விஜய்க்காக ராஜமௌலியை சந்தித்த சசிகுமார்

இயக்குநர் சசிகுமார் அடுத்ததாக விஜயை வைத்து வரலாற்றுப் படமொன்றை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகுமார் சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலியை சந்தித்திருந்தார்.

வரலாற்றுத் திரைப்படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் ராஜமௌலி என்பதால், சமீபத்தில் அவரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார்.

இருவரும் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமார், விஜயிடம் ஒரு வரலாற்று திரைப்படக்கதையை சொன்னபோது, அவர் மிகவும் ரசித்து நிச்சயம் பண்ணலாம் என சொல்லியிருக்கிறார்.

இதை சசிகுமாரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். எனவே, சசிகுமார் இயக்கத்தில் வரலாற்றுப் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் தற்போது ஏ.ஆர். முருகாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அட்லியுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், சசிகுமார் இயக்கத்தில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related posts

Leave a Comment