வெல்கமவின் தாக்குதல்

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, சக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறித்து லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்துள்ள கருத்து குறித்து நேற்று (05) வெல்கம எம்.பி. காரசாரமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

”நாம் எதிர்பார்த்துள்ள ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச. ஜனாதிபதித் தேர்தலுக்கு நீங்களே வேண்டும். அப்படி இல்லாமல் அரசியல் செய்யாதவர்கள் வருவது பயனற்றது. 36 வருடங்களாக தொகுதி அமைப்பாளராக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி வகித்துள்ளேன். அமைப்பாளராக நான் பதவியேற்கும் போது நாமல் பிறக்கவும் இல்லை. நான் நினைக்கிறேன், ரோஹித்த தனது காற்சட்டையுடன் சிறுநீர்கழிக்கும் காலம் அது என நான் நினைக்கிறேன். வெல்கம குறித்து கதைத்து பிரயோசனம் இல்லை, அவர் விகடகவியின் பாத்திரத்தை ஏற்றுள்ளதாக லங்காதீப பத்திரிகைக்கு மகிந்தானந்த கூறியுள்ளார், அன்று மத்திய செயற்குழுக் கூட்டத்தில் செயற்பட அவருக்கு முதுகெலும்பு இருக்கவில்லை. நுகேகொடை மேடையில் ஏறுவதற்கு முதுகெலும்பு இருக்கவில்லை. அன்று ஒளிந்திருந்தவர், இன்று பேசுகிறார்.” என்று குமாரவெல்கம தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சிக்குள் தற்போது அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளதால் அந்தக் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த பனிப்போர் தற்போது பகிரங்கமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் அளவிற்கு உக்கரமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறது.

Related posts

Leave a Comment