வெப் சீரியலாக தயாராகிறது சில்க் ஸ்மிதாவின் வரலாறு

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியலாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி மற்றும் காலா படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் திரைப்படமாக வெளிவந்துள்ள நிலையில் தற்போது வெப்சீரியலாக விரைவில் வெளிவரவுள்ளது.

தற்போது ஹிந்தியில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு குறித்த வெப் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் சில்க்ஸ்மிதாவின் சீரியலும் அதேபோன்று வெப் சீரியலாக வரவுள்ளது. இந்த வெப் சீரியலில் திரைப்படங்களில் வெளிவராத சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை குறித்த தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment