடைந்தார். பின்னர் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி அல்போன்ஸ் உடன் அவர் ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.

அதன் பிறகு, அதன் பிறகு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக 100 கோடி ரூபா வழங்கப்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறுகையில், ´´வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நெருக்கடியான நேரத்தில் உள்ள கேரள மக்களின் துன்பத்தை புரிந்துகொள்ள முடிகிறது. வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் உடனடி நிவாரண நிதியாக 100 கோடி ரூபா வழங்கப்படும்.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்கு 80.25 கோடி ரூபா ஏற்கெனவே கடந்த மாதம் கேரளாவிற்கு வழங்கப்பட்டுவிட்டது. கேரளாவில் இருந்து வருவதற்கு முன்னதாக இரண்டாவது கட்டமாக மேலும், 80.25 கோடி ரூபா பேரிடர் நிவாரண நிதியாக அளிக்க ஒப்புதல் அளித்துள்ளேன்´´ என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment