வெலிகம ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் ஆரம்பம்

வெலிகம ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (19) இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்து ரவைகள், மற்றும் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் மதுபோதையுடன் சிலர் இருந்ததுடன்,வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment