விபத்தில் ஒருவர் பலி

களுத்துறை, பண்டாரகம தெல்கட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

வாத்துவ, தெல்துவ பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் வேனின் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment