விராட்கோஹ்லியை அசிங்கப்படுத்திய அவுஸ்திரேலியா ஊடகம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லியை விலங்குகளுடன் ஒப்பிட்ட அவுஸ்திரேலியா ஊடகத்தின் செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அப்போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித், டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த டிரஸிங் ரூமில் இருந்த வீரர்களிடம் உதவி கேட்டார்.

அதுபெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து பேசிய ஸ்மித், மதி மயங்கிய நிலையில் அந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இணையதளம் மூலம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லியை, விலங்குகளுடன் ஒப்பிட்ட செயல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரத்தின் ஸ்போர்ட்ஸ் வில்லன் யார் என்ற தலைப்பில் அந்த ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில், பாண்டா கரடி, பூனைக்குட்டி மற்றும் நாய் ஆகிய விலங்குகளின் வரிசையில் விராத் கோலியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

இது விராட்கோஹ்லியை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த ஊடகம் இப்படி செய்துள்ளது என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *